தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், நாளை புயலாக மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும், 10ம் தேதி ஆந்திரா- ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக உருவாகும் பட்சத்தில் அதற்கு […]
Tag: வங்க கடல்
வங்க கடலில், ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, புயலாக மாறியது. மத்திய மேற்கு வங்க கடலில் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது நாளை காலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை அருகே சென்றடையும். டிசம்பர் 5-ஆம் தேதி ஒரிசா மாநிலம் பூரி கடற்கரை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று புயலாக உருவெடுத்து நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயல் சின்னமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே நாளை தீவிர புயலாக கரையை […]
வங்ககடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு யாஷ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, பின்னர் அதிதீவிர புயலாக மாறி ஒடிஷா வங்கதேசம் இடையே 26ஆம் தேதி […]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயலானது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகருகிறது. முன்னதாக மணிக்கு ஏழு கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த வேகத்தில் நகர்ந்து வரும் பட்சத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான நேரத்தில் கரையை கடப்பதற்காக வாய்ப்பு இருக்கிறது. முன்னதாக சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 350 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் […]