தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
Categories