தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவில்லை. 2022-23 ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நேரடி ஒப்புதல் தொடங்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு […]
Tag: வகுப்பு
ஐஐடி ஊழியர்களுக்கு புதிதாக இணைய வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி தொழில்துறையில் பணிபுரிபவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் இ- மொபிலிட்டி என்ற இடைவெளி சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணைய வழி படிப்புக்கான பாடத்திட்டத்தில் மொத்தம் 9 தொகுதிகள் உள்ளது. அதில் 4 தொகுதிகள் தொழில்துறையில் ஏற்கனவே பணிபுரிபவர்கள் எவ்வாறு தொழில்துறை நிபுணர்களின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் தொழில்நுட்பத்தில் உள்ள ட்ரெண்டுகள் தொழில்துறை தேவைகள் உள்ளிட்ட அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்படும். மேலும் இந்த […]
வீட்டில் தனியாக இருந்த ஆசிரியரை மாணவன் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை திருமணமாகி தனது கணவர் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். அவருடைய கணவரும் ஒரு பள்ளி ஆசிரியர். ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த மாணவனுடன் ஆசிரியருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் […]
தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த விடுமுறை ஜூன் 12ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 13 ஆம் தேதியிலிருந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 13ஆம் […]
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த வெங்கடேச சதீஷ் என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று ஆங்கில தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளார். பிறகு தேர்வை எழுதி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று அவருக்கு நெஞ்சு வலிக்கிறது என சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் பள்ளி அருகே இருந்த காவலர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரமான காரணத்தினால் போலீஸ் […]
தமிழகத்தில் மீண்டும் சுழற்சிமுறை வகுப்புகளை நடத்துவதற்கு அதிகாரிகள் ஆலோசித்ததாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனங்களில், ஏற்கனவே மாணவர் உட்பட 12 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரில் நான்கு பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை, எட்டு பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டும் இருந்தது. இதையடுத்து ஐஐடி வளாகத்தில் பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு முறையைக் கண்டுபிடிக்கவும் மருத்துவ […]
SAR Data Processing-ல் ஆன்லைன் வகுப்புகளை இஸ்ரோ அறிமுகம் செய்துள்ளது. EOS செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட பின், அது தரும் தகவல்களை சேகரிப்பது, பயன்படுத்துவது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்புகளுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், விருப்பமுள்ள மாணவர்கள் ஆராய்ச்சியாளர்கள் isat.iirs.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் 10, 11, […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான […]
திருக்கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் ஆகியவற்றோடு சேர்த்து திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதற்காக 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது: தீராக் காதல் திருக்குறள் என்ற பெயரில் 2 கோடி செலவில் திருக்கோவில்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறினார். இன்றைய தலைமுறையினரை திருக்குறள் சென்றடையும் வகையில் பல்சுவை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சிகள் உடன் இணைந்து இணைய வடிவிலும், அசைவூட்டம் […]
ஆன்லைன் வகுப்பின்போது மாணவியின் பெயரில் ஆபாச படங்களை அனுப்பிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்பில் மாணவி ஒருவரின் பெயரில் வாலிபர் ஒருவர் இணைந்து அவர் தனது செல்போனில் இருந்து வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கும், பாடம் பயிலும்மாணவிகளுக்கும் ஆபாச செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி வந்துள்ளார். இதனையடுத்து ஆன்லைன் வகுப்பு குரூப்பில் […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையின் போது எட்டாம் வகுப்பு வரை மாற்றுச் சான்று இல்லாமல் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கலாம் இன்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் தற்போது வரை நடைபெற்று வருகின்றது. கடந்த 14ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக பணிகளுக்காக பள்ளிகளுக்கு வரவேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. கடந்த 14ஆம் தேதி முதல் பள்ளிகளில் […]
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்புகளை ஆன்லைனில் தொடர பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து […]
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் காலியாக உள்ள நூலகர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனம் வேலை வகை: மத்திய அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 8 பணி : Steno – Grade III, Librarain, Staff Nurse, Technical Assistant (Lab), Senior Technical […]
ஊரடங்கு காலத்தில் இணைய வழியில் கல்வி தொடர்வதால் செல்போன்களின் தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்துள்ளது முழுமையான இணைய வழி, பகுதியளவு இணைய வழி என ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளிட்டுயிருக்கிறது. தொலைக்காட்சி மூலமும் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டாலும் ஊரடங்கு முடிவுக்கு வரும்வரை படிப்பதற்கு செல்போனை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய சூழல்தான் இருக்கிறது. இதனால் செல்போன்களின் விலை அதிகரித்திருக்கிறது. எப்போதும் இல்லாத அளவு செல்போன் விற்பனையும் அதிகரித்திருப்பதாக கூறுகிறார். குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் […]