Categories
மாநில செய்திகள்

ரெம்டெசிவர் மருந்து… இன்று முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகம்…!!!

ரெம்டெசிவர் மருந்து இன்று முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து அரசு மருத்துவமனைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆன்லைனில் ரெம்டெசிவர் மருந்துக்கு முன்பதிவு செய்த தனியார் […]

Categories
மாநில செய்திகள்

நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை மாற்றம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சேலத்தில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து… உரிய ஆவணத்துடன் பெறலாம்…!!

சேலத்தில் அரசு மருத்துவமனையில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து உபயோகத்திற்கு வந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து செலுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் உபயோகத்திற்கு இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய மருத்துவ ஆவணத்துடன் வந்து மருந்தினை […]

Categories
மாநில செய்திகள்

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால்…. கடுமையான நடவடிக்கை – சுகாதாரத்துறை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்படாது…. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்….!!!

புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் 3 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா 2-ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையிலான உயர் கூட்டம் நடைபெற்றது. மேலும் புதுச்சேரியில் தொற்று அச்சுறுத்தலை கட்டுப்படுத்த வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை 3 நாட்களுக்கு முழு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. ரெம்டெசிவர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவில் திடீர் தடை… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு […]

Categories

Tech |