முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 18.37 லட்சம் கண்டறியப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கில் சென்னை, மதுரை, சேலம், தேனி உட்பட சொந்தமான 16 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் அதிரடிசோதனை நடத்தியது. இந்நிலையில் இந்த அதிரடி சோதனையில் 1,872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.. மேலும் 13 இடங்களில் நடத்தப்பட்ட […]
Tag: லஞ்சஒழிப்புத்துறை
கோவை பாலக்காடு சாலை சுகுணாபுரத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.பி.வேலுமணி வசித்து வருகிறார். இவர் 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சராகவும், 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 60 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அந்த […]
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முறைகேடாக பெருமளவில் கிரிப்டோ கரன்சியை பணம் சேர்த்துள்ளதாக முதல் அறிக்கையில் தகவல் வெளியானது. எனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக முன்னாள் […]
பைபர் ஆப்டிக்ஸ் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்று ஆர்.எஸ்.பாரதி சென்னை உயநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது லஞ்சஒழிப்பு துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனாகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய […]