ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத்தின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சி.பி.ஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவனஊழல் குறித்த டொரண்டா கருவூல மோசடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், தன் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என ராஞ்சியிலுள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு சிங்கப்பூர் போக வேண்டும் எனவும் அதற்காக சி.பி.ஐ வசமுள்ள தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கத் […]
Tag: லாலு பிரசாத்
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உடல்நிலை மேலும் பாதித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. அவரது உடலில் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் 130-160 வரை ஏற்ற இறக்கமாக உள்ளது. மேலும் சிறுநீரக நோயின் 4 ஆம் நிலை நோயாளி என்பதால் தற்போது அவரது சிறுநீரகம் 20 சதவீதம் திறனில் மட்டுமே செயல்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு கிட்னி செயலிழந்து விட்டதாகவும் ரத்த அழுத்தம் அதிகரித்து விட்டதாகவும், அவரது உடல் நிலை மோசமடைந்து உள்ளதாகவும், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75% செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2017-ல் மாட்டுத் தீவன வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனையிலிருந்த லாலுபிரசாத் […]
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு லாலு பிரசாத் யாதவின் மதனும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவருமான திரு தேஜஸ்வி மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிஹார் சட்ட பேரவைத் தேர்தல் வரும் 28ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் திரு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் திரு தேஜஸ்வி யாதவ் […]