லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆண்மை அறுவைசிகிச்சையை நேரலையில் செய்த கூட்டமொன்றை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். ஜப்பானில் கடந்த 2012ஆம் ஆண்டு sugiyama என்ற நபர் தனது ஆணுறுப்பை அறுத்து சமைத்து பரிமாற முடிவுசெய்து 800 பவுண்டுகள் கட்டணமும் அதற்காக நிர்ணயித்துள்ளார். இதனையடுத்து sugiyama தனது ஆணுறுப்பை அறுத்து சமைத்து வழங்கிய உணவை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற 70 பேரில் 5 நபர்கள் மட்டும் சாப்பிட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நிகழ்ந்த பின்பு sugiyama வை காவல் துறை […]
Tag: லண்டன்
ராஜ்குமார் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகா சேதுபதிக்கும், ராஜேஷ் சர்மா மற்றும் சாதனாவின் மகன் அன்மோல் சர்மாவுக்கும் பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி லண்டனில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகா சேதுபதிக்கும், ராஜேஷ் சர்மா மற்றும் சாதனாவின் மகன் அன்மோல் சர்மாவுக்கும் லண்டனில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பரவலின் […]
கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார் என்ற பொறியியல் பட்டதாரி 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் Kovaion என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினார். அதன் பிறகு சென்னை, பெங்களூர், அமெரிக்கா என பல கிளைகளை ஆரம்பித்துள்ளார். மேலும் ஆரக்கிள் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் பல நிறுவனங்களுக்கும் தேவைப்படுவதால் அந்த நிறுவனங்களை கண்டுபிடித்து தேவையானதை செய்து கொடுத்து வருகிறார். இவரின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடிக்கு மேல் ஆகும். தற்போது இவர் லண்டனில் கொடிகட்டி பறக்கும் தமிழனாக வலம் வருகிறார்.
இஸ்ரேல் நிறுவனம், சைவ பிரியர்களுக்காக தாவர இறைச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக நாடுகள் முழுக்க பலதரப்பட்ட மக்கள் இறைச்சி நுகர்வுக்கான சதவீதத்தை குறைப்பதற்காகவும் தாவர அடிப்படையில் இருக்கும் உணவு முறைக்கு மாறுவதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கென்று இறைச்சி போன்ற வடிவம் மற்றும் மனமுடைய தாவரத்தால் உருவாக்கப்பட்ட இறைச்சியை இஸ்ரேல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பார்ப்பதற்கு மாட்டிறைச்சி போன்று இருக்கும் இந்த துண்டுகள், இறைச்சி கிடையாது. முழுவதும் தாவரப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் நிறுவனமானது, தாவர இடுபொருட்களின் நிறங்கள் மற்றும் […]
பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் 19 வயது இளம் பெண் லண்டனில் மாயமாகியுள்ளார். கிழக்கு லண்டனில் உள்ள ஹோட்டலுக்கு கடந்த 29-ஆம் தேதி மாலை 8 மணிக்கு ரோக்சானா என்ற 19 வயது இளம் பெண் வந்துள்ளார். இவர் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த பின்னர் மாயமாகியுள்ளார். மேலும் ரோக்சானா அங்கிருந்து செல்லும்போது வெள்ளை நிற டீ-சர்ட் உடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போலீசாருக்கு தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பு […]
லண்டனில் ஒரு பெண்ணை கத்தியால் குத்திய நபரை தடுக்க அவர் மீது வாகனத்தை மோதச் சென்ற இளைஞர் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் வடமேற்கு பகுதியில் இருக்கும் Maida Vale என்னுமிடத்தில் ஒரு நபர், ஒரு பெண்ணை குழந்தைகள் பள்ளி செல்லக்கூடிய வழியில் கத்தியை வைத்து சரமாரியாக குத்தியுள்ளார். குழந்தைகள் பதறிக்கொண்டு ஓடியுள்ளனர். அந்த பெண் அலறியதால், அங்கு சென்று கொண்டிருந்த மக்கள் காப்பாற்ற முயன்ற போது, அந்த நபர் […]
லண்டனில் 15 வயதுடைய சிறுவனை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் இருக்கும் East Sussex பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய Carol Taylor என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலமாக 15 வயதுடைய ஒரு சிறுவனுடன் பழகி இருக்கிறார். தினமும் சிறுவனுடன் பேசியிருக்கிறார். அதன்பிறகு நேரில் சந்திக்க வருமாறு கூறியிருக்கிறார். எனவே, சிறுவனும் அவரைப் பார்க்க வந்திருக்கிறார். அப்போது, Carol Taylor சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார். மேலும் இதனை […]
