சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேவசம்போர்டு ஊழியர்கள் தங்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகே சுமார் 8 யானைகள் கூட்டமாக வந்தது. இதை பார்த்த ஊழியர்கள் அலறி அடித்தபடி ஒடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், ஒலி எழுப்பியும் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் […]
Tag: வனத்துறையினர்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வயல்களுக்குள் புகுந்து நெற்கதிர்களை மிதித்து சேதப்படுத்துவதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் கூடலூர் வனவர் செல்லத்துரை […]
கேரள மாநிலம் கண்ணூர் அருகில் ஆராளம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகளின் அட்டூழியம் அதிகரித்து வந்தது. இதனால் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி பொதுமக்கள் வனத்துறையிலிருந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்த அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினரின் கண்ணுக்கு காட்டுயானை ஒன்று தெரியவந்தது. அந்த யானையை வனப் பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த காட்டு யானை வனத்துறையினரை துரத்தியது. இதன் காரணமாக உயிருக்கு பயந்து […]
யாருக்கும் தெரியாமல் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஆடம்பர காரில் இருந்த ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த சுஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை விஷயமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக காரில் மலப்புரம் வழிக்கடவு சென்றுள்ளார். அப்போது தான் ஓடி வந்த காரை அடர்ந்து காட்டுப் பகுதியில் சாலை ஓரம் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன் பின் பணிகளை முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது […]
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கணேசபுரம், பள்ளங்கி, கோம்பை போன்ற மலை கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்த வண்ணம் இருக்கிறது. வீடுகளை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் விளை நிலங்களையும் காட்டு யானை சேதப்படுத்தி வருகின்றது. இந்த சூழலில் நேற்று காலை 9 மணி அளவில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் ஒற்றை யானை உலா வந்திருக்கின்றது. அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ மாணவிகள் யானையை கண்டு அதிர்ச்சடைந்துள்ளனர். மேலும் […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகில் உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப்பகுதியை விட்டு சிறுத்தை ஒன்று வெளியேறியது. அந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள குப்புசாமி என்பவருடைய தோட்டத்தில் […]
நீலகிரி கூடலூர் அருகே ஒற்றை காட்டு யானை சுற்றி வருவதால், கிராம மக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரோட்டு பாறை பகுதியில், 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை தாக்கி கொன்ற ராதகிருஷ்ணன் என்ற காட்டு யானை, சில நாட்களுக்கு முன்னர் ஆனந்தன் என்பவரை தாக்கி கொன்றது. இதனையடுத்து தற்போது வனப்பகுதியில் மறைந்துள்ள ராதகிருஷ்ணன் யானையை கும்கி யானைகளின் உதவியோடு தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், […]
விவசாயி வீட்டு தோட்டத்தில் புகுந்த 5 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் பகுதியில் வசித்து வரும் விவசாயியான நாட்டாமை சந்திரன்(46) தனது தோட்டத்தில் கற்கள் குவிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை சந்திரன் மற்றும் தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த கற்களின் நடுவே சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். […]
குடியிருப்பு பகுதிகளில் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் 9 காட்டு யானைகள் புகுந்துள்ளது. இவை ரன்னிமேடு, காட்டேரி, கரும்பாலம் பில்லி மலை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு இருந்தது. இந்நிலையில் கிளிண்டல் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்த […]
வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள எம்.ஆர்.டி நகரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றுள்ளனர். அப்போது பொதுமக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த கூட்டம் ராமேஸ்வரம் […]
கிராமத்திலுள்ள ஏரியில் ஏராளமான கொக்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தாமரை குளம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கட்ரமணபுரம் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அய்யனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் நேற்று காலை அதிகமான கொக்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அங்கு சென்று பார்த்த பொதுமக்கள் ஆங்காங்கே அரிசியில் ஏதோ கலந்து […]
முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 4 பேரை கொன்ற புலியை பிடிக்க 11.34 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஆண்டு ஆட்கொல்லி புலி 14 பேரை கொன்றது. இதனை அடுத்து 24 செப்டம்பர் 2002 முதல் 15 அக்டோபர் 2022 வரையில் கடுமையான தேடுதல் வேட்டைக்குப் பின்னர் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்தனர். கிட்டத்தட்ட 23 நாட்களுக்கும் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்த மானை மீட்டு வனத்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோரையாறு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 4 வயது ஆண் மான் ஒன்று பலத்த காயமடைந்த நிலையில் சாலையோரம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற வன செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் விபத்தில் காயமடைந்த மானை மீட்டு நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து […]
