Categories
தேசிய செய்திகள்

நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 7.9 பேர் கொரோனவால் பாதிக்கப்படுகின்றனர்: மத்திய சுகாதாரத்துறை!!

உலகின் மொத்த மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால், கொரோனா வைரஸ் காரணமாக ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இந்தியாவில், கோவிட் காரணமாக நாட்டின் ஒரு லட்சம் மக்களுக்கு 7.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 140 […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு தொடங்கிய போது மீட்பு விகிதம் 7.1%… தற்போது 39.62% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,298 பேர் குணமடைந்துள்ளனர் என்பது திருப்திகரமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் தெரிவித்தாவது, ” நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மீட்பு விகிதம் 7.1% ஆக இருந்தது. தொடர்ந்து ஊரடங்கு 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட போது மீட்பு விகிதம் 11.42% ஆக இருந்தது. பின்னர் அது 26.59% ஆக உயர்ந்தது. இன்று மீட்பு விகிதம் 39.62% […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மக்களின் சாதி, மதம் பார்த்து பரவுவதில்லை: இது மிகவும் பொறுப்பற்ற செய்தி… இணை செயலாளர்!

கொரோனா மக்களின் சாதி, மதம் பார்த்து வருவதில்லை என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ” COVID-19 பரவலை சமூக வாரியாக மேப்பிங் செய்வதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் குறித்து வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சாதி மதம் அடிப்படையில் கொரோனா வருவதில்லை” என அவர் கூறியுள்ளார். மேலும், கொரோனா தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேர் கொரோனா பாதிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.15% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.15% ஆக உயந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20917 ஆக அதிகரித்துள்ளது. அதன் விகிதம் தற்போது 31.15% ஆக உள்ளது. நாடு முழுவதும் 44029 பேர் தீவிர மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால் கொரோனா பாதிப்பு தீவிரமடையும்: மத்திய சுகாதாரத்துறை!!

ஊரடங்கு தளர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகை பற்றி பேசும் போது, ​​நாமும் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வைரஸுக்கு எதிரான தடுப்பு வழிகாட்டுதல்கள் நடத்தை மாற்றங்களாக செயல்படுத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்த காலகட்டத்தில் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவதிலும், செய்யக்கூடாதவைகளை புறக்கணிக்கவும் வேண்டும். அவ்வாறு செய்வதன் காரணமாக கொரோனா பாதிப்பு நாட்டில் உச்சமடைவதை தவிர்க்க […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 216 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.. மத்திய சுகாதாரத்துறை..!

நாட்டில் சுமார் 216 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 28 நாட்களாக சுமார் 42 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், 1,273 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்… மத்திய சுகாதாரத்துறை!

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தவிர்த்து பிற நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைகளும், சுகாதார சேவைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான சேவைகளும் சீராக இயங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் தற்போது, கொரோனவள் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,900 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் விகிதம் 27.52% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை..!

நாடு முழுவதும் இதுவரை 11,706 பேர் குணமாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1074 பேர் குணமடைந்துள்ளனர். இன்று வரை குறிப்பிடப்பட்ட குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் அடிப்படையில் இது மிக அதிக எண்ணிக்கையாகும். நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் மீட்பு வீதம் 27.52% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்தமாக COVID19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 42533 ஆக உயர்ந்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 25.19% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25.19% ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1718 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7,797 லிருந்து 8,325 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.சி.எம்.ஆர் நிரூபணம் செய்யும் வரை பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ளக்கூடாது: மத்திய சுகாதாரத்துறை!

பிளாஸ்மா சிகிச்சை என்பது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை அல்ல. அது இன்னும் சோதனை நிலையில் தான் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை பல இடங்களில் செய்யப்படுகிறது. இருப்பினும் இது ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதன் செயல்திறனைப் படிப்பதற்காக ஐ.சி.எம்.ஆர் தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலுக்கு எந்தஒரு தனிப்பட்ட சமூகமும், பகுதியும் பாதிக்கப்படக்கூடாது: லாவ் அகர்வால்..!

தவறான தகவல்களையும் பீதியையும் பரப்புவதை நாம் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செரோதியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 14 நாட்களில் சுமார் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், சுமார் 16 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என கூறினார். இந்த மாவட்டங்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

14 நாட்களாக புதிதாக கொரோனா பாதிக்கப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு: சுகாதாரத்துறை!

