இந்தியா-சீனபடைகள் இடையில் லடாக் எல்லையில் கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில் சென்ற 2020 ஆம் வருடம் ஜுன் 15ஆம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. அப்போது இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்து உள்ளது. இதையடுத்து எல்லையில் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் தலா 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் குவித்து வைத்து இருக்கிறது. அதே சமயம் எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்து இருநாடுகளும் இதுவரை […]
Tag: லடாக் எல்லை
இந்தியா-சீனா நாடுகள் எல்லை பதற்றத்தை தணிக்கும் வகையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனா தகவல் தெரிவித்துள்ளது. சீனா தனது படைகளை கிழக்கு லடாக் எல்லையில் குவித்து ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் தனது படைகளை எல்லையில் குவித்துள்ளது. மேலும் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 13 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் “இரு நாடுகளும் எல்லை பதற்றத்தை தணிக்கும் வகையில் […]
லடாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தை 16 மணி நேரமாக நீடித்து வருகிறது லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த மே மாதம் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தால் இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் உருவானது. இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே ஜூன் மாதத்தில் உருவான வன்முறையால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்தியா மற்றும் சீன ராணுவம் தலா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு […]
லடாக் எல்லையில் குளிரால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்காக சூரிய சக்தியில் இயங்கும் கூடாரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் எல்லையில் நம்மை அந்நிய நாடுகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு ராணுவ வீரர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள். பெரும்பாலான பகுதிகளில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நம் நாட்டிற்காக பாடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் லடாக் எல்லையில் உறைபனி குளிரால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்காக மாசு ஏற்படுத்தாத சூரிய சக்தியில் இயங்கும் இதமான கூடாரத்தை ஒருவர் வடிவமைத்துள்ளார். […]
லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் குடியரசு தின விழாவை அணிவகுப்பு மேற்கொண்டு கொண்டாடினர் நாடு முழுவதிலும் 72 ஆவது குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகரான டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்புகளை தொடங்கி வைத்தார். அதே போன்று அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிலையில் இந்தியா-திபெத் எல்லையிலும் ராணுவ வீரர்கள் குடியரசு தின விழாவை கொண்டாடி தேசியக் கொடியை கையில் ஏந்தி […]
லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாக அறிவித்த பிரபல நிறுவனம் இந்திய நாடாளுமன்ற குழுவிற்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ள போர் நினைவிடத்தில் இருந்து நேரலையில் டுவிட்டரில் கடந்த மாதம் ஒருவர் பேசுகையில், சீனாவின் ஒரு பகுதியாக லடாக்கை தவறுதலாக தெரிவித்துள்ளார். இதையடுத்து லடாக்கை கைப்பற்றும் நோக்கில் சீனா அடிக்கடி அந்த பகுதியில் அடிக்கடி போரில் ஈடுபட்டு வரும் நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் இந்த பதிவு இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே இந்த தகவல் […]
இந்திய எல்லையில் அத்துமீறி உள்ளே நுழைந்த சீன வீரரை இந்திய ராணுவர்கள் பிடித்து, அந்நாட்டிடம் ஒப்படைத்தது. லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் எல்லையில் நடக்கும் பதட்டத்தை குறைக்கும் வகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற டேம்சாக் ஒரு பகுதியில், சீன வீரர் ஒருவர் எல்லையை தாண்டி உள்ளே வந்துள்ளார். […]
கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இந்திய சீன ராணுவ தளபதிகள் இடையிலான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் கடந்த 5 மாதங்களாக இந்திய சீன ராணுவத்தினர் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர இரு நாடு இராணுவ தளபதிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த மாதம் முப்பதாம் தேதி அன்று இருநாட்டு தூதரக […]
எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என சீனாவிடம் இந்தியா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்த இந்தியா-சீனாயிடையே ராணுவ கமாண்டர்கள் அளவில் 6-ம் சுற்று பேச்சு அண்மையில் நடைபெற்றது. இதுகுறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராத் ஸ்ரீவத்சவா கூறியபோது ராணுவ கமாண்டர்கள் அளவில் நடந்த ஆறாவது சுற்று பேச்சில் லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது பற்றி தான் முக்கியமாக பேசப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். மேலும் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த […]
இந்திய வீரர்கள் எல்லையும் தாண்டவில்லை, துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லையென இந்திய ராணுவம் விளக்கம் தந்துள்ளது. லடாக்கின் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் இந்திய வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சீன ராணுவம் குற்றம் சாட்டி இருப்பதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. நமது வீரர்கள் ஒருபோதும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியை தாண்டவில்லை என்றும் நமது முகாமிற்கு மிக நெருக்கமாக சீன வீரர்கள் வந்ததால் பதற்றம் ஏற்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சீன வீரர்கள்தான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ள […]
திபெத் வீரரின் இறுதி சடங்கில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். லடாக்கின் தெற்கு பியாங்காக் பகுதியில் எஸ்எஸ்எப் என்ற சிறப்பு எல்லைப்படை பிரிவை சார்ந்த நைமா டென்சின் என்ற இலக்கிய வீரர் கண்ணிவெடி வெடித்ததில் கடந்த வாரம் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வீரரின் இறுதி சடங்கு நேற்று லடாக்கின் லே என்ற பகுதியில் நடந்தது. அந்த இறுதி சடங்கில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் திபெத்திய சமூகத்தினர் பெரும்பாலானோர் கலந்து […]
இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் சீனா தற்போது ஒரு புதிய சாலையை வேகமாக கட்டமைத்த வருகிறது. லடாக் எல்லைப் பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் பலர் காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கொங் […]
லடாக் எல்லையில் நடக்கின்ற இந்தியா- சீனா மோதலில் சீன படைகள் சிறிதும் பின்வாங்க போவதில்லை என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் சென்ற 15ஆம் தேதி இந்தியா சீனா வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். அதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 76 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சீன வீரர்கள் 43 பேர் உயிரிழப்பு மற்றும் காயமடைந்த நிலையில் உள்ளார்கள் என தகவல் கிடைத்துள்ளது. இத்தகைய மோதலால் எல்லைப் பகுதியில் […]
கிழக்கு லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இந்திய மற்றும் சீன ராணுவங்கள் ஒருமித்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படைகளை விலக்கிக்கொள்ள சாதகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை பதற்றம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சில் ஒருமித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய […]
லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்திய – சீன எல்லையில் […]
சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியது, இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் […]
லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். 2வது நாளாக முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து பேசிய பிரதமர், இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. ஆனால் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும். பதில் நடவடிக்கையில் ஈடுபட இந்தியா ஒருபோதும் தயங்காது. லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது. வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தான் இரங்கல் தெரிவிக்கிறேன் […]
சீன ராணுவம் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பழனியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். லடாக் எல்லையில் நேற்று இரவு சீன துருப்புகளுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சீனா ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட ஒரு உயர் அதிகாரி வீரமரணம் அடைந்தனர். 1975க்கு பிறகு சீனாவுடன் […]
இந்தியா – சீனா எல்லை பிரச்சனை குறித்து முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, […]
லடாக் எல்லை பகுதியில் இந்தியா – சீனா படைகள் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. மேலும் கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் படைகளை குவித்து வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து எல்லை பிரச்சனை தொடர்பாக […]