வனத்துரையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு பேருந்துகளை சிறை பிடித்த 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள மஞ்சனூற்று பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை புலிகள் காப்பகமாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மலைப்பகுதிக்கு செல்ல முயன்ற கிராம மக்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் சென்ற அரசு பேருந்துகளை […]
இயற்பியலின் கொள்கையை பயன்படுத்தி யானை பள்ளத்திலிருந்து வனத்துறையினர் மீட்ட வீடியோ தற்போது வைரலாக பரவியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மிதினாபுரத்தில் நேற்று நள்ளிரவு யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது என வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து டி.எப்.ஓ சந்தீப் பெர்வால் மற்றும் ஏ.டி.எப்.ஓ க்கள் தலைமையில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்அதிகாலை 4:00 மணி அளவில் மீட்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து யானை பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது. இதனை ஐஎப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது […]
சிறுத்தை குட்டி ஒன்றின் தலையில் பிளாஸ்டிக் கேன் மாட்டிக் கொண்ட துயரச் சம்பவம் மகராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. சிறுத்தை குட்டி ஒன்று அங்கு உள்ள வனப்பகுதியில் தலையில் ஒரு பிளாஸ்டிக் டப்பா மாட்டிக்கொண்ட நிலையில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது. இது பத்லாபூர் கிராமத்துக்கு அருகே தென்பட்ட நிலையில், அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் அந்த சிறுத்தையை தேடும் […]
கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வந்த சிறுத்தை பூனை ஜோடியை வனத்துறையினர் மீட்டு பின் மர்கலா மலைப்பகுதியில் விட்டு விட்டனர். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் 85 ஆயிரம் ரூபாய்க்கு சிறுத்தை பூனை ஜோடி கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. சிறுத்தை பூனை என்பது ஒரு சிறிய காட்டுப் பூனை ஆகும். மேலும் இது பார்ப்பதற்கு சிறுத்தை குட்டிகள் போல் இருக்கும். இவை தென் மற்றும் கிழக்கு ஆசியாவின் காட்டுப்பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த அரியவகை காட்டுப் பூனைகள் அவற்றின் ரோமங்களுக்காகவும் […]
திருப்பூர் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக சிறுத்தை புலி ஒன்று பொதுமக்களை தாக்கி வந்தது. அதில் 7 பேர் பயங்கர காயம் அடைந்துள்ளனர். அனைவரும் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிறுத்தை புலியை பிடிக்க வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில் நேற்று சிறுத்தை பிடிப்பட்டது. மயக்க ஊசியை போட்டு புலியை வலை வீசி வனத்துறையினர் பிடித்தனர். இதற்கிடையே புலியை பிடிக்கும் முயற்சியில் தன்னுயிரை […]
ஆந்திர மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் சாலையை கடக்காத வகையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை காட்டு யானைகள் உடைக்க முயற்சித்தபோது வனத்துறையினர் அவற்றை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொங்கு நாடா எனும் பகுதி அடர் வன பகுதியாக அறியப்படுகிறது. இந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் ரயில்வே பாதையில் வாகனங்கள், விலங்குகள் நுழையாத வகையில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை காட்டு யானைகள் உடைக்க முயற்சித்து ஊருக்குள் நுழைய முற்பட்டன. ஆனால் வனதுறையினர் […]
சீன நாட்டில் சிவப்பு மான் என்று அழைக்கப்படும் Yarkand இனத்தை சேர்ந்த மான்கள் குட்டிகளோடு ஆற்றை கடந்து செல்லும் வீடியோ வனத்துறையினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. சீனாவில் வனத்துறை அதிகாரிகளால் சிவப்பு மான்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது தான், இந்த மான்கள் Tarim ஆற்றை கடந்து செல்லும் அழகான காட்சி தங்கள் கண்களில் பட்டதாக வனத்துறையினர் கூறியுள்ளார்கள். மேலும், சீனாவை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், கடந்த 2010 ஆம் வருடத்தில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்ட […]
வனத்துறையினர் மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவ மாணவிகள் சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்ட புறவழிச்சாலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாலிதீன் பைகள், மட்காத குப்பைகள் குவிந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் வனத்துறையின் சார்பில் அப்பகுதியில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இந்த தூய்மை பணிகள் கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் தொடங்கி புறவழிச்சாலையில் உள்ள வனத்துறை நாற்றுப்பண்ணை வரை நடைபெற்றுள்ளது. மேலும் முகாமில் வனத்துறையினர் தேசிய மாணவர்படை, தேசிய பசுமைப்படை, […]
