வடகொரியாவில் 1.34 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வடகொரியா நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் கடந்த 12-ஆம் தேதி உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ஊரடங்கு பொதுமுடக்கத்தையும் அறிவித்துள்ளர். கோவிட் தடுப்பூசி நுழைந்திடாத அந்த நாட்டுக்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமெரிக்காவும், தென்கொரியாவும் முன் வந்தன. இந்நிலையில் இந்தத் தொற்று பற்றி வெளிப்படையாக கருத்து கூறாத வடகொரியா, தற்போது நோயை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. […]
Tag: வட கொரியா
வட கொரியாவில் அனைத்துமே தவறாக தான் நடக்கிறது என பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் வடகொரியாவிலும் 4 நல்ல விஷயங்கள் பின்பற்றப்படுகிறது. அதாவது வட கொரியா நாட்டில் சிறிய குற்றம் செய்தால் கூட அதற்கு தூக்கு தண்டனைதான் வழங்குவார்கள். இதனால் மக்கள் குற்ற செயல்களில் பெரும்பாலும் ஈடுபடுவதே கிடையாது. இதனையடுத்து நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அரசாங்கம் இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுக்கும். இதன் காரணமாக வடகொரியாவில் அனைத்து மக்களுக்கும் சொந்தமாக வீடு இருக்கும். அதன்பிறகு கல்வி மற்றும் […]
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்ன செய்தாலும் அது சர்வதேச அளவில் பேசும் பொருளாகவும், வித்தியாசமானதாகவும் மாறுகிறது. அதாவது அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் துணிச்சல், அணு ஆயுத சோதனை செய்யும் தைரியம், வடகொரியாவில் அவர் விதிக்கும் கட்டுப்பாடுகள் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கிறது. தற்போது 79 வயதான பிரபல வடகொரிய செய்தி தொகுப்பாளருக்கு கிம் ஜாங் உன் அளித்துள்ள பரிசு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது வடகொரியாவில் பிரபல செய்தி தொகுப்பாளர்களில் ஒருவரான […]
வடகொரிய நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன்-ன் ஒன்று விட்ட தாத்தா கிம் யோங் ஜூ மரணமடைந்தார். வட கொரிய நாட்டை நிறுவிய கிம் இல் சுங் என்ற தலைவரின் இளைய சகோதரர் தான் கிம் யோங் ஜூ. தற்போது அதிபர், தன் தாத்தா மரணத்திற்கு இரங்கல் செய்தி வெளியிட்டதாக அரசாங்கத்தின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், கிம் யோங் ஜூ கட்சிக்கான கொள்கைகளை செயல்படுத்துவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார். நாட்டின், ஆளும் கட்சியிலும், அரசாங்கத்தின் முக்கிய […]
அறுவடை காலத்தில் உணவு பொருட்கள் திருட்டு போனாலோ அல்லது ஏமாற்றம் செய்யப்பட்டாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் ஐ.நா பாதுகாப்பு அமைப்பின் முடிவுகளையும் பொருட்படுத்தாமல் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வட கொரியா அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதனை செய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது ஐ.நா பாதுகாப்பு அமைப்பு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அங்கு கடும் பொருளாதார […]
ஆணு ஆயதங்கள் விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தென் கொரியா கேட்டுக்கொண்டுள்ளது. வட கொரியா அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தென் கொரியாவிற்கான அமெரிக்க தூதர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தென் கொரியா அமெரிக்க தூதரான சங் கிம் கூறியதில் “எங்கள் நாடு முழுவதும் அணு ஆயுதம் இன்றி இருப்பதே முதன்மையான குறிக்கோள் ஆகும். ஆனால் கடந்த 6 வாரங்களாக வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனையினால் நாட்டின் […]
வடகொரிய அரசானது ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியுள்ளது. வட கொரியா நாடானது தான் நடத்திவரும் ஏவுகணை தாக்குதலில் இருந்து பின் வாங்க மறுக்கிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதால் உலகமானது கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது. மேலும் அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் வட கொரியா, கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகின்றது. இதனையடுத்து வட கொரியாவானது ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியுள்ளது. இது குறித்து வடகொரிய அரசின் செய்தி நிறுவனமானது விமான எதிர்ப்பு […]
வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா ராணுவம் தகவல் அளித்துள்ளது. வடகொரிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியில் நேற்று காலை குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை அந்நாட்டு அரசு சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் ஏதும் வழங்காமல் வடகொரியா சோதனை நடத்தியது உலக நாடுகளுக்கு பதற்றத்தை உண்டாக்கியது. மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது. குறிப்பாக […]