அமெரிக்காவுக்கு லண்டனிலிருந்து விமானத்தில் பயணித்த Kai Forsyth என்ற டிக்டாக் பிரபலம் விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்த அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதாவது Kai Forsyth லண்டனில் இருந்து விமானத்தில் ஏறிய போது அங்கு பயணிகள் யாருமே இல்லையாம். அவர் மட்டும் தான் தனியாக விமானத்தில் கிட்டத்தட்ட 8 மணி நேரம் பயணம் செய்துள்ளார். பின்னர் விமானம் முழுவதும் காலியாக இருந்ததால் Kai Forsyth தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார். https://youtu.be/8kLjwKyplB4 மேலும் […]
கடந்த புதன்கிழமை அன்று லண்டனில் உள்ள Greenwich-ல் பள்ளி சீருடையில் இருந்த மாணவியை ( 16 வயது ) மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதேபோல் வியாழக்கிழமை அன்று மர்ம நபர் ஒருவரால் 17 வயது மாணவி பாலியல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளார். ஆனால் இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஜியோப் வாரேன் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் கூறியதாவது, “இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு அந்த நபர் ஒரே ஆளாக […]
லண்டனில் 46 வயது நபரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மேற்கு லண்டனில் Dariusz Wolosz ( வயது 46 ) என்ற நபர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலந்து நாட்டை சேர்ந்த Dariusz Wolosz-க்கும் ஆண்கள் சிலருக்கும் லண்டன் Tavistock சாலையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதால் தான் இந்த கொலை சம்பவம் […]
உலகளவில் கொரோனாவின் வீரியம் தற்போது வரை குறையாத நிலையில் லண்டனில் புதிய வைரஸ் பரவி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனா தற்போது வரை உருமாற்றமடைந்து அனைத்து நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரசால் அப்பாவி பொதுமக்கள் பலரும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் லண்டனில் முதியவர்கள் மத்தியில் புதிதாக வைரஸ் ஒன்று பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அதாவது லண்டனில் புதிதாக loneliness epidemic என்னும் நோய் […]
லண்டனில் காலையில் ஒரு இளம்பெண் ஜாகிங் சென்றபோது ஒரு மர்ம நபர் அவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் இருக்கும் Streatham Common என்னும் பகுதியில் அதிகாலை 5 மணியளவில் ஒரு இளம்பெண் ஜாகிங் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஒரு மர்ம நபர் அந்த இளம்பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்திருப்பதாவது, அந்த […]
லண்டனில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று தெற்கு லண்டனில் உள்ள Ashburton என்ற பூங்காவில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த அந்த சிறுவனின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனையின் முடிவில் சிறுவனின் இதயத்தில் கத்தியால் குத்தப்பட்டதில் ஏற்பட்ட காயத்தால் தான் மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் […]
லண்டனில் ஒரு உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு கோழியின் தலை அனுப்பப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார். லண்டனில் ஒரு பெண், பிரபல உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்திருக்கிறார். அதன்பின்பு வீட்டிற்கு வந்த உணவை ஆவலுடன் திறந்து பார்த்தவர் அதிர்ந்து போனார். காரணம், அந்த பார்சலில் கோழியின் தலை முழுமையாக பொறிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அந்தப் பெண் உடனடியாக அதனை புகைப்படம் எடுத்து இணையதளங்களில் பதிவிட்டார். மேலும், “ஆர்டர் செய்த உணவில் கோழியின் முழு தலை, அப்படியே இருப்பதை பார்த்தேன். உடனே, […]
லண்டனில் ஒரு இளம்பெண்ணை நான்கு நாட்களாக அறையில் பூட்டி வைத்து சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் இருக்கும் Kensington என்ற பகுதியைச் சேர்ந்த 29 வயதான, அப்துல் மீது, ஒரு இளம்பெண், ஒரு அறைக்குள் தன்னை அடைத்து வைத்து நான்கு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அந்த புகாரில் இளம்பெண் தெரிவித்திருப்பதாவது, “எனது பிறந்த நாளின் போது அப்துல் என்னிடம் தவறாக நடந்து கொள்ள […]
