Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்… பிரதமருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்…!!!

வங்கதேசத்தின் பிரதமரை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக நாட்டில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முழக்கமிட்டு வருகிறார்கள். அதன்படி கோலாப்பாக் விளையாட்டு மைதானத்தில் மக்கள் ஒன்று திரண்டு ஷேக் ஹசீனா, ஒரு வாக்குத்திருடர் என்று முழக்கமிட்டனர். மேலும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக திகழும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியினுடைய தலைமை அலுவலகத்தை பாதுகாப்பு படை முற்றுகையிட்டிருக்கிறது. இதனால், […]

Categories
உலக செய்திகள்

மர்மநபர்கள் வெறிச்செயல்…. துண்டுகளாக்கப்பட்ட காளி கோயிலின் சாமி சிலைகள்…!!!

வங்காள தேசத்தில் காளி கோவிலில் இருக்கும் சாமி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தின் ஜெனைதா பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் நள்ளிரவு நேரத்தில்,  நுழைந்த மர்ம நபர்கள் சாமி சிலைகளை உடைத்து, துண்டுகளாக்கி அதனை எடுத்து சென்று சிறிது தூரத்தில் வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளனர். காவல்துறையினர் இது தொடர்பில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். நவராத்திரி கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று, ஆற்றில் சிலைகளை கரைக்கும் நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

“பள்ளி மற்றும் கல்லுரிகள்” இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே….. பிரதமர் அறிவிப்பு…!!!!

வங்காளதேசத்தில் தற்போது மின்சார பற்றாக்குறை இருப்பதால், அந்நாட்டு அரசு மின்சார தட்டுப்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றது. அதன் ஒரு பகுதியாக வணிக நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றை இரவு 8 மணிக்கு மூடிவிட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவானது மின்சாரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நாளை முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்றவைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை […]

Categories
உலக செய்திகள்

லுங்கியுடன் சென்ற நபருக்கு டிக்கெட் மறுப்பு…. வைரலான வீடியோ… விளக்கமளித்த திரையரங்க நிர்வாகம்…!!!

வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் இருக்கும் மல்டி பிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் லுங்கியுடன் சென்ற நபருக்கு டிக்கெட் கொடுக்க மறுத்த வீடியோ வைரலானதை தொடர்ந்து திரையரங்கு நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது. வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் இயங்கி வரும் மல்டிபிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் ஒரு நபர் லுங்கியுடன் திரைப்படம் பார்க்க சென்றிருக்கிறார். அவருக்கு டிக்கெட் கொடுக்கப்படவில்லை. இது குறித்து அந்த நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், லுங்கியுடன் சென்றதால் தனக்கு டிக்கெட் தர மறுத்துவிட்டார்கள் என்று தெரிவித்திருந்தார். அந்த […]

Categories
உலக செய்திகள்

வங்காளதேசத்தில் வன்முறை…. சூறையாடப்பட்ட இந்துக்களின் வீடு, கடைகள்…. மர்ம கும்பல் வெறிச்செயல்….!!!

வங்காளதேசத்தில் இந்துக்களின் குடியிருப்புகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. வங்காள தேசத்தில் இந்துக்கள் வாழும் பகுதிகளில் நுழைந்த மர்ம நபர்கள் அவர்களின் குடியிருப்புகளையும், கடைகளையும் அடித்து நொறுக்கி சூறையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையமானது மதச்சார்பில்லாத நாட்டில் இவ்வாறான வன்முறைகள் நடப்பதை ஏற்க முடியாதது என்று கூறியிருக்கிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று வங்காள தேசத்தின் லோஹகரா என்னும் நகரத்தில் உள்ள இந்துக்கள் வாழும் குடியிருப்புகளில் சிலர் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் கனமழை…. குடியிருப்பில் சூழ்ந்த வெள்ளம்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!

