கூலித்தொழிலாளி வீட்டில் நுழைந்த உடும்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள அமராவதி நகர் 3வது தெருவில் மூக்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்குள் திடீரென உடும்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மூக்கையா உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த போடி தீயணைப்பு அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து சுமார் 1 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு […]
Tag: வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
சிவகங்கை தேவகோட்டை அருகே 223 ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி அருகே கடம்பாகுடி, கே.சிறுவனூர் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களை ஒட்டியுள்ள 223 ஏக்கர் வனக்காடுகள் வனத்துறைக்கு சொந்தமானது. இது ராமநாதபுரம் மாவட்டமாக இருந்த போது அந்த வனகாடுகள் அருகே ஓடுகின்ற ஆறுகளில் மணல் அரிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக 1976-ஆம் ஆண்டு தென்னை வளர்ப்பு செய்து கொள்ள பலருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் […]
பெரம்பலூரில் கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் செல்லும் வழியில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. அது அப்பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்ற விவசாயிக்கு சொந்தமான கிணறு. அந்த கிணற்று தண்ணீரில் ஆண் மயில் ஒன்று நேற்று காலை தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்துள்ளனர். இதையடுத்து பெரம்பலூரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் […]