உத்திரபிரதேசத்தில் மாயமான யோகினி சிலை லண்டனில் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் லோகாரி என்னும் கிராமத்தில் ஆட்டுத் தலையுடன் சேர்ந்த யோகினி என்ற அம்மன் சிலை இருந்தது. அதனை, பழங்கால இந்திய மக்கள், வழிபட்டனர். அப்போது, அந்த சிலை மர்ம நபர்களால் திருடப்பட்டது. அதன் பிறகு அந்த சிலை கிடைக்கவில்லை. இந்நிலையில், அச்சிலையை பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஏலம் விட்டபோது, அது இந்திய சிலை என்று கண்டறியப்பட்டது. எனவே, தற்போது யோகினி சிலையை இந்தியாவிற்கு […]
பிரேசில் கால்பந்து வீரர் கேப்ரியலிடம் மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் அர்சனெல் கிளப் அணிக்காக விளையாடும் பிரேசில் கால்பந்து வீரர் கேப்ரியல் கடந்த ஆகஸ்ட் மாதம் நண்பருடன் காரில் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் கேப்ரியலை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரிடம் இருந்த பணம், செல்போன், கைக்கடிகாரம் போன்றவற்றை பறித்துள்ளனர். அப்போது தற்காப்புக்கு தாக்குதலில் ஈடுபட்ட கேப்ரியலை, பேஸ்பால் விளையாட்டு மட்டையால் கொள்ளையர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனையடுத்து […]
ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் லண்டனில் நடந்த சீக்கிய இளைஞர் கொலை சம்பவம் பற்றி விவரம் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த புதன்கிழமை அன்று மேற்கு லண்டனின் சௌத்ஹால் பகுதியில் பிரிட்டிஷ் சீக்கிய இளைஞரான ரிஷ்மீத் சிங் மர்மநபர்கள் சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் உள்ளூர் மக்கள் மற்றும் பிரிட்டன் வாழ் சீக்கிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. […]
லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த 14 வயது சிறுவனின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று மாலை 6.40 மணி அளவில் லண்டனில் உள்ள West Croydon ரயில் நிலையம் அருகே கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த சிறுவனுடைய பெயர் Jermaine Cools என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிறுவன் பல முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பது பிரேத […]
லண்டனில் பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் ஆர்வலர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் ஒரு NHS உடல் நலமில்லாத தன் குழந்தையை காண செல்ல வேண்டும் என்று அவர்களிடம் கெஞ்சிய வீடியோ வெளியாகியுள்ளது. லண்டனில் கடந்த மாதம் 8-ஆம் தேதியில், M25-ன் சந்திப்பு-25ல் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சமூக ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களின் போராட்டத்தை தடுக்க போடப்பட்டிருந்த தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/11/20/3081061927266042680/640x360_MP4_3081061927266042680.mp4 […]
லண்டனில் பேருந்தில் பயணித்த கருப்பினத்தை சேர்ந்த பெண் மீது இனவெறி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டன் நகரில் இரவு 9:20 மணிக்கு பேருந்தில் பயணித்த ஒரு நபர் சிகரெட் பிடித்திருக்கிறார். எனவே, அவரின் அருகில் இருந்த பெண், பேருந்தில் எதற்காக சிகரெட் பிடிக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அப்போது அந்த நபர், “உனக்கு பிடிக்கவில்லை எனில், உன் நாட்டிற்கு செல்” என்று கூறியதோடு, அந்த பெண்ணை இன ரீதியாக தாக்கி பேசியிருக்கிறார். எனவே, அந்த நபரை காவல்துறையினர் […]
இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் நடந்த கால்பந்து போட்டியையடுத்து சுமார் 52 வயதுடைய நபருக்கு எப்படியோ தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் மற்றும் லூடன் டவுன் என்னும் அணிகளுக்கிடையே மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள கால்பந்து போட்டி நடந்து முடிந்த பின்பு அதே பகுதியில் 52 வயதுடைய நபருக்கு தலையில் பலத்த […]
