நியூசிலாந்தில் இருக்கும் கெர்மடெக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் இருக்கும் கெர்மடெக் தீவுகளில் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டது. தெற்கு பசிபிக் கடலில் இருக்கும் இத்தீவில் உண்டான நிலநடுக்கம், சுமார் 6.4 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருக்கிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்திற்கு பின், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: ரிக்டரில் 6.4 ஆக பதிவு
ஈரானின் தெற்கு பகுதியில் தொடர்ந்து இரண்டு முறை மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் தெற்கு பகுதியில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியிருப்பதாக ஐரோப்பிய மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையமானது தகவல் தெரிவித்திருக்கிறது. ஹோர்மோஸ்கன் என்னும் மாகாணத்திலிருக்கும் பந்தர் அப்பாஸ் என்ற துறைமுகப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், துபாய் வளைகுடா பகுதிகளிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு, தெற்கு பகுதிகளிலும் அதற்கான அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
தென் அமெரிக்க நாடுகளில் உள்ள ஒரு நகரில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள ஓவல்லே நகரில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 7 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. […]