முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ரூபாய் 200 கோடி ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் அவரது சொந்த கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்து சேர்த்த்துள்ளதாக புகார்அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராம மக்கள் ஆவணங்களுடன் கையெழுத்திட்டு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. முறையாக விசாரணை […]
Tag: லஞ்ச ஒழிப்புத்துறை
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கி 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணை: இதை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் […]
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கி 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி […]
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கனவே இதேபோன்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை நான் எதிர்கொண்டு இருக்கின்றேன்.இப்போது திருப்பவும் இரண்டாவது முறையா சோதனை நடத்தினார்கள். இப்ப வெளியே வரும்போது தான் தொலைக்காட்சியில் பார்த்தேன். கிட்டத்தட்ட 120 ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக சொல்லப்பட்டது. என்னிடம் அவர்கள் என்னவெல்லாம் எடுத்துச் சென்றார்கள் என்பதற்கான அறிக்கை நகல் கொடுத்து இருக்காங்க. எதுவுமே கைப்பற்ற முடியாமல் கடைசியில் என்கிட்ட இருக்கக்கூடிய மொபைல் போன் மட்டும் […]
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வந்த சோதனையில் 32 லட்சம் பணம், 1028 கிராம் தங்கம், 1948 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 10 கார்கள் முக்கியமான 315 […]
எஸ்.பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதில் 316 ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எல்இடி பல்ப் வாங்கியதில் 500 கோடி ஊழல் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், இன்று காலையிலிருந்து தொடர்ந்து எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வந்தது.. இந்நிலையில் காலை 7 மணி அளவில் தொடங்கிய அதிரடி சோதனை சுமார் 11:30 மணி வரை […]
தமிழகத்தில் இன்று காலை அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இல்லங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சி காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு விதிமுறைகளை மீறி சான்றிதழ் வழங்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரில் திரு ஐசரி கணேஷ் அவர்களின் பெயரும் அடிபட்ட நிலையில் தற்போது அவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகின்றது. வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு லஞ்சம் கொடுத்து ESSENTIALITY சான்றிதழ் வாங்கப்பட்டதாக […]
எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக தற்போது தகவல் வெளியே வர தொடங்கி இருக்கின்றது. தமிழகம் முழுவதும் உள்ள தெருவிளக்குகள் led விளக்குகளாக மாற்றக்கூடிய திட்டமானது கடந்த அதிமுக ஆட்சியில் 2015 – 18 ஆம் ஆண்டில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டது. அதில் கொள்முதல் செய்யப்பட்ட பல்புகள் உடைய விலை என்பது சந்தை விலையை விட பல மடங்கிற்கு கூடுதல் விலைக்கு வாங்கி இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. தமிழக முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கிராமங்களுக்கும் இந்த தெரு […]
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பாக பதிவாகியுள்ள FIRஇல் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிக்கு கொடுக்கக்கூடிய ஒரு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு என புகார். மெடிக்கல் காலேஜ் தொடங்குவதற்கு உண்டான எல்லாவிதமான கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். அது இல்லாம அனுமதி கொடுக்கக் கூடாது […]
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையுடன் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தங்கமணிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை சரி பார்த்து வருகின்றன. திருச்செங்கோட்டில் உள்ள தங்கமணி வீட்டில் வருவாய், பொதுத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சொத்து ஆவணங்களை சரிபார்த்தனர். இடத்தின் மதிப்பு, எவ்வளவு இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது, சொந்த […]
திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகள், ஓட்டல் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் அமைச்சராக இருந்தபோது தனது குடும்பத்தினரின் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக புகார் எழுப்பப்பட்டது. புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக 58 கோடியே 44 […]
திருவாரூரில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் மன்னார்குடியில் உள்ள காமராஜர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதை எடுத்து காமராஜ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று […]
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவருக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் நேற்று மீண்டும் எஸ். பி வேலுமணியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். வீடு அலுவலகம் உட்பட எஸ்.பி வேலுமணி சொந்தமான 59 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி உள்ளிட்ட பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. […]
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு மற்றும் அவருடைய பினாமியின் பெயரில் இருக்கும் சொத்து மதிப்பு என அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உறவினரான சேலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு சொந்தமான ஏ.வி.ஆர் சொர்ண மஹாலில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் […]
பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த ஊழலை மறைக்கவே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்ததாக கேபி அன்பழகன் கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் உயர் பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சுமாராக 16 மணி நேரம் நடந்த இந்த சோதனை இரவில் முடிவுற்றது. அதன் பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த கே.பி அன்பழகன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார், அதில் அவர் கூறியதாவது, “ஆளும் திமுக […]
முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன். இவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை கேபி அன்பழகனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சுமாராக 57 ஒழிப்பு துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .குறிப்பாக தர்மபுரி தெலுங்கானா ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு […]
அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் கடந்த 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 69 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தங்கமணி மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சோதனை செய்து வந்தனர். இதில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் ஊழல் தொடர்பான ஆவணங்களை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தங்கமணிக்கு தொடர்பான […]
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 52 கல்லூரிகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இதில் 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் 52 கல்லூரி முதல்வர்கள் விசாரணைக்கு, நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பியுள்ளது.
என்னுடைய வீட்டில் சோதனை செய்தபோது பணமோ ஆவணமோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களான எம்எஸ் பாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி ஆகியோரின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வந்தனர். இதையடுத்து அதிமுக கட்சியில் அடுத்ததாக யார் சிக்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கிக்கொண்டார். அவரது வீட்டில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் […]
ரஷ்யாவில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் ஆடம்பர மாளிகைக்குள் அதிரடியாக சோதனை நடத்திய போது அங்கிருந்த சில பொருள்கள் மற்றும் கழிவறை ஆகியவை தங்கத்தால் ஆனது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 6 காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரி கர்னல் அலெக்ஸி சபோனோவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்திய மதிப்பில் ரூ.1.9 […]
சோதனைசாவட்டியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் பரிம்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கட்டுக்கட்டாக பணம் மட்டுமல்லாமல் காய்கறிகள் உட்பட லஞ்சமாக பெறப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் அமைந்துள்ள […]
நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர். கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பத்திர பதிவிறக்கு அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்று வருவதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நேற்று இரவு நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் […]
வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாசு கட்டுப்பாட்டு அலுவலக இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் வராத 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் காட்பாடி காந்தி நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் மண்டல அளவிலான கூட்டத்தில் கோப்புகளை சரிபார்த்து […]