லண்டன் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து வீதிகளிலும் வண்ணமயமான விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகரான லண்டனில் வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெவ்வேறான நாட்களில் ஒவ்வொரு வீதிகளிலும் விளக்குகள் ஏற்றப்படும். ஆனால் தற்போது முதல் தடவையாக அனைத்து வீதிகளிலும் ஒரே சமயத்தில் வண்ண விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டுள்ளது. தி ஆர்ட் ஆஃப் லண்டன் பிசினஸ் அல்லயனஸ் என்ற உள்ளூர் வணிக அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஆக்ஸ்போர்டு வீதியில், நட்சத்திரத்தின் வடிவத்தில், விளக்குகளை வடிவமைத்து ஒளிர […]
லண்டனில் வசித்த இலங்கை தமிழ் குடும்பத்தினர் தீ விபத்தில் பலியான நிலையில், அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள Bexleyheath என்னும் பகுதியில், ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில் அந்த வீட்டில் வசித்த இலங்கையை சேர்ந்த நிரூபா என்ற இளம்பெண், அவரின் மகள் ஷாஷ்னா, மகன் தபீஷ் மற்றும் அவர்களின் பாட்டி ஆகிய 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். அந்த வீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு […]
இங்கிலாந்தின் தலைநகரிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றின் முன்பாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளார்கள். இங்கிலாந்து நாட்டின் தலைநகராக லண்டன் திகழ்கிறது. இதனையடுத்து லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் என்னும் தெருவில் மிகவும் பிரபலமாக சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டின் முன்பாக கத்தியைக் கொண்டு மர்ம நபர் ஒருவர் சுற்றி திரிவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் சூப்பர் மார்க்கெட்டின் முன்பாக அதிரடியாக […]
பள்ளிக் கூரை இடிந்து விழுந்ததில் குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். பிரித்தானியா தலைநகரான லண்டனில் Dulwich என்ற பகுதியில் துர்லோ பார்க் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இருக்கும் Rosemead Preparatory என்ற பள்ளியில் விபத்து ஒன்று நடந்துள்ளது. இது குறித்து லண்டன் தீயணைப்பு குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “பள்ளியில் உள்ள இரண்டாவது மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 20 பேர் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு […]
காரின் பயண விலையானது உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் Uber காரின் பயண விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக உயர்த்தப்பட்டது. அதனை அடுத்து தற்பொழுது தான் லண்டனில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் படி பயணக் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி விமான நிலையங்கள் மற்றும் பயணிகளின் பரபரப்பான போக்குவரத்தில் செல்வதற்கு பயணக் கட்டணத்தில் இருந்து […]
லண்டனில் கடை ஊழியர் ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையன் குறித்த பரபரப்பு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு 11 மணி அளவில் Shadwell பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குள் புகுந்த கொள்ளையன் கடை ஊழியரிடம் கருப்பு பை ஒன்று குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து கடை ஊழியரும் அந்த நபரிடம் என்ன வேண்டும் என்று தெளிவாக கேட்டுள்ளார். இந்நிலையில் அந்த கொள்ளையன் கடை ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார். […]
சமையல் துறையில் சிறந்து விளங்கியதற்காக பிரபல சமையல் கலைஞருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் உலகளாவிய உணவு, விருந்தோம்பல், சுற்றுலா சாதனைகள் 2021 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபல இந்திய சமையல் கலைஞரான செஃப் தாமு அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சமையல் துறையில் நல்ல அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் முதல் விருதாகும். மேலும் இது உலக தமிழ் அமைப்பால் உருவாக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வானது பிரித்தானியா […]
