தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]
Tag: ரேஷன் கடை ஊழியர்கள்
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் அழிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ரேஷன் கடை ஊழியர்கள் அரசு வழங்கும் சிறப்பு திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கும் போது கூடுதல் நேரம் பணியாற்றுவது போன்ற முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அரசின் நிவாரண உதவிகளும் இதன் மூலமே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணி சுமையை ஈடு செய்வதற்காக ஒரு ரேஷன் அட்டைக்கு […]
தமிழக கூட்டுறவுத்துறை நியாய விலை கடை ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உணவு கடத்தல் குற்றப்புலனாய்வு காவல் துறையினரால் சோதனை நடத்தப்பட்டு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதோடு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி அனைத்து மண்டல இணை பதிவாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது பொது […]
தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காதி பொருள்கள்,அரசு உப்பு மற்றும் பனைவெல்லம் விற்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சில நிபதனைகள் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும்,கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் […]
தமிழகத்தில் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அனைத்து ரேஷன் கடை பொருட்களும் மலிவான முறையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை ரேஷன் கடை ஊழியர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். அதாவது அனைத்து பொதுமக்களுக்கும் ஒரே மாதிரியாக பொருள்களை விநியோகம் செய்வது என அனைத்து தொடர்பான பணிகளையும் ரேஷன் கடை ஊழியர்களின் முறையாக கவனித்து செய்து வருகிறார்கள்.இதன் காரணமாக ரேஷன் கடை ஊழியர்களின் பணியை பாராட்டி ஒவ்வொரு வருடமும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரொக்க […]
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படுவது போல நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி கட்டாயம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் ஊதிய உயர்வும் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல அகவிலைப்படி உயர்வும் ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என கோரிக்கை நீண்ட நாட்களாக விடுக்கப்பட்டு வருகிறது. […]
தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு 17 சதவீத அகவிலைப்படி வழங்குவது தொடர்பாக சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதில் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், சம்பள உயர்வு போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதன்படி, இவரது ஆட்சிக்கு வந்தவுடன், 2022 ஆம் ஆண்டு […]
தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது அமைச்சர் ஆர்.சக்கரபாணி, “மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறந்த நியாய விலை கடை எடையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். நியாய விலை கடை விற்பனையாளர்கள் பொது விநியோகத் திட்டம் சீராக செயல்படுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். விற்பனையாளர்களின் ஈடுபாட்டையும் செயல்திறனையும் மேம்படுத்தும் வகையில் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கப்படும். பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையில் பணியாற்றும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு ஒவ்வொரு வருடமும் […]
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது வினியோகத்தின் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயிலின் போன்றவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் ரேஷன் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு மட்டும் வெளியான நிலையில் அகவிலைப்படி குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன்காரணமாக ரேஷன் […]
நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு சம்பள சீட்டு வழங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நியாயவிலை கடையில் அரிசி, பருப்பு, மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருள்கள் குறிப்பிட்ட எடையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்பிறகு பாமாயில், சோப்பு போன்றவைகள் தேவைக்கேற்ப கட்டுப்பாடற்ற பிரிவில் வழங்கப்படுகிறது. இந்தப் பொருள்களை பொதுமக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். ஆனால் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் சிலர் இந்த பொருட்களை […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அகவிலைப்படி 01/01/2022 முதல் 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை, கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் வழங்க வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக கூட்டுறவு சங்கம் மூலமாக நடத்தப்பட்டு […]
தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள் அகவிலைப்படி(DA) 01/01/2022 முதல் 17 சதவீதத்தில் இருந்து 31% ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதனையடுத்து ரேஷன் கடையிலுள்ள ஊழியர்களுக்கும் DA உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதனிடையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “புதிய […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் செயலாளர் அருணா உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.” கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இதில் நியாய விலை கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அதன்பின்னர் அகவிலைப்படி […]
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 01/01/2022 முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து வெளியிடப்பட்ட பார்வை(1)-ல் காணும் அரசாணையில் அகவிலைப்படி என்ற தலைப்பின் கீழ் “புதிய அடிப்படை ஊதியத்தில் 14 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர் தொடர்ந்து வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்து எவ்வித ஆணையும் […]
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறி கடைகள், மருந்தகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இத்தகைய கூட்டுறவு அங்காடிகளில் மளிகை பொருட்கள், சோப்பு மற்றும் எண்ணெய் வகைகள் என்று பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் அதனை விரும்பி வாங்குவது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை ஆகாத மளிகை பொருட்களை ஊழியர்கள் வாங்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதாக […]
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அரசு நிறுத்தி வைத்தது. இதையடுத்து தற்போது நடைபெற்ற சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் உயர்வு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். அதன்படி கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் தற்போது பெற்று வந்த […]
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலமாக அரசு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகின்றது. அதனால் ரேஷன் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதால் ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பரிசு தொகுப்பு வினியோகிக்கும் ரேஷன் ஊழியர்களுக்கு கார்டுக்கு 50 காசு வீதம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு உரிய அறிவுரை வழங்கி ஊக்கத்தொகை வழங்கப்படுவதை கண்காணிக்குமாறு […]
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும், அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா காலத்தில் நியாயவிலைக் கடைகளில் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. மாஸ்க் வழங்கும் பணியில் கூடுதலாக ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக கார்டு ஒன்றுக்கு தலா 50 காசுகள் என்ற வீதம் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மாதந்தோறும் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி […]
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். அரசின் பணியாளர்கள் குடும்ப காரணங்களுக்காக தேவைப்படும் நிதி உதவியை மாதாந்திர தவணை முறையில் அரசு வழங்கிவருகிறது. அதன்படிரேஷன் கடை ஊழியர்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினை செய்வதால் இவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி வருகிறது. அதன்படி சமீபத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கான புதிய அறிவிப்பு […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் விடுமுறை நாட்களில் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது வரையிலும் 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணியாற்றும் பணியாளர்களை இடம் மாற்றவும் தமிழக அரசு […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு […]
தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பதிவேற்றதையடுத்து தனது நல்லாட்சி பணியை சிறப்பாக தொடங்கினார். இந்நிலையில் தமிழக மக்கள் கொரோனாவால் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதன் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் முதல் தவணையாக ரூ.2000 இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததையடுத்து […]
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களுடைய கோரிக்கை அரசாங்கத்தால் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்நிலையில் அவர்களுடைய நலன் காக்கும் வகையில் தமிழக அரசு ஆலோசனை நடத்தி அதில் ரேஷன் உயர்வு சம்பள உயர்வு பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் […]
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்கா விட்டால் பொங்கல் பரிசு வழங்காமல் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி சேலை யுடன் பொங்கல் பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த வருடம் கூடுதல் பொங்கல் பரிசுத் தொகையாக 2500 ரூபாய் வழங்க […]