வங்காளதேசத்தில்  மிக கனமழை பெய்து வருகிறது. வங்காளதேசத்தில் உள்ள  வடகிழக்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. வங்காளதேசத்தில் ஒவ்வொரு வருடமும் பருவமழையின்போது மழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம் போல் இருந்தாலும், கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தற்போது பேய் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த நாடு கடந்த 122 ஆண்டுகளில் கண்டிடாத அளவுக்கு மிகவும் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. 102 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கனமழையின் காரணமாக பல்வேறு ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வங்காளதேசத்தில் உள்ள வடகிழக்கு பகுதிகளில் கடந்த 1 வார காலமாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனையடுத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

வங்காளதேசம்: கொட்டி தீர்க்கும் மழை…. 41 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

வங்காளதேசத்தின் வட கிழக்கு பகுதிகளில் சென்ற ஒருவார காலமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இருக்கக்கூடிய பல மாவட்டங்கள் வெள்ளத்தில்மூழ்கி தத்தளித்து வருகிறது. வங்காளதேசத்தில் ஒவ்வொரு வருடமும் பருவ மழையின்போது மழை மற்றும் வெள்ளபாதிப்பு ஏற்படுவது வழக்கம் என்றபோதிலும், சென்ற காலங்களில் இல்லாத அளவுக்கு இப்போது கனத்த மழை கொட்டிவருகிறது. இதன் காரணமாக அந்நாடு கடந்த 122 வருடங்களில் பார்க்காத அளவிற்கு மிக மோசமான வெள்ளபாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக சில் ஹெட் […]

Categories
உலக செய்திகள்

வங்காளதேசம் கொள்கலன் கிடங்கில் திடீர் தீ விபத்து…. 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

வங்காளதேசத்தின் தென் கிழக்கு நகரமான சிதகுண்டாவிலுள்ள கொள்கலன் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் குறைந்தது 5 பேர் இறந்தனர். அத்துடன் சுமார் 100 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது நாட்டின் முக்கியமான கடல் துறைமுகமான சிட்டகாங்கிற்கு வெளியே 40 கி.மீ (25 மைல்) தொலைவிலுள்ள உள்நாட்டு கொள்கலன் சேமிப்பு நிலையத்தில் நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஜலால் அகமது தெரிவித்தார். இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புவீரர்கள் தீயை அணைக்க […]

Categories
உலக செய்திகள்

3 குற்றவாளிக்கு மரண தண்டனை…. பரபரப்பு தீர்ப்பளித்த நீதிபதிகள்….!!

வங்காளதேசத்தில் 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. வங்காளதேச விடுதலைப்போர் 1971ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது அப்துல் அஜிஸ் என்ற ஹாபுல், அவரது சகோதரர் முகமது அப்துல் மாட்டின், அப்துல் மன்னன் என்ற மோனாய் ஆகியோர் இந்தியாவில் உள்ள பர்புஞ்சிக்கு பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்த பயிற்சியை முடிக்காமல்  கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றனர். இந்நிலையில் சுதந்திர  வங்காளதேசத்தை உருவாக்க முயற்சி செய்த கொரில்லாகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தின் பக்கம் நின்று போரில் கலந்துகொண்ட ரசாக்கர் படையில் சேர்ந்தனர். […]

Categories
உலக செய்திகள்

பூட்டான் பிரதமரை சந்தித்த ஜெய்சங்கர்…. இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை…!!!

பூட்டான் நாட்டிற்கு சென்றிருக்கும் மத்திய மந்திரியான ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர், பூட்டான் வங்காளதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். நேற்று வங்காளதேச தலைநகரான டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியுமான அப்துல் மொமன்ட் போன்றோரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் அதனை எடுத்து பூடான் நாட்டிற்கு இன்று சென்று பிரதமர் பேசியுள்ளார். அதன்பின்பு, வெளியுறவு துறை மந்திரியையும் சந்தித்து பேசியுள்ளார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. மீண்டும் ஒரு அதிர்ச்சி!…. ஆயிரக்கணக்கான வீடுகள் நாசம்…. நிற்கதியாக நிற்கும் மக்கள்….!!!!

