Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாதி, மதம் பார்த்து வைரஸ் பரவுவதில்லை – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கொரோனா  பரவும் விவகாரத்தில் மதம் சார்ந்த தவறான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். கோவை குனியமுத்தூரில் உள்ள நியாய விலைக்கடைகளில்  ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நியாய விலை பொருட்கள் வழங்குவதை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கொரோனா தொற்று உள்ளவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவே அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |