லக்னோ அருகே தில்குஷாவில் கனமழை காரணமாக கட்டட சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சில தொழிலாளர்கள் தில்குஷா பகுதியில் உள்ள ராணுவ வளாகத்திற்கு வெளியே குடிசைகளில் வசித்து வந்தனர். இரவில் பெய்த கனமழை காரணமாக ராணுவ வளாகத்தின் எல்லைச் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களுக்கு 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு F2 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Tag: லக்னோ
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 25-வது நாளான இன்று 31 வது லீக் ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் மோதி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக அனுஜ் ராவத் டு பிளேசிஸ் களமிறங்கினார்கள். அனுஜ் ராவத் 4 ரன்களில் வெளியேற அடுத்த பந்திலே விராட் கோலி […]
ஐபிஎல் போட்டியில் 15வது சீசனின், 12வது சூப்பர் லீக் போட்டியில் நேற்று டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணியும், சன்ரைஸ் அணியும் முதன்முறையாக மோதிக் கொண்டனர். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து லக்னோ அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 1 ரன்கள் எடுத்த நிலையில் வாசிங்டன் சுந்தர் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். இதைத்தொடர்ந்து லீவிசும் ஒரே ரன்னில் மீண்டும் […]
15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக என்ற தகவல் வெளியாகியுள்ளது.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7 , 8 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஐபிஎல் ஏலம் நடைபெற இருப்பதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .மேலும் இந்த மெகா ஏலம் 2 நாட்கள் நடைபெறுகிறது . […]
15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம் 2-வது வாரம் நடக்க இருப்பதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பெற்றுள்ளன .இதனிடையே ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது .இந்நிலையில் அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம் 2-வது வாரம் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]
லக்னோவில் திருமணமான பெண்ணை வீட்டில் வேலை பார்த்து வந்த தச்சன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . லக்னோவை சேர்ந்த ருச்சி அகர்வால் என்ற பெண் கணவருடன் வசித்து வந்துள்ளார்.அவரின் வீட்டில் குல்பம் என்ற தச்சன் 2 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ருச்சி வீட்டில் தனியாக இருந்த போது திடீரென்று தட்சன் ருச்சியிடம் வந்து தான் சொந்தமாக தொழில் தொடங்க போவதாகவும் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். […]
ஷார்ஜாவிலிருந்து லக்னோவிற்கு பயணித்த இந்திய விமானம் ஒன்று பயணி ஒருவருக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டதால் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. இண்டிகோ ஏர்லைன்ஸிற்கு உரிய 6e1412 என்ற பயணிகள் விமானம் சார்ஜாவில் இருந்து ஈரான் வழியாக லக்னோவிற்கு சென்று கொண்டிருந்தபோது உடனடியாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. அதாவது இந்த விமானத்தில் இருந்த Habibur Rahmaan என்ற 67 வயதுடைய பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானி உடனடியாக பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளார். எனவே கராச்சி […]
உத்திரபிரதேசத்தில் மூதாட்டி ஒருவர் தினசரி 5 கிலோமீட்டர் தூரம் வரை தன் சைக்கிளில் சென்று பால் விற்பனை செய்துவருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் சென்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷீலா தேவி. மூதாட்டியான இவர் கடந்த 22 வருடங்களாக அருகிலுள்ள கிராமங்களுக்கு தன் சைக்கிளில் 5 கிலோமீட்டர் தூரம் வரை சென்று பால் விற்பனை செய்கிறார். இவருக்கு திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே கணவன் இறந்துள்ளார். இதனால் ஷீலா மன வேதனையடைந்தாலும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தமாக தொழில் […]
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் சென்ற கோ ஏர் விமானத்தில் உபி.யைச் சேர்ந்த ஆயுஷி என்ற சிறுமி தனது தந்தையுடன் பயணித்தார். விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் ஆயுஷிக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட ஆரம்பித்தது. பின்னர் விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அச்சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ரத்தத்தில் ஒருவருக்கு சராசரியாக 12 கிராமுக்கும் அதிகமாக ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். […]
கான்கீரிட் லாரியின் கலவை தொட்டியில் ஒளிந்து கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 18 பேர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருந்ததாக அம்மாவட்ட டி.எஸ்.பி உமகாந்த் சவுத்ரி கூறியுள்ளார். தற்போது லாரி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், லாரியின் கலவையில் தொடரில் ஒளிந்திருந்தவர்கள் மற்றும் டிரைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனவால் 11,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வீரியமாக பரவ […]
உத்தரப்பிரதேசத்தில் சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்பட பேனர்களை அகற்ற அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. இதுபோல் உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் அறிவுறுத்தலின் இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களின் புகைப்படங்களையும், முகவரிகளையும் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ, ஹஸ்ரத்கஞ் போன்ற ஊர்களின் முக்கிய […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் திறந்தவெளியில் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 28 பேருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு கொரோனா பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த சுற்றைக்கை அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் மீன்கள் , பாதி வேகவைத்த இறைச்சிகள் , திறந்தவெளி இறைச்சி கடை […]