திருவாரூர் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையிலான போலீசார் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்குள் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டார்கள். இதனால் அலுவலகத்தில் உள்ள கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. நீண்ட […]
Tag: லஞ்ச ஒழிப்பு துறை
நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி முன்னிட்டு அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், சோதனை சாவடிகள் என அனைத்து பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில் தமிழகம் முழுவதும் 16 துறைகள் சார்ந்த 46 […]
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செய்த சோதனையில் பல இடங்களில் பணம் சிக்கியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனராக பணியாற்றுபவர் உமா சங்கர். இவர் தீபாவளி வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று மாலை 06.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ், இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தார்கள். அப்போது உமா ஷங்கர் ஒரு பையுடன் அவரின் அறையில் இருந்து வெளியே வந்தார். லஞ்ச ஒழிப்பு […]
இன்று காலை அதிமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் அம்மா நாளிதழ் வெளியிட்டளர் வடவள்ளி சந்திரசேகர் வீட்டிலும், அதேபோல முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டிலும் அடுத்தடுத்து ஒரே நேரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையினால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் பீதியில் உள்ளனர். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை […]
அடுத்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த உள்ள அதிமுக மாஜி அமைச்சர் யார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பாகவே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி என அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அடுத்து யார் […]
புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம், சகோதரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்.. இவர் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது விருப்ப ஓய்வு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உறுதியான தகவல் தெரியவில்லை. இந்நிலையில் இவரது வீடு, இவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், பழனிவேல் வீடுகளில் இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் […]
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ளது வேலூர் – திருவண்ணாமலை இரு மாவட்டங்களை ஒருங்கிணைந்த ஆவின் தலைமையகம்.. அதிமுகவின் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளரான வேலழகன் ஆவின் தலைவராக இருக்கிறார்.. இந்நிலையில் இந்த ஆவின் அலுவலகத்தில் கடந்த ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. கடந்த 16ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் […]
புதுச்சேரியில் சென்டாக் மூலம் உயர் நிலைக் கல்வியில் சேரும் மாணவர்களின் சேர்க்கையில் சாதி,குடியிருப்பு, குடியுரிமை ஆகிய வருவாய்த்துறை சான்றிதழை செலுத்தவேண்டும். இதனால் வருவாய்த்துறை சான்றிதழுக்கு விண்ணப்பித்து வருபவர்களிடம் இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் வாங்கபட்டு வருவதாகவும் ,லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு சான்றிதழை காலதாமதமாக கொடுப்பதாகவும் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீசில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த புகாரின் பெயரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்ட் நித்தின் கவுல் உத்திரவின்படி,லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் ஹேமச்சந்திரன், தியாகராஜன், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் […]
நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 75 நாட்களாக லஞ்ச ஒழிப்பு துறையினர் பல்வேறு இடங்களில் தொடர் சோதனையிட்டு வருகிறார்கள். அதில் சிலர் கையும் களவுமாக மாட்டிக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கடந்த 75 நாட்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகளில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி லஞ்சம் […]
கடந்த 75 நாட்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த 3 மாதத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனைகளில் 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். 127 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த சோதனையில் இதுவரை சுமார் 6 இலிருந்து 7 கோடி ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். 7 கிலோ தங்கம், 9 கிலோ […]