லண்டனில் வசிக்கும் ஒரு பெண் ஏலத்தில் கிடைத்த அதிக விலை மதிப்புள்ள பொருளை கல் என்று நினைத்து குப்பையில் வீசியிருக்கிறார். லண்டனில் ஒரு பெண், ஏலத்தில் ஒரு கல்லை வாங்கியிருக்கிறார். அதாவது, சில வீடுகளில் பழங்காலத்திலிருந்து பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை வைத்து ஏலம் நடத்தப்படும். அந்த வகையில், இவருக்கு பளபளப்பான கல் ஏலத்தில் கிடைத்திருக்கிறது. அந்த கல் சுமார் 20 கோடி மதிப்பு கொண்டது. அதனை அறியாமல், அந்த பெண் சாதாரண கல் என்று எண்ணி அதனை […]
லண்டனில் கிறிஸ்துமஸுக்கு முன் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியா தலைநகர் லண்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து லண்டன் பெருநகர காவல்துறை ஆணையர் Cressida Disk கூறியபோது “கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தீவிரவாத தாக்குதல் நடத்த சாத்தியமான அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே சந்தேகத்திற்கு இடமான நடத்தையை புகார் அளிக்க பொதுமக்கள் தைரியத்தையும், நம்பிக்கையையும் […]
லண்டனில் பிரபல தமிழ் வர்த்தகரின் வாகனம் சமீபத்தில் திருடப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. லண்டனில் லூசியம் என்ற பகுதியை சேர்ந்த அந்த வர்த்தகர் தன் வாகனத்தை விற்பனை செய்ய தீர்மானித்து, ஒரு இணையத்தளத்தில் விளம்பரம் செய்திருக்கிறார். அந்த விளம்பரத்தை பார்த்த மூன்று நபர்கள் வாகனத்தை வாங்கிக்கொள்கிறோம் என்று கூறி அந்த வர்த்தகரை அணுகியுள்ளனர். அதன்பின்பு, அந்த வாகனத்தை பார்க்க, மூவரும் வர்த்தகரின் வீட்டிற்கு வந்துள்ளனர். அதனையடுத்து, வாகனத்தை பார்வையிட்ட அவர்கள், யாரும் பார்க்காத சமயத்தில் சாவியை எடுத்துவிட்டனர். […]
முகலாயர் கால கண்ணாடிகள் லண்டனில் பல கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. லண்டனில் புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோதேபியின் மூலம் இரண்டு ஜோடி முகலாயர் கால கண்ணாடிகள் ஏலம் விடப்பட்டன. இது இந்திய ரூபாயில் சுமார் 27 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு கண்களில் ஒன்று கேட் ஆப் பாரடைஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள பிரேம்கள் வைரத்தாலும் லென்ஸ்கள் மரகதத்தாலும் ஆனவை. மேலும் மற்றொரு கண்ணாடி ஹலோ ஆப் லைட் […]
லண்டனில் 18 வயது இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டவர் விசாரணையில் ஆப்கானிஸ்தான் அகதி என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு லண்டனில் உள்ள Notting Hill பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய Hazrat Wali, உள்ளூர் நேரப்படி கடந்த 12ஆம் தேதி மாலை 4.45 மணியளவில் Twickenham-ல் உள்ள Richmond upon Thames கல்லூரிக்கு அருகில் உள்ள கால்பந்து மைதானத்தில் 8 பேர் கொண்ட குழுவினரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். Fulham-ல் உள்ள West London […]
லண்டனை சேர்ந்த இளைஞன் தன் அப்பாவிடம் பணம் பெற கடத்தல் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்த Sam Demilecamps (25) விடுமுறைக்காக இத்தாலி சென்றபோது, Monte San Giusto நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 8 நாட்கள் கடத்தப்பட்டு 2 வாரங்கள் கழித்து கடத்தல் கும்பலால் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ஊடகம் வெளியிட்ட செய்தியில், “இத்தாலியில் கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி Sam Demilecamps கடத்தப்பட்டார். மேலும், அவரை […]
லண்டனில் இளம் கோடீஸ்வரர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்களுடன், நெருங்கிய நட்பை கொண்டவர் இளம் கோடீஸ்வரர் Vivek Chadha(33). இவர் பல மில்லியன் பவுண்டுகளில் Nine Group என்ற, ஹோட்டல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு 8 வாரங்களுக்கு முன்புதான், Chadha (29) என்ற பெண்ணுடன் பிரம்மாணடமான முறையில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு, Annabel’s night club பார்ட்டியில் vivek கலந்து […]
