Categories
உலக செய்திகள்

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வடகொரியா.. பதற்றத்தில் அண்டை நாடுகள்.. தொலை தூரம் பாயும் ஏவுகணை சோதனை..!!

அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வட கொரியா நீண்ட தொலைவில் இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது.  வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அமெரிக்காவும், ஜப்பானும் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த ஏவுகணை சோதனையானது ஜோ பைடன் அதிபரான பிறகு வடகொரியா மேற்கொள்ளும் முதல் பாலிஸ்டிக் சோதனையாகும். மேலும் ஆயுதங்கள் மற்றும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் சோதனை நடத்துவதாக கூறி வடகொரியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. ஏற்கனவே வட கொரியா இரு தினங்களுக்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் மீண்டும் தொடரும் ஏவுகணை சோதனை… அதிர்ச்சியூட்டும் வட கொரிய அரசு….!!!

அமெரிக்காவில் கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முதலில் தற்போது ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது ஐ.நா சபையின் தீர்மானங்களை மீறி தேச அளவில் எதிர்ப்புகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் வடகொரியா நடுத்தர மற்றும் தொலைதூர ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதித்து உலகிற்கே கடும் அச்சத்தை  ஏற்படுத்தி வருகிறது. வடகொரியாவின்  இந்த விதிமீறலை  கண்டித்து அமெரிக்கா நேரடியாக மோதி அவர்களின் பொருளாதார ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிடம் அடிபணிந்த மலேசியா…. உங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம்…. வடகொரியா அதிரடி முடிவு….!!

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடி பணிந்து வடகொரியாவை எதிர்த்து செய்த செயலுக்கு மலேசியாவின் தூதரகத்தை முற்றிலும் துண்டிக்க போவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் அணு ஆயுத விவகாரத்தில் இருந்து எப்போதும் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தான் வட கொரியாவை சேர்ந்த முன் சோல் மியோங் என்பவர் மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில் அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்த அமெரிக்க தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

தூதரக உறவை துண்டித்த வடகொரியா… கடும் கண்டனம் தெரிவிக்கும் மலேசியா… பரபரப்பு…!!!

இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவைத் துண்டிப்பதாக வடகொரியா அறிவித்ததற்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மலேசியாவில்  முன் சோல் மியோங்  என்பவர் 10 ஆண்டுகள் மேலாக  வசித்துவருகிறார். இவர் வடகொரியா நாட்டை சேர்ந்தவர். அவரின் மீது  அமெரிக்கா பண மோசடியில்  வழக்குப்பதிவு  செய்துள்ளது. அதனால் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று  மலேசிய அரசுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது .  அந்த  கோரிக்கையை  ஏற்ற மலேசிய அரசு அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது. இதை பற்றி  […]

Categories
உலக செய்திகள்

மலேசியா செய்யுறது சரியில்லை…! மன்னிக்கமுடியாத தப்பு…. எச்சரிக்கும் வடகொரியா …!!

வடகொரியா மலேசியாவுக்கு இடையே உள்ள தூதரக உறவுகள் முற்றிலும் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரியாவை சேர்ந்தவர் முன் சோல் மியாங். இவர் மலேசியாவின் முன்னணி நிறுவனத்தில்  வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் அமெரிக்கா மியாங் மீது பண மோசடி செய்ததாகவும், சட்டவிரோதமாக ஆவணங்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் மலேசியா காவல்துறை அவரை கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மலேசிய உச்ச நீதிமன்றம் மியாங்கை தங்களிடம் ஒப்படைக்க […]

Categories
உலக செய்திகள்

நிம்மதியா தூங்கணுமா? வேணாம்மா?… அமெரிக்காவை கண்டித்த வடகொரியா அதிபரின் தங்கை… பரபரப்பு…!!!

வடகொரிய   அதிபரின் தங்கை   அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்த  சம்பவம்  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.   உலக நாடுகளில் அமெரிக்கா வல்லரசு நாடாக திகழ்கிறது. அதனை போலவே  மிகவும் மர்மம் நிறைந்த நாடாக வட கொரியா உள்ளது. இந்ந இருநாடுகளுக்கும் , பல ஆண்டுகளாகவே பிரச்சினைகள் நிலவி வருகிறது .அதனால் இருநாடுகளும் எப்போது மோதிக் கொள்ளும் என்ற அச்சம் இருக்கும் . இந்நிலையில் வடகொரியா மற்றும் அமெரிக்கா நாடுகளின் கடற்படை கூட்டு பயிற்சி வரும் நாட்களில் நடைபெறயுள்ளாதால்  அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

மனித உரிமைகள் அத்துமீறல்…. கொரோனா தாக்கிய மக்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட அரசு… கண்டனம் தெரிவித்த சுவிஸ் நிர்வாகம்… !!

