Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வங்கியில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடி வந்த ஊழியர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எம்.பி.டி சாலையில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இங்கு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாடியில் இருந்த ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்ததால் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வங்கியில் இருந்து வந்த புகை…. வெளியேற்றப்பட்ட மக்கள்…. தடுக்கப்பட்ட பெரும் தீ விபத்து….!!

மயிலாடுதுறை வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில்  அதிஷ்டவசமாக  மக்கள் உயிர்தப்பினர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை மகாதான தெருவில்  தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று அமைந்துள்ளது.இந்த வங்கியில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் எதிர்பாராத விதமாக இன்வெட்டர் அறையிலிருந்து திடீரென புகை வந்தது. இந்த புகை வங்கி  முழுவதும் பரவியதால் அங்குள்ள  வாடிக்கையாளர்கள் வெளியேற்றபட்டனர். உடனே வங்கி ஊழியர்கள் அங்கு இருந்த தீயணைப்பு சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர் .இது குறித்து […]

Categories

Tech |