தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை அமெரிக்க நாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் கோயில்களில் வைக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த சிலைகளும் தொன்மையான பொருட்களும் திருடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி அந்த சிலைகளை மீட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது கடந்த 1966 ஆம் வருடத்தில் காணாமல் போன நடனமாடும் கிருஷ்ணரின் சிலை அமெரிக்க நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. தங்கச்சி மடம் ஏகாந்த ராமசாமி கோவிலில் […]
Tag: ராமேஸ்வரம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலுக்கு சென்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு விசைப்படைகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், அந்த […]
இந்தியாவின் பிரசித்தி பெற்ற புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பாம்பன் தீவில் தான் அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பாம்பன் பாலத்தை கடந்து தான் ராமேஸ்வரத்தை அடைய முடியும். பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும் பாம்பன் ரயில்வே தூக்கு பாலம் நூறு ஆண்டுகளை கடந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த பாலத்தை கடந்து செல்கிறவர்கள் கடல் அலையின் அழகின் அழகை கண்டு ரசித்து செல்வார்கள். இந்த பாலம் ராமநாதபுரத்தின் ஒரு அடையாளம் என்று சொல்லலாம். ராமேஸ்வரத்தில் […]
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ராமேஸ்வரத்தில் பழமையான ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்கள் புனித நீராக கருதப்படுகிறது. இந்த பகுதியில் 64 தீர்த்தங்கள் இருக்கிறது. இதில் அக்னி தீர்த்தம் பகுதியில் நீராடுவதற்காக இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இப்படிப்பட்ட புனித இடத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள கழிவு நீர் நேரடியாக கலப்பதோடு, சாக்கடைகள் மற்றும் குப்பைகள் போன்றவைகளும் […]
ராமேஸ்வரம் அருகே அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக தனுஷ்கோடி விளங்குகிறது. இந்த சூழலில் இன்று தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பல அடி தூரத்திற்கு கடல் அலை எழும்பி வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அரிச்சல் முனை பகுதிக்கு செல்ல பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வார இறுதி மற்றும் […]
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீன்பிடி விசைப்படகை இலங்கை நீதிமன்றம் அரசுடமையாக்க உத்தரவிட்டுள்ளது. சென்ற மார்ச் மாதம் 23ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு விசைப்படகில் ஆறு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்கள். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சில நாட்களுக்கு முன்பாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் படகை விடுதலை செய்யவில்லை. இந்நிலையில் கைது செய்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விசைப்படகின் உரிமையாளர் சென்ற ஐந்தாம் தேதி கிளிநொச்சி […]
இலங்கை நாட்டின் கிளிநொச்சி நீதிமன்றம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை அரசுடைமையாக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக சென்றனர். அப்போது எல்லை பகுதியை கடந்து மீன் பிடித்ததாக விசைப்படகுடன் சேர்த்து கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். எனவே, விசைப்படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. எனினும், உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், பல லட்சங்கள் மதிப்பு கொண்ட அந்த விசைபடகுகளை கிளிநொச்சி நீதிமன்றம் அரசுடைமைக்குவதாக […]
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21ம் தேதி 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். அவர்களை ஆகஸ்ட் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து 6 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 6 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் […]
ராமேஸ்வர கடல் பகுதி பாதுகாப்பாக இருக்கின்றதா? என இந்திய கடலோர காவல் படை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ராமேஸ்வரம் கடல் பகுதி பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து இந்திய கடலோர காவல் படையின் இயக்குனர் நேற்று விமான மூலம் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிக்கு வந்தார். அவர் விமானத்தில் இருந்தபடியே ராமேஸ்வரம் தனுஷ்கோடி, பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா, இந்திய கடல் எல்லை வரை பார்வையிட்டார். இதையடுத்து கடற்படை விமானத்தளத்தில் வந்திறங்கினார். அங்கிருந்து […]
முதுகுளத்தூர் அருகே உள்ள மீசல் காலனி கிராமத்தில் இந்திய விவசாய சங்க தாலுகா குழு சார்பாக 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அருகே இருக்கும் மீசல் காலனி கிராமத்தில் அகில இந்திய விவசாய சங்க தாலுக்கா குழு சார்பாக 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிற்சங்க தாலுகா செயலாளர் அங்குதன் தலைமை தாங்க மார்க்சிஸ்ட் விவசாய தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் கணேசன், […]
தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய 70 கிலோ கஞ்சாவை கடலோர போலீஸ்சார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கடலோர போலீசார் அங்கு சென்று பார்த்தார்கள். அதில் இரண்டு கிலோ பார்சல் என சுமார் 30 பார்சலுக்கு மேலாக மொத்தம் 70 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதை […]
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இன்று இந்த ரயில்வே வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியது. மதுரை ராமேஸ்வரம் இடையில் காலை மாலை என இருவேளை இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. முன்னதாக பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு […]
ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் விசைப்படகுகளில் சீன எஞ்சின் பொருத்தப்பட்டு இருப்பதால் நடவடிக்கை எடுக்குமாறு நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் மீன்பிடித் தொழில் தான் பிரதான தொழிலாக இருந்து வருகின்றது. இங்கே நாட்டுப்படகு, விசைப்படகு, பைபர் படகு உள்ளிட்டவை பாம்பன் பகுதியில் இயங்கி வருகின்றது. இந்நிலையில் விசைப்படகில் அதிக குதிரை திறன் கொண்ட சீன இன்ஜின்களை பொருத்த நடவடிக்கை எடுத்து வருவதால் அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு நாட்டுப்படகு […]
ராமேஸ்வரத்தில் கடல்நீரானது இன்று திடீரென்று 100மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கி இருக்கிறது. இதன் காரணமாக கடலிலுள்ள பவளப்பாறைகள் வெளியே தெரிகிறது. இதேபோல் சுவாமி சிலைகளும் தென்படுகிறது. அத்துடன் ராமேசுவரம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. அக்னி தீர்த்த கடற்கரையில் கடலுக்கு உள்ளேயிருந்த பழைய சுவாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளியே தெரிகிறது. ஆகவே கடல் நீர் உள்வாங்கி கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் காற்றின் வேகமும் அதிகரித்து கடல் […]
குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் வாங்கவும் பணம் இல்லாமல் தவித்து வருவதாக இலங்கையில் இருந்து அகதியாக வந்த பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை இல்லாத நிலையில் அனைத்து பொருட்களும் விலை சரமாரியாக உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் பஞ்சத்தின் காரணமாக இலங்கையில் இருந்து தப்பித்து தமிழகத்திற்கு அகதிகளாக வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் இருந்து நேற்று 5 குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 15 பேர் அகதிகளாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு படகு மூலம் வந்தனர். அப்போது யாழ்ப்பாணம் […]
நடப்பாண்டு தமிழகத்தில் 7அதிதீவிர புயல்கள் உருவாகி கன மழை பெய்து வெள்ளத்தில் மிதக்கும் என்ற ராமேஸ்வரம் கோவில் பஞ்சாங்கம் வாசிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இணை ஆணையர் பழனிகுமார் முன்னிலையில் கோவில் குருக்கள் உதயகுமார் மற்றும் ஆற்காடு சீதாராமய்யர் எழுதிய பஞ்சாங்கத்தை வாசித்தனர். அதில், வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் வரை 19 புயல் சின்னங்கள் உருவாகி அதில் ஏழு அதி தீவிர புயலாக வீசும். இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், […]
கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது மீனவர் ஒருவர் தவறி விழுந்து கடலில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் இருந்து 12 மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது மீனவர் முனியராஜ் திடீரென படகில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து அவரை தேடியுள்ளனர். ஆனால் வெகு நேரம் தேடியும் […]
ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் தொடர்பாக விவாதிக்க உள்ளன. மேலும் நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார் அமைச்சர்கள் பதில் அளித்து பேசினார். இராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி […]
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 29-ம் தேதி முதல் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 3 முறை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எல்லைத்தாண்டிய குற்றத்திற்காக இலங்கையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கும் […]
கோவிலுக்கு குடும்பத்துடன் வந்த பக்தரிடம் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான ராமேஸ்வரம் கோவிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது வெங்கடேஷ் கடற்கரையில் குடும்பத்தினரின் பைகள் மற்றும் உடமைகளுடன் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து வாலிபர் ஒருவர் உங்களுடைய பணம் கீழே விழுந்துள்ளதாக வெங்கடேஷிடம் […]
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 மீனவர்களையும் 3 விசைப்படகுகளையும் கைது செய்து ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிப்ரவரி 22ஆம் தேதி யாழ்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 14ஆம் தேதி வரை […]
வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை மற்றும் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, […]
கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்று வீசப்படும் நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல அதிகாரிகள் தடை வித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு பலத்த காற்று மற்றும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு மீன்துறை அதிகாரிகள் தடை வித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் […]
மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தட கடலில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தும், புனித […]
சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 91 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் திட்டக்குடி சந்திப்பு சாலையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரோஸ்லெட் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பையில் இருந்த சுமார் 91 மது பாட்டில்களை பறிமுதல் […]
நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகத்தை சேர்ந்த சுமார் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்த நிலையில் ஒரு விசைப்படகை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களா அல்லது […]
ராமேஸ்வரத்தில் சுமார் 100 கோடி செலவில் 108 அடி உயர அனுமன் சிலை அமைப்பதற்க்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ராமர் பாதம்பட்ட இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கடற்கரையில் சுமார் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று ராமேஸ்வரம் […]
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 2 விசைப்படகு மற்றும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 500க்கு அதிகமான விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் கச்சதீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துகொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்து 2 விசைப்படகுகளையும் பறிமுதல் […]
நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஹொகைன் போதைபொருள் கடத்தலில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த பேருந்தில் இருந்து இறங்கிய நபர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக அந்த நபரை வளைத்து பிடித்து […]
ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தை அம்மாவசையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு கடலில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் காரில் குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஜே.ஜே காரில் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் […]
14 நாட்களுக்கு பிறகு கரை திரும்பிய மீனவர்கள் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீனவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் நேற்று கரை திரும்பி உள்ளனர். இந்நிலையில் மீனவர்கள் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் தடையை மீறி புனித நீராடியுள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்கு தடை விதித்துள்ளனர். இருப்பினும் பக்தர்கள் தடையை மீறி அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி […]