நேற்று முன்தினம் வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் என்ற பகுதியில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 1,200 குடிசைகள் எரிந்து சாம்பலானதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் போராடி தீ அணைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது […]

Categories
உலக செய்திகள்

வாவ்…! சூப்பர் சார்…. அசரவைத்த இந்திய ஜனாதிபதி…. மிக பழமை வாய்ந்த கோவில்…. பிரபல நாட்டின் வெறிச்செயல்…!!

வங்காளதேசத்தின் 50 ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக 3 நாள் சுற்றுப்பயணம் சென்ற இந்திய நாட்டின் ஜனாதிபதி அங்கிருந்து புறப்படும் போது புதிதாக புதுப்பித்து கட்டப்பட்ட காளியம்மன் கோவிலை திறந்து வைத்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினர்கள் கடந்த 1971ஆம் ஆண்டு மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீரம்னா காளியம்மன் கோவிலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்கள். அப்போது அந்த கோவிலில் தஞ்சம் புகுந்திருந்த சுமார் 1,000 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து வங்காளதேசம் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரமடைந்த பிறகு அந்நாடும், […]

Categories
உலக செய்திகள்

அட… வெரி சூப்பர் சார்… பிரபல நாட்டிற்கு சென்ற இந்திய ஜனாதிபதி…. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தலைவர்கள்….!!

வங்காள தேசத்தின் சுதந்திர பொன்விழாவிற்காக அங்கு 3 நாள் பயணம் சென்ற இந்திய ஜனாதிபதி இன்று அந்நாட்டின் பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளார். இந்திய நாட்டின் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் என்பவர் உள்ளார். இவர் வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று இந்தியாவின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் வங்காள தேசத்தின் பிரதமரான ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் வங்காளதேசம் மற்றும் இந்தியாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

“இந்த நாட்டையும் விட்டு வைக்கல”…. எப்படி பரவுச்சு….? வங்காளதேசத்தில் அதிர்ச்சி….!!

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கிரிக்கெட் வீராங்கனை இரண்டு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தற்போது பல நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த ஒமிக்ரானால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு இதுவரை ஒமிக்ரான் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பரவி இருந்தாலும் இதனால் இறப்பு எண்ணிக்கை எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் 33 பேர் […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 1 1/2 வருடங்களுக்கு பின்பாக…. பிரபல நாட்டில் கொரோனாவால் பதிவாகாத இறப்பு…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

வங்காளதேசத்தில் கிட்டத்தட்ட 1 1/2 வருடங்களுக்கு பின்பாக தற்போது சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி எந்த ஒரு நபரும் மடியவில்லை என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் வங்காளதேசத்தில் கிட்டத்தட்ட 1 1/2 வருடங்களுக்கு பின்னர் தற்போது சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த ஒரு நபரும் உயிரிழக்கவில்லை என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்றம்…. உப்பு நீரில் விவசாயம்…. பிரபல நாட்டு புதிய முயற்சி….!!

வங்காளதேசத்தில் ஆற்றில் மிதக்கும் மணல் படுக்கைகள் மூலம் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தென் ஆசிய நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் பருவ நிலை மாற்றம் மற்றும் சீதோஷணம் சீரான நிலையில் இல்லை. இதனால், பருவநிலை தவறுதலில் இருந்து தப்பிக்க அந்நாட்டு விவசாயிகள் புதிய முயற்சியில் களம் இறங்கி உள்ளனர். அதன்படி, விவசாயிகள் ஆற்றில் மிதக்க கூடிய மணல் படுக்கைகளை தயார் செய்து அதன் மூலம் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பருவநிலை தவறுதலால் […]

Categories
உலக செய்திகள்

‘விரிசலை உண்டாக்கும் செயல்’…. வெடிக்கும் வன்முறைச் சம்பவங்கள்…. கண்டனம் தெரிவித்த வங்காளதேச பிரதமர்….!!