வடகொரியாவில் மனித உரிமைகள் அத்து மீறல்களை கண்டித்து சுவிஸ் நிர்வாகம் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது. வடகொரியாவில் மனித உரிமைகள் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான சுவிஸ் பிரதிநிதியான பெலிக்ஸ் பௌமான் மனித உரிமை பேரவையில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் அறிவித்த அறிக்கையில் மனித உரிமைகள் குறித்து எந்த ஒரு முன்னேற்றமும் வடகொரியாவில் இல்லை. இது குறித்து சுவிஸ் நிர்வாகம் வேதனை அடைவதாக கூறியுள்ளார். மேலும் மனித உரிமை அத்துமீறல்கள், கட்டாய உழைப்பு, தடுப்பு மையங்களில் சித்திரவதை […]

Categories
உலக செய்திகள்

இனிமே இந்த நாட்டுல எங்களால இருக்க முடியாது… நாட்டை விட்டு ஓடிய அதிகாரிகள்… என்ன காரணம்?…!!!

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் அந்நாட்டு அதிகாரிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ரஷ்யா தூதரக அதிகாரிகள் 8 பேர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 வயது சிறுமி உட்பட அனைவரும் பியோங்கியாங்கின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தீவிரமான காரணத்தால் கையால் தள்ளப்பட்ட ரயில் வண்டியில் வடகொரியாவை விட்டு சென்றனர். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பெண்கள் மற்றும் சூட்கேஸ்கள் ஏற்றப்பட்டுள்ளன.இந்த தள்ளுவண்டி ரயில்வே பாலத்தின்குறுக்கே ரஷ்ய  மூன்றாம் செயலாளர் விளாடிஸ்லாவ் […]

Categories
உலக செய்திகள்

தலைவரே…! என் கூட வாங்க…. சேர்த்து போகலாம்…. கிம்மை அழைத்த டிரம்ப்… வெளியான முக்கிய தகவல் …!!

வடகொரிய அதிபருக்கு அமெரிக்காவின் முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் விமானத்தில் லிஃப்ட் கொடுக்க விரும்பியது பிபிசி ஆவணப் படம் மூலம் தெரியவந்துள்ளது. அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகள் மற்றும் வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் தேசமாக வடகொரியா திகழ்கிறது. இதன் காரணமாக வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் சலைக்காமல் சாதூர்யமாக வடகொரிய அதிபர் கிம் சாங் சமாளித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அப்போது […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு நாட்கள் தலைகாட்டாதவர்… இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபரின் மனைவி… வெளியான புகைப்படம்…!!

கடந்த ஓராண்டாக வெளிநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த வடகொரிய அதிபரின் மனைவி தற்போது ஊடகங்களில் தோன்றியுள்ளார்.  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் மனைவி ரிசோல் ஜு பொது நிகழ்ச்சிகளில் முக்கியமானவற்றில் அடிக்கடி கணவருடன் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் கடந்த வருடம் ஜனவரியில் Lunar New Yesr என்ற விடுமுறைக்கான ஒரு நிகழ்ச்சியில் கடைசியாக பங்கேற்றுள்ளார். அதன்பின்பு ஒரு வருடமாக அவர் எந்த பொது நிகழ்விலும் பங்கேற்கவில்லை. எனவே அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள்

“ஃபைசர் தடுப்பு மருந்தின் தரவுகளை திருட முயற்சி”… வடகொரியா மீது குற்றம் சாட்டும் தென்கொரியா….!!

கணினிகளை ஹேக் செய்து கொரானாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பு மருந்தின் தொழில்நுட்ப தரவுகளை  வடகொரிய ஹேக்கர்கள் திருட முயற்சி செய்துள்ளதாக தென்கொரிய அரசு  குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜான்சன் & ஜான்சன், நோவாக்ஸ் இன்க் மற்றும் அஸ்ட்ராஜெனேகா போன்ற ஒன்பது தடுப்பு மருந்து நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசிகளின் தரவுகளை வடகொரிய ஹேக்கர்கள் திருட முயன்றது கண்டறியப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த திருட்டு முயற்சி அரங்கேறியுள்ளது. இதுகுறித்து தென்கொரியாவின் உளவுத்துறை நிறுவனம் கூறியதாவது , […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் தடுப்பூசியை திருட முயன்ற வடகொரியா… வெளியான பரபரப்பு தகவல்…!

அமெரிக்காவின் தடுப்பூசி தகவலை வடகொரியா திருட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவி வரும் நிலையில் வடகொரியாவில் ஒருவர் கூட இன்னும் கொரனோவால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜனாக தடுப்பூசியின் 2 மில்லியன் டோஸ்களை வடகொரியா எதிர்பார்த்து இருக்கிறது. கோவாக்ஸின் தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் படி வட கொரியாவிற்கு 1,992,000 டோஸ்களை ஆசிய நாடுகள் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் சிகிச்சையின் தொழில்நுட்பத் தகவல்களை திருடுவதற்காக அமெரிக்க மருந்து தயாரிப்பு […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி!” உலகையே அச்சுறுத்த புதிய ஆயுதம்… கைக்கோர்த்த பிரபல நாடுகள்.. ரகசிய தகவல் வெளியீடு …!!

ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய அறிக்கையில், வடகொரியா மற்றும் ஈரான் இணைந்து ஏவுகணை திட்டத்தை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய அறிக்கையில், வடகொரியா மற்றும் ஈரான் அதிக தூரத்திற்கு ஏவுகணையை மேம்படுத்தும் திட்டத்திற்கு மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்குரிய சில முக்கிய பாகங்களை ஈரானுக்கு வடகொரிய வழங்கிவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவை கடந்த வருடம் சமீபத்தில்தான் வடகொரியாவிலிருந்து  ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் சரியில்லை…! ஜோ பைடன் நல்ல மனுசன்… நெருக்கம் காட்டும் கிம் ஜாங்-உன் …!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.  வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் வடகொரியாவின் அணு ஆயுதம் தொடர்பாக பெருமைப்படுகிறார். மேலும் தன் நாட்டின் பொருளாதார தடைகளை உடைப்பதற்காக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2019 வருடத்தில் ஜூன் மாதத்தில் கிங் ஜாங் உன், ட்ரம்பை சந்தித்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபர்களில் ட்ரம்ப் தான் முதன்முதலாக கிம் ஜாங் […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து… என் சபதம் இதுதான்… கடிதம் மூலம் தெரிவித்த வட கொரிய அதிபர்…!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து கடிதம் எழுதி சபதம் எடுத்துள்ளார் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் கொரோனோவின் கடுமையான பாதிப்புகளிலும் கூட புதிய வருடத்தை மக்கள் நம்பிக்கையுடன் எதிர் கொண்டுள்ளார்கள். இதற்காக உலக தலைவர்கள், மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து புயல் பாதிப்பு, வேலையின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்து கொண்டிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

உணவை வீணடித்தால் கடும் தண்டனை… இனிமே யாரும் இப்படி செய்ய மாட்டாங்க… வடகொரியா மக்களுக்கு எச்சரிக்கை…!!!

வட கொரியா நாட்டில் உணவு மற்றும் உணவு பொருட்களை வீணடித்து கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் எச்சரித்துள்ளார். வட கொரியா நாட்டில் அடுத்தடுத்து வந்த மூன்று புயல்கள் மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதார தடை ஆகிய காரணங்களால் அந்நாட்டில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிபர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உணவை வீணடிப்பது பொருளாதாரத்தை வீண் அடிப்பதற்கு சமம். இனிமேல் நாட்டில் உணவை வீணடித்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” […]

Categories
உலக செய்திகள்

சிகரெட் பிடித்தால் தண்டனை… புதிய சட்டம்… வட கொரிய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

வட கொரியா நாட்டில் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மிகப்பெரிய சவாலாக வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அங்கு பல்வேறு அதிரடி மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்புகளே இல்லை என்றும் அதற்கு வட கொரிய மக்கள் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

கிம்முடன் இருப்பது யார்….? சகோதரியை ஒதுக்கிவிட்டாரா….? எழும் கேள்விகள்…!!

வடகொரிய அதிபர் கிம்முடன் புதிதாக பெண்ணொருவர் வருவதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. கிம் ஜாங் உன்னுடன் அதிகாரப்பூர்வ பயணங்களில் புதிதாக பெண்ணொருவர் தென்படுகிறார். அவரது பெயர் ஹாயோங் ஜான். கிம்மின் முன்னாள் காதலியான இவர் பிரபல பாப் பாடகி . முன்பு நிகழ்ச்சிகளில் கிம்முடன்  அவரது சகோதரி கிம் ஜாங் இருப்பார். ஆனால் தற்போது அவரை காணவில்லை என்பதால் இந்த பாப் பாடகி தான் கிம் சகோதரியின் இடத்தை பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் […]

Categories
உலக செய்திகள்

அதிபரின் மனைவி மாயம்…. கொலையா என நீடிக்கும் அச்சம்….? வடகொரியாவில் பரபரப்பு…!!

வெகுநாட்களாக வடகொரிய அதிபரின் மனைவி யார் கண்ணிலும் தென்படாததால் அவர் கிம்மால் கொல்லப்பட்டாரா என்ற அச்சம் எழுந்துள்ளது. அதிபர் கிம் ஜாங் உன் மனைவியும் வட கொரியாவின் முதல் பெண்மணியும் ஆன ரி சோல் ஜூ கடைசியாக ஜனவரி மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அதன் பிறகு யார் கண்ணுக்கும் அவர் தென்படாததால் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாரா அல்லது தனது கணவனால் கொலை செய்யப்பட்டாரா என்ற அச்சம் எழுந்துள்ளது. கடைசியாக அதிபரின் மனைவி ரி சோல் […]

Categories
உலக செய்திகள்

உலகையே மிரட்டும் வடகொரியா….. சமாளிக்க ஜப்பான் அதிரடி வியூகம்….!!

வடகொரியாவிடம் இருந்து தப்பிக்க ஜப்பான் தனது ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்த போவதாக கூறியுள்ளது. வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதனைத்தொடர்ந்து அதிசக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது. எப்போதும் தனது ஏவுகணை மற்றும் ஆயுத பலத்தை வெளிப்படுத்தும் வகையில் தான் வடகொரியா ராணுவ அணிவகுப்பை நடத்தும். இந்நிலையில் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இது குறித்து கவலை தெரிவித்துள்ளன. அதேநேரம் ஜப்பான் வடகொரியாவின் அச்சுறுத்தலில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! என்னை மன்னிச்சுக்கோங்க….! கண்கலங்கி அழுத கிம்…. வெளியாகிய பரபரப்பு காரணம் …!!

ஆண்டு விழாவில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் மக்கள் முன்னிலையில் கண்கலங்கி மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது வடகொரியாவில் கடந்த சனிக்கிழமை அன்று ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ராணுவ அணிவகுப்பு மற்றும் ஹவாசாங் -16 என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்துதல் போன்றவை நடந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து வெளியான செய்தியில், “வானத்தை விட […]

Categories
உலக செய்திகள்

25,00,000 மக்கள் காலி ? ரெடியான ஏவுகணை…. குறிவைத்த வடகொரியா ….!!

வடகொரியா நாட்டில் எந்த மூலைக்கும் எடுத்து செல்லும் வகையில் உலக அளவில் மிகப்பெரிய அணு ஆயுத ஏவுகணை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது வடகொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஏவுகணையை வல்லரசு நாடுகளால் கூட அளிக்க முடியாது என்பது மட்டுமல்லாமல் எதிர்ப்புகளை தகர்க்கும் சக்தி கொண்டது இந்த ஏவுகணை எனக் கூறப்படுகிறது. ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு வடகொரியாவில் நடத்தப்பட்ட விழாவில் ராணுவ அணிவகுப்பு மற்றும் உலகின் அணைத்து நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக மாற உள்ள ஹவாசாங் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டில் கொரோனா இல்லை… நாங்கள் விடுபட்டு விட்டோம்… வட கொரிய அதிபர்… பெருமிதப் பேச்சு…!!!

வடகொரிய நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று அந்நாட்டு அதிபர் பெருமிதம் கூறியுள்ளார். வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம் நேற்று நடந்தது. அதில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜான் அன் பங்கேற்றார். அதன்பிறகு ராணுவ அணிவகுப்பு அங்கு நடந்தது. அப்போது பார்வையாளர்கள் முன் உரையாற்றிய அவர் பேசும்போது, “கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கூட ஏற்படாமல் நல்ல உடல் ஆரோக்கியம் உடன் மக்கள் இருப்பதால் அவர்களுக்கு நான் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் கிம் மேஜையில் இருந்த பொருள் என்ன?… களத்தில் இறங்கி கண்டுபிடித்த மக்கள்..!!

வடகொரிய அதிபரின் மேசையில் இருந்த பொருள் குறித்து தகவலை டுவிட்டர் பயனாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அவரது மேசையில் இருந்த பொருள் ஒன்று பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. அது என்ன பொருள் என்பதை தெரிந்து கொள்ள டிவிட்டர் பயனர்கள் தங்கள் முயற்சியைத் தொடங்கினார். அதோடு அவர்களது முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. இந்த மாதம் தனது ரயிலில் அதிபர் கிம் ஜாங் உன் பயணித்தபோது […]

Categories
உலக செய்திகள்

நீர்மூழ்கி ஏவுகணை சோதனை… வடகொரியா தயார்… வெளியான செயற்கைக்கோள் படங்கள்…!!!

வடகொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் நீர்மூழ்கி ஏவுகணைப் சோதனைக்கு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், வடகொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவக்கூடிய நீர்மூழ்கி ஏவுகணை சோதனைக்கு தயாராகி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பான செயற்கைக்கோள் படங்களை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள் வடகொரியாவின் சின்போ கப்பல் தளத்தில் அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். இருந்தாலும் அது பராமரிப்பு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் கட்டுப்பாடு… கண்டதும் சுட வட கொரிய அரசு உத்தரவு…!!!

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர கண்டதும் சுடும் உத்தரவை வட கொரிய அதிபர் பிறப்பித்துள்ளார். வடகொரியாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார். மிகக்கடுமையான இந்த புதிய நடவடிக்கை வரும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வட கொரிய பொதுமக்கள் சீன எல்லை அருகே சென்று அதற்கான காரணத்தை அறியாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகரப் போலீசார் […]

Categories
உலக செய்திகள்

சகோதரிக்கு கூடுதல் அதிகாரம்… வட கொரிய அதிபர் அதிரடி முடிவு..!!!

வடகொரிய அதிபர் தன் சகோதரிக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கி சிறப்பித்துள்ளார். வடகொரிய நாட்டில் கிம் ஜாங் அன் குடும்பத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் சிலநாட்களாக அதிபரின் தங்கை கிம் யோ ஜாங், செல்வாக்கு பெருமளவு பெருகியுள்ளது. அவர் அமெரிக்க மற்றும் தென்கொரிய தொடர்பான கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அதிபர் கிம் ஜாங் அன், அவரின் சகோதரி மற்றும் வேறுசில உதவியாளர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளார். ஆனால் தென் கொரிய தலைநகர் சியோலில் […]

Categories
உலக செய்திகள்

சகோதரியிடம் ஆட்சியை ஒப்படைக்க முடிவு… வட கொரிய அதிபர் அதிர்ச்சித் தகவல்…!!!

வட கொரிய அதிபர் ஆட்சி அதிகாரத்தை தன் தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்(38) உடல்நிலை பற்றியும், அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு செய்திகள் வெளியாகின. அச்சமயத்தில் அவரின் தங்கை வடகொரிய ஆட்சியை நிர்வகித்து வந்துள்ளார். அதன்பின்னர் கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங் நகரில் இருக்கின்ற சஞ்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாண்டமான உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் அவர் தனது […]

Categories
உலக செய்திகள்

உணவு பற்றாக்குறை…வட கொரிய அதிபர் செய்த அதிர்ச்சி செயல்…!!!

வடகொரியாவில் உணவு பற்றாக்குறையை சமாளிப்பதற்காக வளர்ப்பு நாய்களை ஒப்படைக்கும்படி அதிபர் உத்தரவிட்டுள்ளார். வட கொரியாவில் உள்ள 25.5 மில்லியன் மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன என்று ஐநா சில நாட்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உணவு பற்றாக்குறை பிரச்சினை காரணமாக நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் மீது நாட்டு மக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. உணவு பற்றாக்குறை பற்றி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுடன் […]

Categories
உலக செய்திகள்

நாய்களை வேட்டையாடும் வட கொரிய அதிகாரிகள்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

நாட்டில் நிலவும் உணவு பற்றாக்குறையை தீர்ப்பதற்கு நாய்களை உணவாக பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வட கொரிய அதிகாரிகள் குடிமக்களிடம் இருந்து நாய்களை பறித்துச் சென்று ஹோட்டல்களுக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள், வட கொரிய அதிபரை முதுகுக்குப் பின்னால் சபித்து வருவதாக கூறப்படுகிறது. அந்நாட்டில் செல்லப்பிராணியை வளர்த்து வருபவர்கள், அதனைக் கொடுக்க மறுத்தால், அது நாட்டின் தலைமைக்குக் கீழ்படிய மறுத்ததாக கருதப்படும் என்ற காரணத்தினால் வேறு வழி இல்லாமல் மக்கள் செல்லப் பிராணிகளை […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவின் சைபர் தாக்குதல்… துல்லியமாக முறியடித்த இஸ்ரேல்…!!!

தங்களின் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது வடகொரியா தொடுத்த சைபர் தாக்குதலை மிகத்துல்லியமாக முறியடித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. வடகொரியா ராணுவத்தின் உளவு அமைப்பான லாக் 110 கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் லாசரஸ் என்ற குழு இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் தங்களின் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது வடகொரியா தொடுத்த சைபர் தாக்குதலை மிகத் துல்லியமாக முறியடித்து விட்டோம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலில் இருந்து திருடப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் வடகொரியா தனது தோழமை நாடான ஈரானுக்கு […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவில் முதல் கொரோனா பரிசோதனை…. இதுவரை வெளிவராத முடிவுகளால் சர்ச்சை….!!

வட கொரியா நாட்டில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நபருக்கு தற்போது வரை முடிவுகள் வெளிவராத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சந்தேகத்தின் பெயரில் முதல் நபராக ஒருவருக்கு‌ கொரோனா பரிசோதனை ‌ செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை அவருக்கு சோதனை முடிவுகள் என்னவென்று தெரியவில்லை. மேலும் முதல் கட்டம் மற்றும் இரண்டாவது கட்டத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த 3,635 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தகவல் […]

Categories
உலக செய்திகள்

இனி போர் கிடையாது…. எந்த அச்சுறுத்தலும் கிடையாது…. அதிபரின் பேச்சால் மக்கள் மகிழ்ச்சி…!!

வடகொரியாவில் இனி போர் நடக்காது என கூறி அதிபர் கிம் ஜாங் அன் மக்களை உற்சாகப்படுத்தி உள்ளார். வடகொரியாவில் கொரியாவுடனான போர் முடிவுக்கு கொண்டுவர ஏற்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் 67 வது ஆண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று கூறி அந் நாட்டு மக்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய கிம் ஜாங் அன், “வடகொரியா எதிரி நாடுகளிடம் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவில் நுழைந்த கொரோனா… “முதன் முதலாக தொற்று உறுதி”… முழு ஊரடங்கா?… வெளியான தகவல்..!!

வடகொரியாவில் முதன் முறையாக ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலக நாடுகள் முழுவதும் பரவி மக்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் ஒரு கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 6 லட்சத்திற்கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் வட கொரியா நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு இல்லை அந்நாட்டு அதிபர் கூறியிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுபாடுகளால் உணவு பற்றாக்குறை… பசியை தடுக்கும் மருந்து… வடகொரியாவின் புதிய முயற்சி…!!

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பெரும் தொற்று காரணமாக கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே மக்களுக்கு பசியை போக்க மருந்து தயாரிக்கப்பட்டு  வருகிறது. உலக நாடுகளில் தற்போது பொருளாதார தடை மற்றும் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வரும் வடகொரியா, பட்டினியால் கஷ்டப்படும் மக்களுக்கு கொடுத்த அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நடத்திய அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு  ஐ.நா. பொருளாதார தடை விதித்திருக்கிறது. அமெரிக்காவுடன் இரண்டு முறை […]

Categories
உலக செய்திகள்

எங்க நாட்டுல கொரோனாவா…. வாய்ப்பே இல்லை…. கெத்து காட்டிய அதிபர்….!!

கொரோனாவை முற்றிலும் தடுத்துவிட்டதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசு நாடுகளில் இந்த வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வர தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதிலும் பரவலை தடுப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் திறக்கும் பள்ளிகள்….. பயம் வேண்டாம் பாதுகாப்பு பலமா இருக்கு….!!

வடகொரியாவில் மீண்டும் பாதுகாப்பான முறையில் பள்ளிகள் இயங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் வடகொரியாவில் இதுவரை எந்த ஒரு கொரோனா வழக்குகளும் பதிவாகவில்லை. இந்நிலையில் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றது. ஆனால் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு அங்கு பலமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என அச்சத்தில் இருந்து வரும் நிலையில், […]

Categories
உலக செய்திகள்

“மறுபடியும் முதல இருந்தா” மீண்டும் மாயமான கிம் ஜாங் உன்…. பரவ தொடங்கிய வதந்திகள்…!!

அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மாயமானதை தொடர்ந்து அவர் பற்றிய தகவல்கள் மறுபடியும் பரவ தொடங்கியுள்ளது சில மாதங்களுக்கு முன்பு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் யார் கண்களிலும் படாமல் இருந்ததால் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததாகவும் பல வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் அனைத்தையும் பொய்யாக்கி உரத்தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்து நின்றார் அதிபர் கிம் ஜாங் உன். தற்போது மீண்டும் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

இப்போ வேண்டாம்… ஒத்தி வைத்த கிம் ஜாங் உன்… விழிப்புடன் இருக்கும் தென் கொரியா..!!

தென் கொரியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை ஒத்திவைக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார் வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே பல வருடங்களாக மோதல் நிலை இருந்து வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு இரண்டு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியதை தொடர்ந்து பகை உணர்வு குறைந்து இணக்கமான சூழல் உருவாகியது. ஆனால் தற்போது மீண்டும் தென் கொரியாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவில் இருந்து தப்பி தென் கொரியா சென்றவர்கள் துண்டு பிரசுரங்களை […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் பதிலடி பயங்கரமாக இருக்கும்” வடகொரியாவை எச்சரித்த தென்கொரியா…!!

இனி வடகொரியா தாக்குதலில் ஈடுபட்டால் எங்களது பதிலடி மிகவும் மோசமானதாக இருக்கும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது சில தினங்களாக தென்கொரியாவை மிகவும் கடுமையாக வடகொரியா மிரட்டி வந்தது. 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரண்டு நாடுகளுக்கும் பொதுவான தொடர்பு அலுவலகத்தை தகர்க்கப் போவதாகவும்,  இனி இரு நாட்டிடையே எந்த உறவும் இல்லை என்றும், எதிரி நாடாகவே பார்க்கப்படும் என்றும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இதனிடையே தென் கொரியா எல்லைமீறி நடந்து கொள்வதாகவும் இதனால் தங்கள் ராணுவத்தினரிடம் நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

அண்ணனை போல ஆக்ரோஷம்… சொல்லி அடித்த கிம் ஜாங் தங்கை… தகவல் தொடர்பு அலுவலகம் தகர்ப்பு …!!

வடகொரியா – தென்கொரியா நாடுகளுக்கு இடையே இருந்த தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் சில நாட்களுக்கு முன்பாக வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி சிலர் பலூன்கள் விட்டு வடகொரியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி இருந்தார்கள். அந்த பலூன்கள் வடகொரிய எல்லை தாண்டி வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதனால் வட கொரியாவின் ஆட்சியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை உலகளவில் பரபரப்பை […]

Categories
உலக செய்திகள்

அண்ணன் எனக்கு அதிகாரம் கொடுத்து இருக்காரு…. தென் கொரியாவை எச்சரிக்கும் கிம் ஜாங் உன் சகோதரி …!!

தென் கொரியா மீது ராணுவம் மூலம் நடவடிக்கை எடுக்கப்போவதாக வட கொரிய அதிபர் கிம் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் வெளியிட்ட அறிக்கையில் அதிபர் கிம் ஜாங் உன்னும் வடகொரியாவின் அரசும் எனக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதனை பயன்படுத்தி ராணுவ தளபதிக்கு தென் கொரியா மீது அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். நாட்டு மக்களின் கோபத்தை குறைக்க ராணுவம் கண்டிப்பாக நடவடிக்கைகளை […]

Categories
உலக செய்திகள்

விதிக்கப்பட்ட பொருளாதார தடை “தன் கையே தனக்கு உதவி” அதிபர் கிம்மின் அதிரடி முடிவு…!!

பொருளாதார தடையினால் சொந்த நாட்டிலேயே உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு அதிபர் கிம் ஜாங் முடிவு செய்துள்ளார். வடகொரியா அரசின் செயல்திட்டங்கள் உலகிற்கு தெரியாத அளவிற்கு ரகசியமாகவே இருந்து வருவதாக பல கருத்துக்கள் இருந்து வருகின்றது. அதற்கேற்றாற் போல் அதிபர் கிம் பற்றிய தகவல்கள் வெளியில் வராமல் இருந்தது. பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்ததாக தகவல் பரவியது. ஆனால் அதிபரின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாக தென்கொரியா தெரிவித்தது. இந்நிலையில் அணு ஆயுத சோதனை நடத்தியதாக குற்றம் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சுறுத்தல்” வடகொரியாவுக்கு நாங்க இருக்கோம்…. உதவ முன்வந்த சீனா…..!!

கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட வட கொரியாவிற்கு சீனா உதவி செய்யும் என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் சீனாவின் அண்டை நாடான வட கொரியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை. கொரோனா பரவ தொடங்கியதுமே நாட்டின் எல்லைகளை மூடி சர்வதேச பயணங்களுக்கு வடகொரியா தடை விதித்தது. இதன் காரணமாகவே மக்கள் கொரோனாவிற்கு ஆளாகாமல் பாதுகாக்க முடிந்ததாக […]

Categories
உலக செய்திகள்

பயப்படாதீங்க..! நாங்க இருக்கோம்…நம்பிக்கை கொடுத்த சீன அதிபர் ஜின்பிங்

சீனாவில் தோன்றிய  கொடியா கொரோனா உலகையே  அச்சுறுத்தி வரும் நிலையில் அதன் தாக்கம் அந்நாட்டில்  குறைந்துள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவின் அண்டை நாடான வடகொரியாவில் தற்போது வரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என வடகொரியா கூறிவருகிறது. வடகொரியா  சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே தனது அனைத்து எல்லைகளையும் மூடி சீல் வைத்தது, மேலும் சர்வதேச போக்குவரத்துக்கு தடை விதித்து இருந்தது.  இதனால் தற்போது […]

Categories
உலக செய்திகள்

இது கிம் இல்லை…! ”போலியை நடமாட விடும் அதிபர்” அதிர்ச்சி தகவல் …!!

இருபது நாட்களுக்குப் பிறகு வெளியுலகிற்கு வந்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உண்மையான கிம் தானா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது உலக நாடுகள் கொரோனா தொற்றினால் பெரும் பாதிப்படைந்து திணறி வரும் சூழலில் அணுஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை தன் பக்கம் திருப்பிய சர்ச்சைக்குரிய நாயகனான வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின்னர் சுமார் 20 நாட்கள் வேறு எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

“கொள்கை பரப்பாளர்களுக்கு நன்றி”… அதிபர் கிம் வெளியிட்டுள்ள செய்தி!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கட்சியின் கொள்கை பரப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஏப்ரல் 11 கட்சி கூட்டத்தில் கலந்து  கொண்ட பின்னர் யார் கண்களுக்கும் தென்படாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்து விட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் உர தொழிற்சாலை ஒன்றை திறப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிவந்தார் கிம். தொழிற்சாலை திறப்பு […]

Categories
உலக செய்திகள்

கெத்தாக வந்து ரிப்பன் கட் பண்ணிட்டு… வேலையை காட்டிய கிம்… விழிபிதுங்கும் தென் கொரியா!

வடகொரிய அதிபர் கிம் வந்ததும் கொரிய எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  இரண்டாம் உலகப்போருக்கு பின் ஒரே நாடாக இருந்த கொரியா வடகொரியா, தென்கொரியா என இருநாடுகளாக பிரிந்து சென்று விட்டது. அதை தொடர்ந்து தான் இருநாடுகளுக்கும் இடையே பகை உருவானது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் எப்போதுமே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. 2011 ஆம் ஆண்டில் வடகொரியாவின் அதிபராக 36 வயதான கிம் ஜாங் உன் பொறுப்பு […]

Categories
உலக செய்திகள்

அதிபர் கிம் ஜாங் 20 நாட்கள் என்ன செய்தார்?… உண்மையை உடைத்த தென் கொரியா!

தலைமறைவாக இருந்து கிம் என்ன செய்தார் என எங்களுக்கு தெரியும் என தென்கொரியா அதிகாரி கூறியுள்ளார்  வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஏப்ரல் 11 அன்று கட்சிக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின்னர் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், யார் கண்ணுக்கும் தென்படாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் அவர் மாரடைப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அவர் கோமாவிற்கு சென்றதாகவும், மரணமடைந்து விட்டதாகவும் ஏராளமான வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் கிம் ஜாங் திடீரென […]

Categories
உலக செய்திகள்

அதிபர் கிம் மணிக்கட்டை பாருங்க… அறுவை சிகிச்சை நடந்ததா?… ஆனாலும் கெத்தா தம் அடிக்கிறாரு… குழப்பத்தில் உலக நாடுகள்!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் கையில் கை மணிக்கட்டில் இருக்கும் அடையாளத்தால் அவர் அறுவை சிகிச்சை செய்திருக்கக்கூடும் என கருதுகின்றனர் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் சில தினங்களாக யார் கண்களுக்கும் புலப்படாமல் இருந்ததால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் இறந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று உரத்தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு கிம் ஜாங் உன் வந்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வடகொரிய அரசு ஊடகங்கள் […]

Categories

Tech |