பிரசித்தி பெற்ற மைசூர் அரண்மனையின் நான்கு யானைகள் சரியாக பராமரிக்க முடியாத காரணத்தால் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. உலகப் புகழ்பெற்ற மைசூர் அரண்மனையையும் அங்கு நடைபெறும் தசரா விழாவையும் அறியாதவர் எவரும் இருக்க முடியாது. அங்கு ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் தசரா விழாவின் போது மைசூர் அரண்மனையின் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் தர்பார் நடத்துவதும், அங்கு நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் இலட்சக்கணக்கான மக்களால் ஆண்டுதோறும் பார்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட மைசூர் […]
நாமக்கல் மாவட்டத்தில் மின் கம்பியில் அடிபட்டு பெண் மயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பள்ளி சாலை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்திற்கு மேலே நேற்று ஒரு பெண் மயில் அமர்ந்திருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் லேசான மலை பெய்ய தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியதும் மயில் அங்கிருந்து பறந்துள்ளது. அப்போது அங்கிருந்த மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. மேலும் மின்சாரம் பாய்ந்ததால் அந்த […]
மலைக்கிராமங்களில் வன அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டு வனத்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மச்சூர், மூலையாறு, வடகரைபாறை போன்ற மலைக்கிராமங்களில் 200-க்கும் மேல் உள்ள பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சட்டப்படி வனப்பகுதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் வேலி அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் மச்சூர், வடகரைபாறை ஆகிய பகுதிகளில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் காபி, ஆரஞ்சு போன்றவற்றை சாகுபடி செய்தனர். அதன்பின் அங்குள்ள வன […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் வனத்துறையினர் நேற்று தீவுகளில் இருக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் சுமார் 21 தீவுகள் உள்ளது. அதில் 7 தீவுகள் மண்டபம் வனச்சரக அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று உலக கடல் தினம் என்பதால் மண்டபம் வனத்துறையினர் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் குருசடை தீவு, முயல் தீவு உள்ளிட்ட தீவுகளில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் இந்த […]
காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உடையார்கோணம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த காட்டு யானைகள் அப்பகுதியில் இருக்கும் தென்னை, வாழை போன்ற மரங்களை முறித்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்பகுதி மக்கள் பெரிய அளவிலான அகழிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி உள்ளனர். ஆனாலும் அதனை மீறி வேறு […]
தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையிடம் தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மோட்டை வன சரக பகுதியில் பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வன சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் வாழை, பாக்கு, தென்னை போன்றவற்றை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் திடீரென சில காட்டு யானைகள் புகுந்து வாழை, தென்னை ,பாக்கு போன்ற மரங்களை வேரோடு பிடுங்கி நாசப்படுத்தியுள்ளன. இதனால் தோட்ட உரிமையாளர்கள் காட்டு […]
தேனியில் ரோந்து செல்லும் வனத்துறையினரின் வாகனங்களுக்கு டீசல் ஒதுக்கீட்டின் அளவு குறைக்கப்பட்ட சம்பவம் அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மேகமலையின் வன உயிரினங்கள் சரணாலயத்தில் புலி, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உட்பட சில விலங்குகள் உள்ளன. மேலும் இந்தப் பகுதியில் தீத்தடுப்பு, குற்றச் சம்பவங்கள் வனவிலங்குகளை கண்காணிக்க சில வனச்சரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த வனச்சரகத்திற்குட்பட்ட இடங்களில் வனத்துறையினர்கள் ரோந்து செல்வதற்காக வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் டீசலின் அளவு தற்போது 70 லிட்டராக […]
மூன்று நபரை தாக்கி விட்டு வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள எர்த்தாங்கள் கலர்பாளையத்தில் பிரேமா என்பவர் வாழ்ந்து வருகிறார். நேற்று நள்ளிரவு வீட்டிற்கு வெளியில் உறுமல் சத்தம் கேட்டபோது வெளியில் வந்து பார்த்த பிரேமாவை சிறுத்தை தாக்கியுள்ளது. இதனால் பயத்தில் அலறிய பிரேமாவின் சத்தத்தால் அவளது மகன் மனோகர் மற்றும் மகள் மகாலட்சுமி ஆகியோர் வெளியே வந்து பார்த்த போது அவர்களையும் சிறுத்தை தாக்கியது. அவர்களின் அலறல் சத்தம் […]
திருப்பத்தூரில் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் விட்டு வந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. அந்த ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட்பாரத்தில் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. அதனை அங்கு நின்றவர்களும், காவல்துறையினரும் பார்த்துள்ளனர். அதன்பின் அந்த மண்ணுளி பாம்பு குறித்து வனத்துறைக்கும், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கும், காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]