வன்முறைச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் இஸ்லாமியர்களின் புனித நூல் என்று கூறப்படும் திருக்குர்ஆனை  அவமதிக்கும் விதத்தில் சில புகைப்படங்கள் முகநூலில் வெளியிடப்பட்டது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. அதிலும் துர்கா பூஜையின் போது கோவில்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாகின. இதில் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறையினால் 8 பேர் பலியானதாக தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இனி இத ராணுவம்தான் கண்காணிக்கும்…. மிக வேகமாக பரவும் கொரோனா…. வங்காளதேசத்தின் அதிரடி உத்தரவு….!!

வங்காளதேசத்தில் மிக வேகமாக கொரோனா அதிகரிப்பதைத் தொடர்ந்து கடந்த முறையை காட்டிலும் மிகவும் கடுமையான கட்டுப்பாடுடன் கூடிய மொத்தமாக 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை சரிசெய்ய அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இதனை முன்னிட்டு வங்காள நாட்டு அரசாங்கம் இன்று […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? ஊரடங்கை நீட்டித்த அரசாங்கம்…. முக்கிய தகவலை வெளியிட்ட பொதுநிர்வாக மந்திரி….!!

வங்காளதேசத்தில் ஒரேநாளில் 5,000 த்திற்கும் மேலான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதை முன்னிட்டு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இந்நிலையில் வங்காளதேசத்தில் ஒரேநாளில் 7,614 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். இதனால் தற்போது வங்காளதேசத்தில் முந்தைய ஊரடங்கு போல் இல்லாமல் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

வங்காளதேசத்தில் திடீர் பயங்கரம்… 52 பேர் உயிரிழந்த சோகம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

வங்காளதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தின் ரூப்கஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஹசீம் ஜூஸ் தொழிற்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பலரும் விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக மேல்தளத்தில் இருந்து கீழே குதிக்க முயற்சித்தபோது பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆலையில் ஆறு தளங்கள் இருந்தும் அவசர காலத்தில் வெளியேறுவதற்கான எந்த வழிகளும் இல்லை. […]

Categories
உலக செய்திகள்

பண்டிகைய சிறப்பா கொண்டாட நெனச்சாங்க …. ஆனா இப்படி நடந்துருச்சி …. பிரபல நாட்டில் நடந்த சோகம் ….!!!

 பண்டிகையை முன்னிட்டு பசுக்களை வாங்க காரில் சென்றுகொண்டிருந்தவர்கள் விபத்தில்   சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . வங்காளதேச நாட்டில் ஜஷூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக பசுக்களை வாங்க காரில் சென்றுள்ளனர். அவர்கள் பேனாபூல் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது நிலைதடுமாறிய கார் லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நயன் அலி , ஜோனி மியா  உட்பட 4 பேர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு …. வங்கதேச அரசு அதிரடி உத்தரவு …!!!

கொரோனா தொற்று பரவல்  அதிகரித்ததை தொடர்ந்து வங்காளதேசத்தில்  முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது . வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று  பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதில் தொற்றால் பாதிக்கப்பட்டு  ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மீண்டும் அந்நாட்டில் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அந்நாட்டின் பரவியிருப்பதால் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாடு தழுவிய முழு ஊரடங்கு மறு அறிவிப்பு […]

Categories
உலக செய்திகள்

போலி ஆதார் கார்டு மூலம் சிக்கிட்டாங்க …. சட்டவிரோதமாக தங்கியிருந்த 3 பேர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை …!!!

போலி ஆதார் கார்டு மூலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வங்காளதேச நாட்டில் இருந்து  பலரும் இந்தியாவில் மேற்கு வங்காளம் வழியாக சட்ட விரோதமாக நுழைந்து  போலி ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை தயாரித்து பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களில் தங்குவதுண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உரிய பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்தவர்களை  போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மீண்டும் திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக யாராவது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுடனான எல்லை மூடல் ….மேலும் தடையை நீட்டிக்கும் பிரபல நாடு …!!!

