ஈரோடு மாவட்டத்திலுள்ள புதூர்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் உறவினருடன் குன்றியிலிருந்து கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் சென்ற போது திடீரென வந்த காட்டு யானை பழனிச்சாமியை தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது. அவருடன் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் அஞ்சனைப் பிரிவு அருகே யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. அந்த வழியாக செல்பவர்கள் ஆபத்தை உணராமல் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். […]
Tag: வனத்துறையினர் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை ஒசட்டி கிராமத்திற்குள் நுழைந்து நெற்பயிர்களை நாசப்படுத்தியது. இதனை அறிந்த கிராம மக்கள் டார்ச் லைட் அடித்தும், சத்தம் போட்டும், தீப்பந்தம் கொளுத்தியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். சுமார் 1 மணி நேரமாக யானை பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒற்றை காட்டு யானை […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது அந்த பகுதி பசுமையாக இருப்பதால் சாலையோரம் முகாமிட்டு யானைகள் தீவனம் உண்ணுகின்றன. நேற்று மதியம் ஒரு யானை திம்பம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற 2 பேர் யானையுடன் செல்பி எடுக்க முயன்ற போது கோபமடைந்த […]
சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே சதுரகிரி மலை அடிவாரத்தில் இருக்கும் யானை கஜம் அருவியில் மழைக்காலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக செல்வார்கள். இந்த அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் கடந்த வருடம் சதுரகிரி மலைப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால் வனத்துறையினரின் உத்தரவை மீறி சில […]
வனப்பகுதிக்குள் பொதுமக்கள் விறகு எடுக்க செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் காட்டுயானைகள் மற்றும் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது கோடைக்காலம் நெருங்கி வருவதால் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக தேயிலை தோட்ட பகுதிக்குள் வருகின்றன. இந்நிலையில் காட்டுயானைகள் ஒன்று சேர்ந்து வால்பாறை வழியாக கேரள வனப்பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர்காக கேரள வனப்பகுதிக்கு செல்ல நேரிடும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் விறகு […]