அதிபர் கிம் ஜாங் உன் மிகவும் மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் புகைப்படமானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்றவுடன் நமது அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது அவருடைய ஆட்சிமுறை மற்றும் கொலு கொலு கன்னங்கள். அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வட கொரியாவின் அதிபராக இருந்து வருகிறார். இதனையடுத்து நெடுநாட்களாக அவர் உடல் பருமன் காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்தார் என தகவல்கள் கசிந்தன. இதற்கிடையில் தற்பொழுது […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது . வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் நடந்த அரசு பொதுக்குழு கூட்டத்தில் மிகவும் எடை குறைந்து காணப்பட்டார்.இதனால் அதிபர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் வட கொரியா நாட்டில் நடக்கும் விஷயங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாவதில்லை.இந்த நிலையில் தென்கொரியா உளவு நிறுவன தலைவர் கிம் யுங் கீ […]
ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், வடகொரியாவின் அணு ஆயுத பிரச்சனைக்கு சரியான முடிவு கண்டறியப்படும் என்று தெரிவித்துள்ளார். வடகொரியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முடிவுகளை மீறி, சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் அடிக்கடி சோதித்து வருகிறது. எனவே ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், இவற்றை முழுவதுமாக தடுத்து கொரிய தீபகற்பத்தை, அணு ஆயுதமில்லாத பிரதேசமாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனவே […]
வடகொரியாவின் எல்லையோர மாகாணங்களில் இருக்கும் புறாக்கள் மற்றும் பூனைகள் அனைத்தும் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், பக்கத்து நாடான சீனாவிலிருந்து கொரோனாவை புறாக்கள் தான் தங்கள் நாட்டில் பரப்புவதாக கருதுகிறாராம். எனவே எல்லையோர மாகாணங்களில் கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கிறது. அதன்படி Sinuiju மற்றும் Hyesan ஆகிய மாகாணங்களில் இருக்கும் புறாக்கள் மற்றும் பூனைகள் அனைத்தையும் கொல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் Hyesan மாகாணத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், ரகசியமாக வளர்த்து […]
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னால் தன்னை குறி வைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னால் தன்னை குறிவைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆர்வலரான 27 வயது யியோன்மி பார்க் எனும் பெண் தெரிவித்துள்ளார். சவுதி பத்திரிக்கையாளர்களுக்கு துருக்கி தூதரகத்தில் நேர்ந்த நிலைமை தனக்கும் ஏற்படலாம் என்ற பயத்தையும் அவர் வெளிபடுத்தியுள்ளார். மேலும் யியான்மியின் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த போது கிம் ஜாங் […]
மலேசிய நாட்டில் உள்ள வடகொரிய தலைவர்களும் அவரது உதவியாளர்களும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள வடகொரிய தலைவர்களும் அவர்களின் உதவியாளர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மலேசியா அரசாங்கம் அதிரடி முடிவு எடுத்துள்ளது . இதற்கு காரணம் கடந்த 2017 முதல் வட கொரியா தலைநகர் பியோங்கியாங்கில் உள்ள மலேசியா தூதரகம் செயல்பாட்டில் இல்லை . அதனால் மலேசிய அரசாங்கம் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் பல முறை தொடர்பு கொண்டாலும் வட கொரியா நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நிர்வாகத்துடன் மூன்று கட்ட பேச்சவார்த்தைகள் நடத்தியது. ஆனால் அந்த பேச்சவார்த்தை பலனளிக்கவில்லை. இதனால் வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை கைவிட வேண்டும் என்று வட கொரிய […]
வடகொரிய எல்லைகள் அடைக்கப்பட்டதால் ரஷ்ய தூதரக அதிகாரியின் குடும்பம் பெட்டி படுக்கைகளுடன் தங்கள் நாட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக வடகொரியா தனது எல்லைகளை மூடியதால் Vladislav Sorokin என்ற ரஷ்ய தூதரக அதிகாரியின் குடும்பத்தை சேர்ந்த 8 பேர் ரயில்பாதையில் டிராலியின் மூலம் தங்களது பெட்டி படுக்கையை தள்ளிக் கொண்டு வரும் வீடியோ வெளியாகி உள்ளது. தங்கள் நாட்டில் கொரோனா என்ற ஒரு வைரஸே பரவவில்லை என்றும் அதனால் ஒருவருக்கு கூட பாதிப்பு […]
