வருசநாடு மலைபகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதை தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள பஞ்சம்தாங்கி மலைபகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த மலைப்பகுதியின் மற்றொரு பகுதி தேனி மாவட்டம் வருசநாடு வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் பலத்தகாற்று வீசியதால் மளமளவென தீ பரவி வருசநாடு வனப்பகுதியிலும் பரவ தொடங்கியுள்ளது. இதனையறிந்த வருசநாடு வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக மலைப்பகுதியில் பரவத்தொடங்கிய காட்டுத்தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், […]
Tag: வனத்துறையினர் கண்காணிப்பு
ஊட்டி அருகிலுள்ள பகுதிகளில் புலி நடமாட்டம் இருப்பதால் புலியை கூண்டு வைத்து பிடிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்குட்பட்ட கட நாடு, அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக புலி மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்கின்றனர். அந்த கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் புலி நடமாடுவதோடு காட்டெருமை, கடமான் ஆகிய வன விலங்குகளை வேட்டையாடி இழுத்துச் செல்கின்றது. அதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் […]
தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக சுருளி அருவி விளங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அருவில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களாக ஹைவேவிஸ் மலைப்பகுதியில் […]