லெபனான் நாட்டிலிருந்து வந்த படகு சிரியா நாட்டின் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அகதிகள் 73 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாட்டில் பஞ்சம் அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் அதிகமானோர் கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி கொண்டிருக்கிறார்கள். லெபனான் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு பண மதிப்பு 90 சதவீதம் சரிவடைந்திருக்கிறது. மேலும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பணியை இழந்திருக்கிறார்கள். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை நிலையில் தவித்து வருகின்றன. இந்நிலையில் நாட்டில் இருந்து […]
Tag: லெபனான்
லெபனான் நாட்டைச் சேர்ந்த பெண் ஷலி ஹபீஸ். இவர் தன்னுடைய சகோதரியின் புற்றுநோயின் சிகிச்சைக்காக வங்கி ஒன்றில் இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் வரை சேமித்து வந்துள்ளார். இதனை அடுத்து தன்னுடைய சகோதரியின் சிகிச்சைக்காக வங்கியில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் மாதத்திற்கு 15 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் சகோதரிக்கு சிகிச்சை மேற்கொள்ள சிரமம் உண்டாகும் என்பதை உணர்ந்த அவர் வங்கியால் பாதிக்கப்பட்ட […]
லெபனான் நாட்டில் ஒரு பெண் தன் சகோதரியின் புற்றுநோய்க்கு சிகிச்சை செய்ய தன் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தானே திருடியிருக்கிறார். லெபனான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கு வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டில் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கே பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. எனவே, அவசரத்திற்கு மக்களால் தங்கள் பணத்தை எடுக்க முடியவில்லை. #Liban - Une déposante a investit la branche […]
லெபனான் நாட்டில் ஐந்து மாத கருவை கலைக்க மறுத்த மனைவியை, கணவன் உயிருடன் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லெபனான் நாட்டில் உள்ள திரிபோலி என்ற பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஹனா முஹம்மது கோடர் என்ற பெண்ணிடம் அவரின் கணவர் கருவை கலைக்குமாறு வாக்குவாதம் செய்திருக்கிறார். எனினும், முதல் தடவை தாயாவதால் கருவைக் கலைக்க மாட்டேன் என்று ஹனா உறுதியாக கூறியிருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த நபர், எரிவாயு கானிஸ்டரை பயன்படுத்தி […]
லெபனான் நாட்டில் நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 31 பேரை சட்டவிரோத குடியேற்ற முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கைது செய்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடவில்லை. இவர்கள் வடக்கு நகரமான காலா மூனில் இருந்து படகுமூலம் லெபனானில் தப்பிக்க முயன்றனர். இதனையடுத்து விசாரணை மற்றும் பிற சட்ட முறைகளுக்காக அவர்கள் நீதித்துறை அமைப்புகள் முன்பாக அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களாக லெபனானின் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியினால் நூற்றுக்கணக்கான அகதிகள் […]
லெபனான்நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தின் திரி போலி நகரில் 3 அடுக்குமாடி கட்டிடமானது நேற்று திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர். அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை. இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து மீட்பு குழுவினர் காயமடைந்த நபர்களை மீட்டு, உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். லெபனான் நாட்டு பிரதமர் பொறுப்பு வகிக்கும் நஜீப்மிகாடி, காயமடைந்த நபர்களுக்கு […]
லெபனானில் முதல் தடவையாக ஒரு நபர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு, உலக நாடுகளில் தற்போது பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கையாக சில வழிமுறைகளை பின்பற்றி கொண்டிருக்கின்றன. கனடா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட சுமார் 20-க்கும் அதிகமான நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. இந்நிலையில், முதல் தடவையாக லெபனானில் ஒரு நபர் குரங்கு […]
ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லெபனான் நாட்டில் பாலஸ்தீன முகாம்கள் அமைந்துள்ளன. அந்த முகாம்கள் அனைத்தும் ஹமாஸ் மற்றும் ஃபட்டாஹ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் துறைமுக நகரமான டயரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் நின்று கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது அருகிலிருந்து மசூதிக்கு பரவியுள்ளது. குறிப்பாக அந்த மசூதியை ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்கள் பதுக்கி வைக்கும் கிடங்காக பயன்படுத்தி […]
