நாடாளுமன்ற கூட்டத்தில் டேக் ஹோம் ரேஷன் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில் நமது இந்தியாவில் டேக் ஹோம் ரேஷன் திட்டத்தின் கீழ் தானியங்கள் வழங்கப்பட இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிரித் இராணி கூறியதாவது, ” இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மானிய விலையில் தானியங்கள், திணை ஆகியவற்றை அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்நிலையில் […]
Tag: ரேஷன்
நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகள் வாயிலாக இலவச ரேஷன் பெறுவதற்கான வசதி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு UIDAI வாயிலாக பெரிய தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே இதன் விதிகளை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம். UIDAI இது தொடர்பான தகவல் அளித்தபோது, இனிமேல் நீங்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ஆதார் வாயிலாக ரேஷன் பொருட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UIDAI-ன் டுவிட் வாயிலாக இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் இனிமேல் […]
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி இருக்கிறது. அதாவது, டீலரிடம் இருந்து பெறப்பட்ட ரேஷன் பற்றிய தேவையான தகவல்கள் அரசாங்கத்திடமிருந்து வந்துள்ளது. இதன் பலன்களானது ஏப்ரல் 2023 ஆம் வருடம் முதல் நாட்டின் கோடிக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இப்போது ஏற்பட்டுள்ள இம்மாற்றங்களுக்குப் பின், சுமார் 60 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் நல்ல மற்றும் சத்தான ரேஷன் குறித்து சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. இதுகுறித்து NFSAல் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஏப்ரல் 1, 2023 முதல் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த மாதத்திற்கான ரேஷன் விநியோகம் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது. ஆனால் பல ஊடகங்கள் தெரிவித்த செய்திகளின்படி அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்திய உணவுக் கழகம் தரப்பிலிருந்து இன்னும் அரிசி விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ரேஷன் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோதுமை, சர்க்கரை, உப்பு உள்ளிட்டவை மட்டுமே பெரும்பாலான ரேஷன் ஒதுக்கிட்டு கடைகளுக்கு சென்றடைந்தது. ஆனால் அரிசி இன்னும் வரவில்லை. விரைவில் அரிசி வந்து சேரும் என்று அதிகாரிகள் […]
ரேஷன் அட்டைதாரர்களுக்கு புது விதிமுறைகளை மத்திய அரசானது வெளியிட்டு இருக்கிறது. அரசின் இலவச ரேஷன் வசதியை தகுதியற்ற பல பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் அடிப்படையில், அரசு புது விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அத்துடன் புது வழிமுறைகளை கடைபிடிக்காத பயனர்களின் ரேஷன்அரட்டை ரத்துசெய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புது வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், இலவச ரேஷன் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளும் அனைவரும் அவர்களின் வெரிபிகேஷனை மேற்கொள்ள வேண்டும். இதற்கென 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. வெரிபிகேஷனில் […]
நாடும் முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசால் இலவச ரேஷன் மற்றும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலவச ரேஷன் வாங்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை UIDAI அறிவித்துள்ளது. அதன் படி UIDAI தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் ஆதார் அட்டையை புதுப்பிப்பது மூலமாக நாடும் முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் இலவசம் ரேஷன் வாங்கலாம். ஏற்கனவே பல மாநிலங்களில் உள்ள ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ மூலமாக மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் […]
ரேஷன் கடை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகள் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, செப்டம்பர் மாதம் முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் டன் கணக்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பெயரில் துணை ஆணையர் தங்கதுரை தலைமையிலான தனிப்படை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள குடோனில் காவலர்கள் சோதனை நடத்தியபோது குடோனில் 20க்கும் மேற்பட்டோர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருப்பது தெரிய […]
நாடு முழுவதும் கொரோனா கால கட்டத்தின் போது மத்திய அரசு சார்பில் பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. அதாவது ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதந்தோறும் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இன்று வரை மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பாக […]
ரேஷன் கடைகளில் இனி பொதுமக்களுக்கு பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படுவதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர் சக்ரபானி அளித்த பதிலில் கூறியதாவது, அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இடத்திற்கு அனுப்பப்படும். மேலும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும், இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. இதனை ஏழை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வேலைக்கு செல்லும் இடங்களில் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் சிக்கலை கருத்தில் கொண்டு மத்திய அரசு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி புலம்பெயர் தொழிலாளி […]
தமிழ் நாட்டில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. அதில் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது இருப்பிடச் சான்றுக்கான முக்கிய ஆவணமாக ரேஷன்கார்டு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவற்றின் காரணமாக புதிய ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் இருந்து வருகிறது. இந்நிலையில் பயனாளிகளுக்கு […]
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏராளமானோருக்கு கைரேகை பதிவாகாத காரணத்தினால் பொருட்கள் வழங்க முடியாது என ரேஷன் ஊழியர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆதாரில் கைரேகை பதிவு செய்ய சேவை மையங்களுக்கு படையெடுக்கின்றன. சிலசமயங்களில் அங்கும் கைரேகை பதிவாகாத காரணத்தினால் உணவுப் பொருட்கள் வழங்கல் அலுவலரிடம் மனு செய்து பெற்று வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் அலுவலகம் செல்லும் போதும் உடனடியாக வழங்காமல் அலைய […]
