அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய “ஹவாசோங்-17” என்னும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அதன் பின் எந்த ஒரு ஏவுகணை சோதனையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை நேற்று ஒரே நாளில் வடகொரியா சோதித்துள்ளது. சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து […]
Tag: வடகொரிய
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. வடகொரியா அவ்வப்போது தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தென் கொரியா ராணுவம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வடகொரியா பெரிய அளவில் ராணுவ அணிவகுப்பை நடத்த உள்ளது. மேலும் தலைநகரம் பியாங்யாங்கில் உள்ள விமான நிலையத்தை நோக்கி சுமார் 6000 படை வீரர்கள் வரை நகர்த்தப்பட்டு வருவதாகவும்” தெரிவித்துள்ளது.
வடகொரியா பொருளாதார தடைகளை நீக்க ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக வடகொரியா செயல்பட்டு வருகிறது. அணு ஆயுதங்களையும், ஆபத்தான ஏவுகணைகளையும் சோதனை செய்வதால், பல நாடுகள் வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. இதன் காரணமாக அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனினும் தங்கள் ராணுவத்திறனை மேம்படுத்த வடகொரியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. […]