கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கமானது காலை 7.45 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும் புவியியல் ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
Tag: ரிக்டர் அளவுகோல்
அந்தமான் நிக்கோபார் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பகுதியில் இன்று மாலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது. கேம்பல் விரிகுடாவில் இருந்து வடகிழக்கே 63 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது .
இந்தோனேஷியாவில் உள்ள மாலுக்கு மாகாணத்தில் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் மாலுக்கு மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அதிகாலை 4:25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 131 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்ததாகவும், இந்நிலநடுக்கத்தால் சுனாமி போன்ற பேராபத்து ஏற்படும் அபாயம் […]
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகின்றது. அந்த வகையில் இன்று தெலுங்கானாவின் கரீம் நகர் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கரீம்நகர் பகுதியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 என்ற அளவில்பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.