ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் பகுதியில் உள்ள மீரா மார்க்கில் ஒரு பிரபலமான வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை இந்த வங்கிக்குள் ஒரு திருடன் நுழைந்து கத்தியை காட்டி அங்குள்ள ஊழியர்களை மிரட்டியுள்ளான். அதோடு ஒருபையை எடுத்து அந்த பை முழுவதும் வங்கியில் இருக்கும் பணம் மற்றும் நகைகளால் நிரப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளான். இதனால் வங்கியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். ஆனால் அப்போது திடீரென வங்கியின் மேலாளர் […]
Tag: வங்கி கொள்ளை
சென்னையில் பெட்ரல் வங்கியில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைதாகி உள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட்ரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் பட்டப் பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும் ஊழியர்களை கட்டி போட்டுவிட்டு 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வங்கியின் சார்பில் பொதுமக்களிடமிருந்து அடமானமாக பெற்றிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனால் வங்கி கிளை முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் […]
ரஷ்ய நாட்டில் ஒரு பெண் தான் பணிபுரிந்த வங்கியிலிருந்து 7 மில்லியன் பவுண்டுகள் கொள்ளை அடித்து விட்டு தப்பிய நிலையில், தற்போது விசாரணையை சந்திக்கவிருக்கிறார். சைபீரியன் வங்கியில் பணிபுரிந்த Inessa Brandenburg என்ற பெண் கடந்த 2018 ஆம் வருடத்தில் 7 மில்லியன் பவுண்டுகளை கொள்ளையடித்துவிட்டு ஸ்பெயினிற்கு தப்பினார். இதற்கிடையில் வங்கி பெட்டகத்தில் சுமார் 561 மில்லியன் ரூபிள் தொகை காணாமல் போனதை ஒரு பணியாளர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த பெட்டகத்தில் பணத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக பொருட்கள் […]
அமெரிக்க நாட்டில் ஒரு நபர் வயதான பெண்மணி போன்று வேடமணிந்து வங்கியில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நாட்டில் கருப்பினத்தை சேர்ந்த ஒரு நபர் முகக்கவசம், வெள்ளை நிற காலணிகள் மற்றும் மலர் ஆடை அணிந்து கொண்டு வயதான பெண்மணி போன்ற தோற்றத்துடன் McDonough நகரத்தின் Chase வங்கிக்குள் நுழைந்திருக்கிறார். அதன் பிறகு, அங்கிருந்த பணியாளரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து பணத்தை எடுத்து தன் பையில் போட்டுக்கொண்டு வாகனத்தில் தப்பி […]
சினிமா பாணியில் ஒருவர் வங்கியை கொள்ளை அடித்துள்ளார். அதாவது கடந்த 1995-ம் ஆண்டு மெக் ஆர்த்தர் வீலர் என்பவர் தன்னுடைய வீட்டின் அருகே இருக்கும் 2 வங்கிகளை கொள்ளை அடித்துள்ளார். இந்த வங்கிகளில் கொள்ளை அடிக்கும் போது அவர் முகமூடி கூட அணியவில்லை. அதற்கு பதிலாக எலுமிச்சைப் பழச்சாறை பயன்படுத்தி கொள்ளை அடித்துள்ளார். அதாவது எலுமிச்சைப் பழச்சாறை பயன்படுத்தி invisible ink தயாரிப்பார்கள். இதனால் எலுமிச்சை பழச்சாறை தன்னுடைய முகத்தில் பூசினால் தன்னுடைய முகமும் மறைந்துவிடும் என […]