நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்த கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் ரிப்பன் வளாக கட்டிடத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கூறினார். இதற்கு தொடர்ந்து பதில் […]
Tag: ரோப் கார்..
அமெரிக்க நாட்டின் பூங்காவில் ரோப் காரிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் டென்னிசி என்னும் மாகாணத்தில் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு பூங்காவில் ரோப் கார் வசதி இருக்கிறது. அதில் ஏறி பயணிகள் பூங்காவை சுற்றி பார்க்கலாம். இந்நிலையில் நேற்று அந்த ரோப் காரில் பயணித்த இளம் பெண் ஒருவர் 40 அடி உயரத்தில் கார் சென்ற போது திடீரென்று பாதுகாப்பு கம்பிகளிலிருந்து விடுபட்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதனால் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை மற்றும் வின்ச் போன்றவை இயக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் மலையடிவாரத்திலிருந்து வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் மலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்து வர வசதியாக கோவில் நிர்வாகம் ரோப் கார் மற்றும் வின்ச் சேவையை இயக்கி வருகிறது. இதில் ரோப் காரில் இயற்கை அழகை ரசித்தபடி மற்றும் விரைவாக போகலாம் என்பதால் பெரும்பாலானவர்களின் […]
அமெரிக்காவில் உட்டா நகரில் தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா இயங்கி வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இந்த பூங்காவில் உள்ள ரோப் காரில் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் 167 பயணிகள் நடுவழியில் அந்தரத்தில் தொங்கி தவித்தனர். இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மீட்பு குழு அவர்களை பத்திரமாக மீட்டனர். இதனை ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
பழனியில் ரோப்கார் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம். பழனி தண்டாயுதபாணி கோயிலில் நாளை ரோப்கார் சேவை இயங்காது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார், மின்இழுவை ரெயில் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இவற்றில் பக்தர்கள் பெரிதும் விரும்புவது ரோப்கார் சேவையே. இந்த ரோப்கார் நிலையத்தில் தினசரி ஒரு மணி நேரம் மற்றும் மாத, ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்களுக்கு காணிக்கையாக வந்த 2 ஆயிரம் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.எல்.ஏ செந்தில்குமார் அவர்கள் பொதுமக்களின் வசதிக்காக இரண்டு வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கியமான பகுதிகள் கொடைக்கானலும், பழனி மலையும் விளங்குகிறது. இந்நிலையில் குடமுழுக்கு பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற திட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விசாகன், எம்.எல்.ஏ செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து அந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. செந்தில்குமார் அவர்கள் கூறும்போது பழனி மலை, கொடைக்கானல் பொருத்தவரை பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் காணப்படுவார்கள். இதனால் […]