கடந்த 14 நாட்களில் சுமார் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் 1396 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து, மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரித்துள்ளது. அதில் 20,835 பேர் தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 20.57% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20.57% ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று மத்திய சுகாதாரத்துறை செய்தியர்கள் சந்திப்பில் கூறியதாவது, ” நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 23,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக உயர்ந்துள்ளது. அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 14 நாட்களாக 78 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை

கடந்த 28 நாட்களுக்கு மேலாக சுமார் 12 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, கடந்த 14 நாட்களில் சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 78 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என இணை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். அதேபோல நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 4.5% ஆக அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைத்தவர்களின் சதவீதம் 17.48% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை

கடந்த 14 நாட்களாக சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 61 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்திப்பில் ஈடுபட்ட சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணை செயலாளர் கூறியதாவது, ” புதிதாக கொரோனா பாதிக்காத பட்டியலில் மகாராஷ்டிராவை சேர்ந்த லாதூர், உஸ்மானாபாத், ஹிங்கோலி & வாஷிம் ஆகிய மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன என தெரிவித்தார். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா பாதிக்காத மாவட்டங்களின் எண்ணிக்கை 59-ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை

புதுச்சேரியில் மஹே, கர்நாடகாவின் கோடகு மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் ஆகிய பகுதிகளில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் அறிவித்துள்ளார். குடும்பநல அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டது. அப்போது பேசிய லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 14 நாட்களாக சுமார் 45 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை… சுகாதாரத்துறை

இதுவரை 23 மாநிலங்களை சேர்ந்த சுமார் 47 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். கடந்த 14 நாட்களாக 45 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. புதுச்சேரி, மஹே, மற்றும் கர்நாடகாவின் கோடாகு ஆகிய இடங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என இணை செயலாளர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மொத்த இறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டியது: குணமடைந்தவர்கள் 13.85%.. மத்திய சுகாதாரத்துறை

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்தது. சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சுமார் 1992 பேர் இந்த கொடிய நோயிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

மே மாதத்திற்குள் 10 லட்சம் RTPCR கிட்களை உள்நாட்டிலேயே உருவாக்க இலக்கு: மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இல்லாத போது கொரோனா பாதித்தவர்களின் இரட்டிப்பு விகிதம் சுமார் 3 நாட்களாக இருந்தது. ஆனால், ஊரடங்கு அமலில் இருந்த பிறகு, குறிப்பாக கடந்த 7 நாட்களில் எடுத்த தரவுகளின் அடிப்படையில், கொரோனா பாதித்தவர்கள் இரட்டிப்பு விகிதம் 6.2 நாட்களாக ஆக உள்ளது என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளது. இதிலிருந்து கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சுமார் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் […]

Categories
சற்றுமுன்

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் – உயிரிழந்தோர் விகிதம் 80 : 20 ஆக உள்ளது – மத்திய சுகாதாரத்துறை!

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் – உயிரிழந்தோர் விகிதம் 80 : 20 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.  இந்தியாவில் இதுவரை 13,387 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,007பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், 23 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 6 நாட்களில் இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு அமலில் இல்லாவிடில், ஏப்.15க்குள் 8.2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர்: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால், ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் 8.2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7447 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: தேசிய சுகாதார நிதியிலிருந்து மேலும் ரூ.3000 கோடி ஒதுக்கீடு.. மத்திய அரசு

மாநிலங்களுக்கான தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஏற்கனவே 1100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, மேலும் ரூ .3000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இந்தியாவில், கடந்த 24 ,மணி நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாவும், இதையடுத்து இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆகக் உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதில் ஜப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய 1445 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரம் – லாவ் அகர்வால் விளக்கம்..!!

கொரோனா  தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாக மத்திய சுகாதாரத்துறை  கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மனிதர்களிடையே கொரோனா மருந்தை பரிசோதிக்கும் அளவிற்கு ஆய்வு முன்னேற்றம் அடையவில்லை என அவர் கூறியுள்ளார். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோ குளோரோக்குயின் மாத்திரைகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பெருமளவு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்காக இதுவரை 44 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கொரோனோவுக்கு சிகிச்சை தருவது குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு ஒருங்கிணைந்த […]

Categories

Tech |