டிசம்பர் 5ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. அதாவது, படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
Tag: வங்கக்கடல்
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கிலோ மீட்டர் உயரத்துக்கு வளிமண்டல சுழற்சி நிலவிவருகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுமென்று இந்திய வானிலை ஆய்வு மையமானது தெரிவித்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் புது காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. இதனால் நாளை முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி […]
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து, சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை […]
வங்கக்கடலில் 12 மணிநேரத்தில் புயல் உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும். அவ்வாறு புயலாக வலுப்பெற்று வடக்கு- வட கிழக்கு திசையில் நகர்ந்து வரும் 25ம் தேதி டிங்கோனா தீவு-சந்திவிப் இடையில் கரையை கடக்கும். இதனால் தமிழகம், புதுச்சேரியில் வருகிற 27ம் தேதி […]
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே நகர்ந்து மார்ச் 21ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வங்கக் கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே நகர்ந்து மார்ச் 21ஆம் தேதி புயலாக வலுப்பெறும். இந்த புயல் 22ஆம் தேதி வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கரையை நெருங்கும். இதன் காரணமாக அந்தமான் […]
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால் நாளை முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை தென்மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். குமரி கடல் பகுதியில் […]
மத்திய மேற்கு வங்க கடலில் ஜவாத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அந்தமான் அருகே நிலைகொண்டிருந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் ஜவாத் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஜவாத் புயல் உருவாகியது. இது மத்திய மேற்கு […]
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று ஒடிசா-ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதியதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் வடக்கு […]
டிசம்பர் 1ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் 2 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளதாவது: “டிசம்பர் 1ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தெற்கு அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி ஆகிய […]
அடுத்த 12 மணி நேரத்தில் தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்த […]
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது கரையைக் கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னைக்கு அதி கனமழை காண ரெட்அலர்ட் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது தாழ்வு மண்டலம் கரையை கடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையை கடக்கும் நேரத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
பா.மா.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையாவது, “தமிழக மீனவர்கள் 23 பேர், வங்கக் கடலின் கரையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு சொந்தமான 3 படகுகளையும் கைப்பற்றி உள்ளனர். இத்தகைய இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இலங்கைப் படையினர் கொரோனா காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறல்களை சற்று குறைத்து இருந்தனர். ஆனால் தற்பொழுது இத்தகைய அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றது. எனவே மத்திய அரசானது வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் […]
வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தெற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என்றும், […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடக்கு வங்க கடல் பகுதியில் ஜூன் 11 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் […]
குமரி மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு யாஷ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, பின்னர் அதிதீவிர புயலாக மாறி ஒடிஷா வங்கதேசம் இடையே 26ஆம் தேதி மாலையில் கரையை […]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் உருவாகிய டவ் தே புயல் கேரளா,மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை புரட்டிப்போட்டு சென்றது. அதனால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் தோன்றியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வங்க கடலில் புதிய காற்றழுத்தம் தோன்றியுள்ளது. அது வருகின்ற மே 23-ஆம் தேதி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக மே […]
தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 9 ஏற்கனவே வங்கக்கடலில் உருவான […]
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின் நாளை மறுநாள் ஆம்பன் புயலாக மாறும்.எனவே வங்கக்கடலில் நாளை 45-65 கி.மீ வேகத்தில் காற்று வீசம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை முதல் வரும் 18ம் தேதி வரை தென்கிழக்கு மற்றும் […]