20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த தூர்தர்சன் தொலைகாட்சி நிலையம் விடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள ராமர் பாதம் செல்லும் சாலையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் மற்றும் அனைந்திந்திய வானொலி நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த தொலைக்காட்சி நிலையத்தில் டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட மாநிலங்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை ராமநாதபுரம் மற்றும் இலங்கை வரையிலும் ஒலிபரப்பு செய்யப்படும். இந்நிலையில் தற்போது நவீன தொழில்நுட்பத்தால் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப் […]
விசாரணை நடத்தி கொண்டிருந்த 2 போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆத்திகாடு பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசித்து வரும் பெண் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பெண் ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளான ராமமூர்த்தி மற்றும் அருணாச்சலம் ஆகிய இருவரும் ஆத்திகாடுக்கு சென்று குணசேகரிடம் விசாரணை […]
ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 570 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான 6 விசைப்படகுகள் உடன் 43 […]
தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்ததை தொடர்ந்து இந்த விவகாரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் கையில் எடுத்துள்ளனர். கடந்த 18ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட படகுகளில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 43 தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இவர்கள் காங்கேசன் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்பி நாவஸ் கனி […]
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 42 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பததற்கான அனுமதி சீட்டை மீன்வளத் துறை அதிகாரியிடம் வாங்கிக் கொண்டு நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.. இந்த நிலையில் இன்று கரை திரும்பும் நிலையில் இருந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ரோந்து வந்த […]
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் கச்சத்தீவு கடல் பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். மேலும் ஒரு சில மீனவர்களின் வலைகளையும் அறுத்து […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் புதுரோடு பகுதியில் கோபி மற்றும் சிந்து தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தனது குழந்தையுடன் மதுரை மாவட்டத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பேருந்தில் பயணித்துள்ளனர் . அப்போது இந்த தம்பதிகள் பயண சீட்டு வாங்கினர். இதற்கான மீதி சில்லறை பிறகு தருவதாக நடத்துனர் கூறியுள்ளார். இதையடுத்து அரசு பேருந்து மண்டபப் பகுதி அடைந்தவுடன் தம்பதிகள் நடத்துனரிடம் சில்லறை பாக்கி திருப்பித் தரும்படி கேட்டு உள்ளனர். ஆனால் நடத்துனர் சில்லறையை தர மறுத்ததால் […]
கோவில் அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் ராமர் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதனையடுத்து தீப்பிடித்து […]
இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை தொடர்ந்து 15ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 13ஆம் தேதி நாகை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 23 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் திடீரென எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 23 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து அவர்களை யாழ்பாணம் […]
6 மாதத்திற்கு பிறகு ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கொரனோ பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அரசு தடை விதித்து இருந்துள்ளனர். இதனால் தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்தங்களில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று நவம்பர் […]
ராமேஸ்வரம் கோவிலில் 6 மாதத்திற்கு பின்னர் தீர்த்த கிணறுகளில் இன்று பக்தர்கள் புனித நீராட அரசு அனுமதி அளித்துள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேல் தீர்த்த கிணறுகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தீர்த்த கிணறுகளை நம்பி வாழுகின்ற 400-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் […]
சூறாவளியுடன் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளியுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் மீன்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைப்படகு மற்றும் […]
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பணிகள் சிறப்பாக முடிய இளைஞர் ஒருவர் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு ஓட்ட பயணம் மேற்கொண்டுள்ளார். ஹரியானா மாநிலத்தில் நரேந்திரசிங் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார் மூலம் ராமேஸ்வரம் வந்த நரேந்திரசிங் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் சிறப்பாக கட்டி முடிக்க வேண்டும் என்றும் உலகத்தின் நன்மைக்காகவும் ராமேஸ்வரம் கோவிலில் இருந்து அயோத்தி வரை ஓட்ட பயணம் மேற்கொள்வதாக கூறியுள்ளார். அதன்படி நேற்று காலை ராமேஸ்வரம் கோவிலின் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வெள்ளி,சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வருகின்ற 6 ஆம் தேதி மகாலய அமாவாசை வருகின்றது. அம்மாவாசை அன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் கூடுவார்கள் என்பதாலும், கோவிலில் சாமி தரிசனம் செய்ய கூட்டம் அதிகமாக வருவதாலும் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்படக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை […]
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதமர்தனியம்மன் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு, அதன்பிறகு தீர்த்த கிணறுகளில் குறித்து சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக தீர்த்த கிணறு தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை. பிற நாட்களில் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை முதல் அக்டோபர் 6ஆம் […]
ராமேஸ்வரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ராமேஷ்வரம் மாவட்டம் அங்காள ஈஸ்வரி கோவில் பகுதியில் உள்ள வில்லாயுதம் என்பவர் திமுகவில் மீனவர் அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றதற்காக ராமநாதபுரம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]