லெபனான் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக போராட்டங்கள் வெடித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் நாடு முழுவதும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக போராட்டங்கள் வெடித்துள்ளது. மேலும் தலைநகர் பெய்ரூட்டில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் டயர்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதற்கிடையே மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருவதாகவும், சட்ட விரோத கும்பல்கள் மக்களை அச்சுறுத்துவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் வீட்டு வாடகை 2 லட்சம் லிராவாக […]
தங்களிடம் ஒரு லட்சம் வீரர்கள் இருப்பதாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் நடந்த வெடிவிபத்தில் சுமார் 215 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் லெபனான் நாட்டில் நீடித்து வரும் அரசியல் குழப்பத்தை […]
லெபனான் நாட்டில் ஒரு சிறிய வகை விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லெபனான் ஏவியேஷன் கிளப்பிற்கு உரிய ஒரு சிறிய வகை விமானமானது, மத்திய தரைக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இருவர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிவில் பாதுகாப்பு குழுவினர், கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மாயமான விமானம் மற்றும் அதில் பயணம் மேற்கொண்டவர்களை தீவிரமாக தேடும் பணியை மேற்கொண்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சரான, Bassam Mawlawi கூறியிருக்கிறார். எனினும், […]
எரிபொருள் முழுமையாக தீர்ந்துவிட்டதால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாடு என்றாலே நமது நினைவிற்கு வருவது வெடிவிபத்து சம்பவம் தான். அதிலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அந்த வெடிவிபத்தில் 218 பேர் பலியாகியும் 7,000த்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த விபத்தினால் லெபனான் நாடு 15 மில்லியன் டாலர் அளவில் சேதத்தை சந்தித்துள்ளது. இதனால் நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தற்பொழுது அங்கு மின்சாரம் […]
சிறிய வகை பயிற்சி விமானம் ஒன்று மலையின் மீது மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வடக்கே கேசர்வான் மாகாணம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி நண்பகல் 1.30 மணியளவில் பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு விமானி உட்பட 2 பேர் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து இந்த விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு […]
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் 100 பேர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சூழலில் உலகில் நிகழ்ந்த அணுவல்லா பெரும் வெடிவிபத்துகள் குறித்து அறிந்துகொள்வோம். லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் இதுவரை கண்டிராத வகையில் நேற்று (ஆகஸ்ட் 4) மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் 100 பேர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். […]
லெபனானில் நடந்த வெடி விபத்து சம்பவம் பயங்கரவாதிகள் தாக்குதல் போன்று உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார். நேற்று லெபனான் நாட்டில் உள்ள ஒரு துறைமுக கிடங்கில் சக்திவாய்ந்த வெடி விபத்து ஒன்று நேர்ந்தது. அதில் 73 பேர் பலியாகி 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். திடீரென்று நடந்த இந்த விபத்துக்கான காரணங்கள் எதுவும் அறியமுடியவில்லை. மேலும் இந்த விபத்தில் என்ன வகையான வெடி பொருட்கள் வெடித்தது என்பது பற்றியும் உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. […]
லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகத்தில் நேற்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பெய்ரூட் நகரையே உலுக்கியது. 15 கிலோமீட்டர் தொலைவிற்கு இதன் அதிர்வலையை உணர்ந்ததாக மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த துயர விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் சேதமாகின. கண்ணாடிகள் அதிர்வால் நொறுங்கியது. அருகிலிருந்த கார்கள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டன. […]
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (ஆகஸ்ட் 4) சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப்பகுதியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பலத்த சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்கின்றது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள கட்டிடங்கள் நொறுங்கும் காட்சிகள் வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் […]