தமிழக மக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக தற்போது ரேஷன்கார்டு மாறிவிட்டது. இதன் மூலமாக அரசிடமிருந்து இலவச ரேஷன் பொருட்கள் மக்களுக்கு கிடைக்கிறது. தற்போது இந்த செயல்முறை டிஜிட்டல் முறையில் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரே நாடு ,ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்தது மத்திய அரசு. அதன்படி இந்த திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்முறை படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 650 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப பொருட்களை மலிவு விலையில் பெற்றுவருகின்றார்கள். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க ஸ்டாலின் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணநிதி 4 ஆயிரம் வழங்கப்படும். மேலும் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை […]
உணவு பொருட்களை தரமானதாகவும், விரைவாகவும் வழங்குதல், காலிப்பணியிடம் போன்ற பல்வேறு வழிமுறைகளை உணவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உணவுப் பொருட்களை மலிவான விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்டகார்டுதாரர்கள் பயன்பாட்டில் இருக்கின்றனர். தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக முதியவர்கள் கைது செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து இயந்திரங்கள் பழுது, இணைய இணைப்பு சரிவர கிடைக்காததால் சர்வர் பிரச்சனை போன்ற […]
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களை வாங்கியதாக எஸ்எம்எஸ் வருவது, பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்வதில் சிக்கல், வயதானவர்களுக்கு கைரேகை சரியாக வரவில்லை என அவர்களுக்கு பொருட்களை வழங்க மறுப்பது என பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அரசின் கவனத்திற்கு தொடர்ந்து சென்ற வண்ணம் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகளையும் பொருத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு […]
தமிழகத்தில் கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி பறிமுதல் செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 20 கிலோ முதல் 50 கிலோ வரை குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது. இவற்றை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சில கும்பல்கள் கடத்தி வருகிறது. மேலும் காவல்துறை மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை […]
ரேஷன் கடைகளில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளின் மூலமாக மலிவான விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டுள்ளன. இதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக ரேஷன் பொருட்களை தகுதியான நபர்கள் பெரும் வகையில் “ஒரே நாடு ஒரே ரேஷன்” எனும் திட்டம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் […]
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு முதலான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். ஆகவே அனைத்து ஏழை, எளிய மக்களும் சமமாக மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வாங்கி பயன் பெறவேண்டும் என்ற நோக்கில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்தல் என்ற திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கைரேகை வைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனால் இணைய இணைப்பு/ தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு […]
சென்ற ஆண்டின் மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கிக் கிடந்த மக்களுக்குப் பொருளாதார ரீதியாக ஆதரவு வழங்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவு அதாவது கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு ரேஷன் கார்டு வைத்துள்ள 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு பொது […]
நெல்லையில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். நெல்லை மாவட்டம் பேட்டையில் வரதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனான வினோத் குமாரை காவல் துறையினர்கள் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இந்நிலையில் இவர் மீது குடிமைப் பொருள் வழங்கும் குற்ற புலனாய்வு பிரிவிற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல் உள்ளிட்ட பலவிதமான வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்களின் அமைதியான சூழ்நிலைக்கு […]
தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் கார்டும் ஒன்று போல் இருந்தாலும், அதன் குறியீட்டு மூலம் தான் எந்த வகை அட்டை என்பதை அறிய முடியும். PHH (Priority house hold) – முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் 8 கிலோ அரிசியை மாதத்திற்கு பெற்று கொள்ளலாம். இந்த வகையில் மட்டும் […]
தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் குறைவான தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும், தனிமனித இடைவெளியை ஒழுங்குபடுத்தவும், மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரேஷன் கடைகளில் மக்களுக்கு வினியோகிக்கும் பொருட்களை வாங்க டோக்கன் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு இன்று […]
கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அவர்களை மீட்டெடுக்கும் வகையில் மத்திய மாநில அரசாங்கங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. குடும்ப அட்டை வாங்க புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். புதிய […]
சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். தனது உரையில் முதல்வர் கூறியதாவது, சென்னையில் அதிகமான குறுகலான தெருக்கள் உள்ளன. சுமார் 87 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் தொற்று எளிதாக பரவுகிறது என தெரிவித்துள்ளார். சென்னையில் 17,500 படுக்கை […]
சென்னை பெருநகர மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களில் வெறும் 19ம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதில், சென்னை மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான செங்கல்பட்டு, மறைமலை நகர், நந்திவரம், கூடுவாஞ்சேரி […]
ஒரு நபர், இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவை தமிழகஅரசு குறைத்து அறிவித்து உள்ளது என தகவல் வெளியானது. தமிழகத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்க 4 வகையான ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்படி, பச்சைநிற […]
டெல்லியில் ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் 421 அரசுப் பள்ளிகளில் ரேஷன் விநியோகிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நபருக்கும் 4 கிலோ கோதுமை மற்றும் ஒரு கிலோ அரிசி கிடைக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதுபோன்று 10 லட்சம் பேருக்கு ரேஷன் வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனவும், தேவைப்பட்டால் மையத்திலிருந்து அதிக உணவு தானியங்களை எடுத்துக்கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தினசரி தொழிலாளர்கள் மற்றும் […]
தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் 29 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையை சேர்ந்தவர் இறந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் இரண்டு நாள் கழித்து வீடு திரும்ப இருக்கின்றார். இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு […]