கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 40 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் எஸ்.கே..எம் ஆயில் நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக லாரி மோதிய விபத்தில் வட மாநில வாலிபர் உயிரிழந்ததால் திடீர் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தின்போது வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் சில போலீஸ்காரர்கள் எண்ணெய் ஆலை வளாகத்தில் உள்ள காவலாளி அறைக்கு சென்று மறைந்து இருந்தார்கள். ஆனாலும் வடமாநில […]
Tag: வடமாநில தொழிலாளர்கள்
ரிக் வண்டி அலுவலகத்தில் நுழைந்து பணத்தை திருடிய 9 வடமாநில தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள சிங்களங்கோம்பை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னேரி கைகாட்டியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான ரிக் வண்டியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 9 வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். அந்த 9 பேரும் அலுவலகம் அருகிலேயே வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 7ஆம் […]
நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக வடமாநில தொழிலாளர்களை அழைத்து அவர்களிடம் பணத்தை பறித்து ஏமாற்றிய ரிக் லாரி உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள மொளசி அம்மாசிபாளையம் பகுதியில் ரவி(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரகாஷ்(28) ரிக் லாரி வைத்து தொழில் நடத்தி வருகின்றார். இந்நிலையில் லாரி டிரைவராக அசாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல்(35), மற்றும் சமீர்(40) வேலை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து ரவி, […]
தேனியில் வடமாநில தொழிலாளர்கள் இ-பதிவின்றி கேரளாவிற்கு செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தேனி மாவட்டம் வருசநாட்டிலிருக்கும் வெள்ளிமலை வனப்பகுதியில் அமைந்திருக்கும் தனியார் எஸ்டேட்டில் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சம்பளம் குறைவாக இருந்ததால் அவர்கள் கேரளாவிற்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி அனைவரும் அங்கிருந்து கிளம்பி கேரள எல்லையை ஒட்டியிருக்கும் குமணன் தொழுவிற்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அங்கிருந்து வேறு வாகனம் கிடைக்காமல் அங்கேயே நீண்ட […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
காட்டு யானைகள் கூட்டம் கோயமுத்தூர் சின்கோனா பகுதியில் வந்து வடமாநில தொழிலாளர்கள் வீட்டை சேதப்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டம் சின்கோனா பத்தாம்பத்தி பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.நேற்று இரவு அந்த பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் தொழிலாளர்களின் வீட்டை சேதப்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அவர்களின் தோட்டங்களையும் சேதப்படுத்தியது. கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் நடந்து வருகிறது. அந்தப் பகுதி மற்றும் அதற்கு சுற்றியுள்ள வால்பாறை, சிறுகுன்றா, வாட்டர் பால், கவர்க்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள […]
1,650 வடமாநில தொழிலாளர்கள் 3 ரயில்கள் மூலமாக அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களது சொந்த மாநிலங்களுக்கு ஏராளமானோர் அனுப்பிவைக்கப்பட்டு மேலும் சொந்த மாநிலம் செல்ல விரும்புவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 450 பேர் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்து 200 பேர் நேற்று […]
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆறு அணு உலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அணு உலை அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், 3ம் மற்றும் 4ம் உலைகள் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இந்த கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் தமிழக பணியாளர்கள் மட்டுமின்றி சுமார் ஆயிரக்கணக்கான […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கன்னியாகுமரியில் ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், அதனை தொடர்ந்து 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு ஏப்., 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகளை தவிர்த்து மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் ஒரே இடத்தில் குவிந்த 100க்கும் மேற்பட்ட வட மாநில […]