குழந்தைகளை தூக்கி சென்ற சம்பவத்திற்கு பிறகு வனத்துறையினர் கூண்டு வைத்து 25 குரங்குகளை பிடித்துள்ளனர். தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிக்கும் ராஜன்-புவனேஸ்வரி என்பவரின் இரட்டை குழந்தை பிறந்து 8 நாளே ஆன நிலையில் குரங்கு ஒன்று வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று அந்த குழந்தையை தூக்கி சென்றது. இதில் ஒரு குழந்தை மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு குழந்தை குளத்தில் விழுந்து பலியானது. குரங்குகளின் அட்டகாசம் காரணமாக இச்சம்பவம் நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து […]
மனிதர்களை விட நாங்கள் ஒற்றுமையானவர்கள் என யானை கூட்டங்கள் நிரூபித்துள்ளது. நீலகிரி மாவட்டம் காட்பாடியில் உள்ள சங்கர் யானை மூன்று பேரை கொன்றுள்ளது. ஆகவே அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நான்கு நாட்களாக முயற்சி செய்து வருகின்றனர். அவர்களது முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இந்நிலையில் 5-வது நாளாக நேற்று புஞ்ச கொல்லி பகுதியில் சங்கர் யானை கூட்டத்துடன் நிற்பதை வனத்துறையினர் கண்டனர். அதன்பிறகு வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். […]
நீலகிரி மாவட்டத்தில் யானையின் மீது தீக்காயம் ஏற்படுத்தி உயிரிழக்க செய்த மர்ம நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த 50 வயதுடைய யானை அடிக்கடி விவசாய நிலத்திற்க்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் யாரோ அந்த யானையின் மீது பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசி தீப்பற்ற வைத்துள்ளனர்.இதனால் யானையின் காதுகள் ரத்தம் வழிந்தபடி அப்பகுதியிலேயே சுற்றி திரிந்து உள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மயக்க […]
தென்காசி மாவட்டம் புளியரை அருகே கிராமத்தில் மீண்டும் அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு மேடு என்ற மலையடிவார கிராமத்தில் கடந்த 12-ம் தேதி மாலை கரடி ஒன்று புகுந்து அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி நின்று அட்டகாசம் செய்தது. வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் கரடியை காட்டுக்குள் விரட்டினர். ஆனால் அந்த கரடி மீண்டும் மீண்டும் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் கரடியை […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆஞ்செட்டி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரை மரக் கடத்தல் கும்பல் ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஞ்செட்டி மற்றும் உரிகம் வன பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடபடுவதும் , உயர் ரக மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஆஞ்செட்டி வன சரகத்திற்கு உட்பட்ட வன பகுதிகளில் வனத்துறையினர், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அட்டப்பள்ளம் பகுதியில் விலை உயர்ந்த மரங்களை, 6 […]
திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட நட்சத்திரம் ஆமையை விற்பனை செய்ய முயன்ற 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதி அருகே சிலர் வனத்துறைனரால் தடை செய்யப்பட்ட அரிய வகை நட்சத்திரம் ஆமையை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டுவந்துள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட வனத்துறையினர், சாக்குப்பைகள் நட்சத்திரம் ஆமைகளை வைத்துக்கொண்டு, அரியலூர்ரை சேர்ந்த விஜய், அன்பரசு, சின்னசாமி, செந்தில் 8 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து […]
உண்ண உணவு தேடி ஊருக்குள் நுழைந்த முதலையை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கும் சின்னபொங்கனேரி கிராமத்தில் முதலை ஒன்று இரை தேடி ஊருக்குள் வந்துள்ளது. முதலையை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் முதலையை மீட்டு சிதம்பரம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஊரடங்கால் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் கொள்ளிடம் ஆற்றுப் பகுதி வாயிலாக முதலை […]
கரூரில் வன உயிரினங்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு அதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 7 இளைஞர்களை வனத் துறையினர் கைதுசெய்துள்ளனர். கரூர் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் காந்திநகரைச் சேர்ந்தவர் தான் சந்தோஷ். இவர் தனது 7 நண்பர்களுடன் சேர்ந்து வேட்டை நாயின் உதவியுடன் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு வன விலங்குகளை வேட்டையாடச் சென்றுள்ளார். அப்போது வேட்டையில் சிக்கிய முயல், காடை, அணில் உள்ளிட்ட வன உயிரினங்களைச் சமைத்து ருசித்து சாப்பிட்டுள்ளனர். சமைத்து சாப்பிட்டது மட்டுமில்லாமல் […]
சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் திருவண்ணாமலை மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உலகில் வேகமாகப் பரவிவரும் கொரோனா முதலில் பரவத்தொடங்கியது சீனாவில். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம் மற்ற நாட்களில் திருவண்ணாமலை மலைப் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் மலையில் ஆள்நடமாட்டம் தென்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்று நேற்று முன் தினம் வனத்துறையினர் மலைமீது சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மலைக்குகையில் பதுங்கி இருந்த ஒருவரை வனத்துறையினர் மீட்டு […]