வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதையான்(76). இவரது மனைவி ராணியம்மாள்(72). இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தில் உள்ள தங்களது விவசாய நிலத்தில் கோதையான்-ராணியம்மாள் தம்பதியினர் வீடு கட்டி குடும்பத்துடன் அங்கு வசிக்க சென்றனர். அப்போதிலிருந்தே இவர்கள் குடிக்கவும், சமையல் செய்யவும் மழைநீரையே பயன்படுத்தி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, “நாங்கள் இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து […]
Tag: வந்தவாசி
திருவண்ணாமலை வந்தவாசி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த எஸ்.முஸ்தபா சேலம் மாவட்ட தாரமங்கலம் நகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அங்கு நகராட்சி ஆணையராக பதிவு இருந்த எம். மங்கையரசன் வந்தவாசி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வந்தவாசி ஆணையராக இன்று அவர் பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், வந்தவாசி நகரில் நிலுவையில் உள்ள வீட்டு வரி, தொழில் வரி, நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை நிலுவைத்தொகை வசூல் செய்து நகரை மேம்படுத்த முயற்சி செய்வேன். மேலும் முழுமையாக பிளாஸ்டிக் […]
ரூ 2500 லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் நெற்குணம் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள்(63). இவர் வந்தவாசி காந்தி ரோட்டில் உள்ள வீட்டு வசதி சங்கத்தில் கடந்த 1997-ஆம் வருடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ 70,000 கடனாக வாங்கி உள்ளார். கடந்த 2012ஆம் வருடம் பெருமாள் கடனை திருப்பி செலுத்தி உள்ள நிலையில், அடமான பத்திரம், […]
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பழங்குடியின பெண்ணிற்கு பாலியல் தொல்லையளித்த வனக்காவலர் கைது செய்யப்பட்டார்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே பெரணமல்லூர் பகுதியில் வசித்து வரும் பழங்குடியின பெண் மற்றும் அந்தப் பெண்ணின் சகோதரி இருவரும் விறகு வெட்டும் கூலி வேலைக்காக வாழ்குடை கிராமம் காட்டுப் பகுதியின் வழியாகச் சென்றுள்ளனர் ,அப்போது அங்கு உள்ள ஆரணி சரக வன காவலர் செல்வராஜ் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர் தவறாக நடக்கும் போது […]
வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டி என்ற கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கீழ்நமண்டி கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான தடயங்கள் இருப்பதாக குண்ணகம்பூண்டியை சேர்ந்த மின்வாரிய அலுவலர் பழனி என்பவர் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன், ஆய்வாளர்கள் சுதாகர், பழனிச்சாமி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கிராம நிர்வாக […]
வந்தவாசியில் 3 மருத்துவர்களுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 3 பேருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வந்தவாசி அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டடம் மூடப்பட்டதால் வளாகத்தில் உள்ள மரத்தடியில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
வந்தவாசி அருகே மின்வேலியில் உயிரிழந்த மாற்றுத்திறனாளியை பெண் காவல் அதிகாரி தூக்கி சென்ற சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று வந்தவாசி அருகே கரும்புத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியல் சிக்கிய மாற்றுத்திறனாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மின் வேலியில் சிக்கி உயிரிழந்த அந்த மாற்று திறனாளியை தூக்குமாறு அந்த பெண் காவல்துறை அதிகாரி பொது மக்களிடம் கேட்டபோது கொரோனா அச்சம் காரணமாக தூக்க மறுத்து விட்டார்கள். இருப்பினும் […]