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவுடனான போக்குவரத்து தடையை வங்காளதேசம் மேலும் நீடிக்க இருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளது . இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா  வைரஸ் 2 ம் அலையின்  தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக இந்தியாவுடனான போக்குவரத்துக்கு வங்காளதேசம் தடை விதித்திருந்தது . அத்துடன் இந்தியாவுடனான எல்லைகளையும் மூடியது. இதன்பிறகு வங்காளதேசத்தில் தொடர்ந்து 2 முறை இந்தியாவுடனான எல்லை அடைப்பு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் டெல்டா வகை கொரோனா  வைரஸ் தாக்கம் […]

Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோதி பயங்கரம்… தத்தளித்து திணறிய மக்கள்… வங்காளதேசத்தில் சோகம்..!!

வங்காளதேசத்தில் உள்ள பத்மா நதியில் படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆற்றில் விழுந்து 25 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் உள்ள ஷிப்சார் நகர் அருகே பத்மா நதியில் மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த படகும், பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த மற்றொரு படகும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படகில் இருந்த பயணிகள் திடீரென்று ஆற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளிக்க ஆரம்பித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவிடம் இருந்து மனித குலத்தை விடுவிக்க வேண்டினேன்”…. பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை…!!

வங்காளதேசத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள காளி கோவிலில் நேற்று வழிபாடு செய்துள்ளார். வங்காளதேசம், 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து தனிநாடாக பிரிக்கப்பட்டது. அப்பிரிவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கின்ற நிலையில், அந்தப் பற்றின் காரணமாக வங்காளதேசத்தில்நேற்று நடந்த  50 -வது சுதந்திர பொன்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி […]

Categories
உலக செய்திகள்

நாட்டு மக்கள் நலம் பெற வேண்டும்… பிரார்த்தனை செய்த பிரதமர்… வைரலாகும் புகைப்படம்…!!!

வங்காளதேசம் 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் காளி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார். பாகிஸ்தான் பல போராட்டங்களுக்கு பிறகு கடந்த  1971 ஆம் ஆண்டு வங்களாதேசம் பிரிந்து தனி நாடாக மாறியாது.அதில் இந்தியாவிற்க்கு மிகப் பெரிய பங்கு உள்ளது . அதன் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா என்பவர் சுதந்திர பொன் விழாவில்(50-வது ஆண்டு) சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இந்திய நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். கடந்த ஒரு வருட காலமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்கதேசத்தை பந்தாடிய வெஸ்ட்இண்டீஸ்…! 2-0கணக்கில் முன்னிலை பெற்று கலக்கல் …!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது  டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெஸ்ட்இண்டீஸ் அணி அசதியுள்ளது. வங்காளதேசம் டாக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் – வங்காள தேசம் அணியின் இரண்டாவது டெஸ்டில் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. சில்வா 92 ரன்னிலும், போனர்  90 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர் 82 ரன்கள் எடுத்து […]

Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தை மிரட்டும் “கொரோனா”… 3 லட்சத்தை தாண்டிய பாதிப்பு…!!

வங்காளதேசத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி மனித பலியை வாங்கி வருகின்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த கொடிய வைரசால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் தாக்கம் வங்காள தேசத்திலும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் வங்காளதேசத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே […]

Categories
உலக செய்திகள்

15வது இடத்திற்கு தாவிய வங்காளதேசம்… கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?…!!!

வங்காளதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதில் பல்வேறு நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் வங்காளதேசம் 15வது இடத்தில் இருக்கின்றது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்நாட்டின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.94 இலட்சத்தை எட்டியுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

வங்காளதேசத்தில் அடங்காத கொரோனா… ஒரே நாளில் 2,868 பேர் பாதிப்பு…!!!

வங்காளதேசத்தில் ஒரேநாளில் மட்டும் 2,868 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகில் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புக்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.87 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,868 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கதேசத்தின் புதிய தூதர்… விக்ரம் குமார் துரைசாமி நியமனம்…!!