லண்டனில் ஒரு நபர் கடந்த 33 வருடங்களாக பாம்புகள் விஷத்தை ஊசியால் தன் உடலுக்குள் செலுத்தி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனைச் சேர்ந்த 55 வயதுடைய ஸ்டீவ் லுட்வின் என்பவர் பாம்புகளின் விஷத்தை ஊசியால் தன் மூட்டுகளில் செலுத்தி வலியை ஏற்படுத்துவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். உலகின் ஏழை நாடுகளில் உள்ள மக்கள் அதிகமாக பாம்பு கடி பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். எனவே அவர்களுக்காக மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் தான் இவ்வாறு செய்வதாக கூறுகிறார். கடந்த 33 வருடங்களாக, […]
லண்டனில் 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் காமிக் கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லண்டனில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காமிக் கண்காட்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காமிக் கண்காட்சி, இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மேலும் இங்கிலாந்தின் மிகப்பெரிய பாப் கலாச்சாரமாக லண்டன் MCM காமிக் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் காலெண்டரில் உறுதியான இடத்தை பிடிக்கிறது. இதில் பார்வையாளர்களை கவரும் வகையில் ஸ்குவிட் கேம், ஸ்பைடர்மேன், ஸ்டார்வார்ஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் […]
அகதி குழந்தைகளுக்கான பொம்மை, பல நாடுகளுக்கு சென்றுவிட்டு தற்போது லண்டன் நகருக்கு வந்தடைந்திருக்கிறது. அகதி குழந்தைகள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து வாழ்வதால், ஏற்படும் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில், ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் 9 வயது கொண்ட சிறுமி போன்ற பொம்மை தயாரிக்கப்பட்டது. இந்த பொம்மை சுமார் பதினொன்றரை அடி உயரத்தில் இருக்கிறது. அமல் என்று பெயரிடப்பட்ட இந்த பொம்மை, கடந்த ஜூலை மாதத்தில் துருக்கியிலிருந்து, 8000 கிலோமீட்டருக்கான பயணத்தை தொடங்கியது. இதனை, பொம்மலாட்ட கலைஞர்கள் […]
லண்டனுக்கு, அமெரிக்க நாட்டின் Philadelphia என்ற சர்வதேச விமான நிலையத்திலிருந்து, விமான சேவைகள் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டீஷ் நாடுகளின் விமான நிறுவனங்கள் மட்டும் தான் லண்டன் Heathrow மற்றும் Philadelphia சர்வதேச விமான நிலையத்திற்கு தொடர்ந்து விமான சேவை அளித்து வந்தது. அமெரிக்காவின் விமான நிறுவனம் கடந்த மார்ச் மாத கடைசியில், லண்டனுக்கு செல்லக்கூடிய விமான சேவையை மீண்டும் தொடங்கியிருந்தது. இந்நிலையில், பயணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் பிரிட்டன் […]
சிறந்த விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் விமான நிலையங்களின் பெயர்கள் கொண்ட நடப்பு ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விமான நிலைய மதீப்பிடு நிறுவனமான skyratx வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 8 வருடங்களாக முதலிடத்தில் இருந்த சிங்கப்பூர் விமான நிலையம் தற்போது பின் சென்றது. இதற்கு கொரோனா தொற்று பரவலும் ஒரு’ முக்கிய காரணமாகும். அதிலும் விமான நிலையத்தில் இருக்கும் செக்கிங், குடிவரவு, பாதுகாப்பு, தூய்மை, உணவகங்கள், பார்கள் […]
லண்டனில் மீண்டும் இரவு நேர சுரங்க ரயில் சேவைகள் நவம்பரில் இருந்து தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்ட இரவு நேர சுரங்க ரயில் சேவையானது மீண்டும் நவம்பரில் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட 1,40,000 ஆயிரம் பேரின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இந்த நைட் டியூப் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்க வேண்டும் என்று […]
லண்டனில் உள்ள care facility-ல் இருந்து தலைமறைவான தமிழர் ஒருவரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். லண்டனின் Ilfordல் உள்ள care facilityல் இருந்து பாலசங்கர் நாராயணன் என்ற இளைஞர் கடந்த 7-ஆம் தேதியன்று தப்பிச் சென்று விட்டார். இதனையடுத்து நாராயணன் குறித்த சில முக்கிய தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டனர். அதாவது நாராயணன் மூர்க்கத்தனம் கொண்டவராக இருக்கலாம் என்றும் பொதுமக்கள் அவரை பார்த்தால் அருகில் சென்று அணுக வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரித்தனர். ஆகவே பொதுமக்கள் யாரும் நாராயணனை பார்த்தால் […]