தென்கொரியா அதிபரிடமும் நாட்டு மக்களிடமும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு இணக்கமான உறவு ஏதுமில்லை. இரண்டு நாடுகளுக்கிடையே போர் மூளும் சூழல் தான் இருந்து வந்தது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து இரு நாடுகள் இடையே இருந்த பனிப்போர் விலகி சுமுகமான உறவு மேம்பட்டது. அதே வருடம் இரண்டு நாட்டு […]
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும், மூன்று மாத கடின உழைப்பு தண்டனையும் வட கொரிய அரசு விதித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் சென்ற டிசம்பர் மாதத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயானது தற்போது வரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 1.47 கோடி மக்களின் உடல்களில் இத்தகைய வைரஸ் புகுந்து உள்ளது. அது மட்டுமன்றி 6 லட்சத்திற்கும் மேலான உயிர்களையும் பறித்துள்ளது. இதனால் பல்வேறு உலக நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் வடகொரியா தங்கள் […]
பிரிட்டனின் செயல்கள் ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக வடகொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடகொரியா சிறைகளில் கடுமையான வேலை சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றில் ஈடுபட்டதற்கு எதிராக அபராதம் விதிக்க போவதாக பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிம் ஜாங் வுன் தலைமையிலான நிர்வாகம் அமெரிக்காவின் கைப்பொம்மையாக உருவாகி வரும் பிரிட்டான் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என பதிவு செய்துள்ளனர். வடகொரியாவில் இயங்கி வரும் ஏழு மாநில பாதுகாப்பு பணியகம் மற்றும் இரண்டு மக்கள் அமைப்பு […]
தென் கொரியாவின் அனைத்து தொடர்புகளையும் வடகொரியா துண்டித்து கொள்ள முடிவு எடுத்துள்ளது. வடகொரியா தென்கொரியாவிற்கு இடையிலான இராணுவ மற்றும் அரசியல் தொடர்புகளை துண்டித்துக் கொள்ளும் என வடகொரிய அரசு அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. ஹனோய் நகரில் கடந்த ஆண்டில் கிம் மற்றும் அமெரிக்க அதிபருக்கு இடையே நடந்த உச்சி மாநாடு தோல்வியில் முடிந்ததால் தென்கொரியா உடனான தொடர்பை துண்டித்ததுடன், அணுசக்தி பேச்சு வார்த்தைகளையும் நிறுத்திவிட்டது. மேலும் கிம்மின் சகோதரி தென் கொரியாவுடன் கையெழுத்தான […]
இந்த வார இறுதியில் வட கொரிய அதிபர் கிம்முடன் டெலிபோனில் பேசுவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு பின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமலும், பொது வெளியில் தென்படாமல் இருந்ததால் அவர் இறந்து போய் விட்டதாகவும், கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக எழுந்து நடக்க கூட முடியாத நிலையில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் தென்னாப்பிரிக்க பிரதமருக்கு தனது கைப்பட கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்றும், அவர் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடுகிறார் என்றும் பல்வேறு செய்திகள் உலக நாடுகள் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஹாங்காங்கின் தொலைக் காட்சி இயக்குனர் அவர் மரணித்து விட்டார் என்று தெரிவித்தார். ஆனால் […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த மாமாவை நிர்வாணமாக்கி 120 நாய்களை வைத்து கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், மரணப்படுக்கையில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் கடந்த சில நாட்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று தென்கொரிய அதிகாரி நேற்று உறுதி செய்துள்ளார். அதிபர் கிம் சாதாரண ஆளே கிடையாது. சர்வாதிகாரியாக அறியப்படும் […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே சரிந்ததாகவும், மருத்துவர்கள் கை நடுக்கத்தால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை தவறாக சென்றதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது என்வென்றால் வடகொரிய அதிபர் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று தான். அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்றும், அவர் மரணப் படுக்கையில் உயிருக்கு போராடுகிறார் என்றும் பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகிறது. […]
வட கொரியா கடலில் ஏவி அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று வட கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் இருக்கும் வோன்சான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி இந்த இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.சுமார் 240 கி.மீ. தூரம் சென்ற இந்த ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறைந்த தூர ஏவுகணைகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற ஏவுகணைகள் மேலும் ஏவப்படலாம் […]