வங்கதேசத்தின் புதிய தூதராக கடந்த வியாழக்கிழமை அன்று விக்ரம் குமார் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவு துறை சேவை அலுவலகத்தில் 1992ஆம் வருடம் பணியில் சேர்ந்தவர் விக்ரம் குமார் துரைசாமி. இவர் வங்கதேசத்தின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, விக்ரம் குமார் துரைசாமி இந்திய வெளியுறவு துறையில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே கொரியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் தூதராக பணியாற்றிய அனுபவமுடையவர். டாக்காவின் தூதராக இருக்கும் ரிவா கங்குலி தாஸிற்கு பின் இந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

3.50 கோடி சுரண்டல்… முதல் இந்து தலைமை நீதிபதி மீது வழக்கு பதிவு…!!

3 1/2 கோடி சுரண்டல் வழக்கு குறித்து வங்காளதேசத்தின் இந்து முதல் நீதிபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் இந்து மதத்தில் இருந்து முதலாவது தலைமை நீதிபதியாக சென்ற 2015-ம் ஆண்டு பொறுப்பேற்றவர், சுரேந்திர குமார் சின்கா. இவருக்கும் அரசுக்கும் ஏற்பட்ட மோதலால், 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவி விலகி விட்டார். பிறகு அரசியலில் சேர அமெரிக்காவில் சென்று குடியேறினார். இதனிடையே, 2016-ம் ஆண்டு, விவசாயிகள் வங்கியில் 2 தொழிலதிபர்கள் போலி ஆவணங்களுடன் பெற்ற […]

Categories
உலக செய்திகள்

சீனா துணையோடு…. ”பாக். வங்கதேசத்தில் ஆதிக்கம்”… இந்தியா வேதனை …!!

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வங்காள தேச பிரதமர் இருவரும் அலைபேசியில் கலந்துரையாடல் மேற்கொண்டது கவலை அளித்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் வங்காள தேச பிரதமர்  ஷேக் ஹசீனாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு, வங்காள தேசபிரதமருடன்  ஜம்மு-காஷ்மீர் குறித்த தனது கவலைகளை இம்ரான் ஆன் கான் பகிர்ந்துள்ளதாவும் கூறபட்டுள்ளது. வங்காள தேசத்தில் வலுவான செல்வாக்கு செலுத்தி கொண்டிருக்கும் சீனா, இந்த தொலைபேசி உரையாடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற கவலைகள் எழுந்திருக்கின்றன. காஷ்மீர் பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் வேலை…. மனைவியின் நினைவில் உருவாக்கிய அழகான இதயம்…. வைரலாகும் புகைப்படம்….!!

மனைவியை நினைத்து இலைகளினால் வடிவமைத்த இதயத்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. துபாயில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் தெலுங்கானாவை சேர்ந்த ரமேஷ் ரங்கராஜன் காந்தி என்பவர். அவரின் மனைவி, தாய், தந்தை என அனைவரும் இந்தியாவில் உள்ளதால் ரமேஷின் நினைவுகளும் இந்தியாவிலேயே உள்ளது. இதற்குச் சான்றுதான்  அவர் உருவாக்கிய காய்ந்த இலைகளினால் ஆன இதயம். வழக்கம் போல் சாலையோரங்களில் இருந்த காய்ந்த இலைகளை சேகரித்து அள்ளிக்கொண்டு தன் பணியில் செயல்பட்டிருந்தார். அச்சமயம் தனது மனைவியின் நினைவு வந்ததால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு முன்னாள் மந்திரி பலி…. வங்கதேசத்தில் சோகம் …!!

வங்காள தேசத்தின் முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியான முகமது நசீம் கொரோனாவுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வங்காள தேசத்தை சேர்ந்தவர் முகமது நசீம். முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியான இவர் ஆளும் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். கடந்த 2ஆம் தேதி 72 வயதான முகமது நசீம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தலைநகர் டாக்காவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமானது தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! விடியற்காலையில் தீடீரென வெடித்து சிதறிய தரை தளம்?…கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்கா அருகே உள்ள நாராயண்கஞ்ச் மாவட்டத்தில் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேகரிக்க அதே குடியிருப்புக்கு கீழ் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால் நேற்று காலை கழிவுநீர் தொட்டி திடீரென அதிக சத்தத்துடன்  வெடித்தது. இதில் குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள  ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. […]

Categories

Tech |