படிப்பதற்காக லண்டன் வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு லண்டனில் உள்ள Richard Upon Thames பள்ளிக்கு அருகே Hazrat Wali (18) என்ற இளைஞன் நடைபாதையில் நடந்த மோதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதாவது சம்பவத்தன்று Hazrat Wali என்ற இளைஞனுக்கும், அங்கிருந்த மற்ற நபர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நடைபாதையில் நடந்த மோதலில் அந்த இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இந்த நிலையில் Richard Upon […]
லண்டனில் வசிக்கும் 12 வயது சிறுமி மாயமானது தொடர்பில் காவல்துறையினர் தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். லண்டனில் உள்ள Slough என்ற பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமியான லிலனா ஹென்றி, நேற்று முன்தினம் காணாமல் போனார். தற்போது வரை அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுமியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இச்சிறுமி நேற்று முன்தினம் மாலையில் Slough என்ற பகுதியில் மாயமாகியிருக்கிறார். மேலும், சுட்டன் பகுதியில், அவர் அடிக்கடி தென்பட்டதாக […]
லண்டனில் கால்பந்து விளையாடிய போது பிரச்சனை ஏற்பட்டதில், ஒரு சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் உள்ள Twickenham என்ற பகுதியில் இருக்கும் கால்பந்து விளையாட்டு மைதானத்திலிருந்து நேற்று மாலையில் காவல் துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. எனவே, காவல்துறையினரும், அவசர உதவிக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்ற போது 18 வயதுடைய சிறுவன் கத்திக்குத்து காயங்களோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அடுத்த சில நிமிடங்களில் சிறுவன் பரிதாபமாக […]
லண்டனில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்த குங் ஃபூ வீரர் மரணத்திற்கு பிரிட்டிஷ் மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவு தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. லண்டனில் கிஷோர்குமார் பட்டேல்( 58) என்பவர் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து கொரோனா நோய் தொற்றை தவிர வேறு எந்த நோயும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருந்த இவர் 19 நாட்களுக்குப் பிறகு இறந்துள்ளார். இவர் 55 வயதில் குங் […]
லண்டனில் இருக்கும் தேம்ஸ் நதிக்கரையில், நடக்கும் கண்கவர் வான வேடிக்கையானது கொரோனா காரணமாக தற்போது நடைபெறாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் இந்த கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சி, தொடர்ந்து இரண்டாவது வருடமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. எனினும், Trafalgar பகுதியில், தனியாக ஒரு நிகழ்வை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திலிருந்து, கட்டுப்பாடுகளின்றி அதிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், குளிர்காலத்தில் கொரோனா தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வருடமும் வானவேடிக்கை கொண்டாட்டங்கள் கிடையாது […]
லண்டனில் ஓரினச்சேர்க்கையாளர் கொலை செய்யப்பட்டதற்கு மனித உரிமைகள் குழு ஒன்று ஊர்வலம் நடத்தியுள்ளது. லண்டனில் டவர் ஹாம்லட்ஸில் Ranjith Kankanamalage என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து அவரின் உடலானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவர் தலையில் அடிப்பட்டதால் தான் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஓரினச்சேர்க்கையாளரான Ranjithன் மரணம் LGBTயின் அமைப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரை கொலை செய்தவரை அடையாளம் கண்டு […]
லண்டனின் கிழக்கு பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில், காவல்துறையினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். லண்டனின் கிழக்கு பகுதியில், நேற்று இரவு சமயத்தில் நியூஹாம் பகுதியில் இருக்கும் ஒரு சலூன் கடையில், மர்மநபர்கள் திடீரென்று புகுந்து, துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் மூவருக்கு துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவருக்கு கத்திகுத்து காயம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பின்பு, காயமடைந்தவர்களை காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், காவல்துறையினர், […]