வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியேற்றியதால் கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் நுழைந்த பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மன்னம்பந்தல் தெற்கு வெளியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா என்பவருக்கும் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. நடராஜன் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இதனால் பிரவீனா கணவர் வீட்டில் வசித்து வந்தார். கணவர் வெளியூரில் இருப்பதால் […]
Tag: வரதட்சணை கொடுமை
வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கணவர் குடும்பத்தினர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கணவர் குடும்பத்தினர் அடித்துக் கொன்றனர். ஹுசைனாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தருவா கிராமத்தைச் சேர்ந்த ரோமி தேவி (22) கொல்லப்பட்டார். இவர்களது திருமணம் கடந்த மே 14ம் தேதி நடந்தது. சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ரோமியின் கணவர் சஞ்சித், தந்தை சங்கர் சிங், தாய் பர்பியா தேவி, உறவினர்கள் மணீஷ் சிங் […]
கடலூர் புதுப்பேட்டை அருகில் உள்ள ஏ.பி. குப்பம் கிராமத்தை சுமன்ராஜ்(31) என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி சிவரஞ்சனி(30) இவர்களுக்கு மகன்(2) உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி சிவரஞ்சனி தூக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கந்தசாமி வரதட்சனை கொடுமையால் தனது மகள் சிவரஞ்சனி இறந்து விட்டதாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்தி விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது திருமணமான […]
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த 28 வயது ஐ.டி. பெண் ஊழியருக்கும் கோவை அருகில் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியரான லோகேஷ்(28) என்பவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத சென்னை ஆவடியில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால் அவர்கள் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அதனை தொடர்ந்து சென்னை சென்ற லோகேஷ் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி அங்கு வரும்படி […]
கேரளாவின் திருச்சூரில் குன்னம் குளம் பகுதியில் சுமேஷ் மற்றும் சங்கீதா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். சென்ற 2020 ஆம் வருடம் ஏப்ரலில் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இவர்களில் சங்கீதா தலித்பிரிவை சேர்ந்தவர் ஆவார். ஆனால் சுமேஷ் ஈழவா பிரிவை சேர்ந்தவர். இதனிடையில் சங்கீதா திடீரென தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது சங்கீதாவை வரதட்சணைகேட்டு துன்புறுத்தியும், சாதி பாகுபாடு செய்தும் வந்திருக்கின்றனர். இக்கொடுமையை பொறுக்கமுடியாத சங்கீதா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் முடிந்த […]
வரதட்சணை கேட்டு மனைவியின் விரலை வெட்டிய ராணுவ மேஜர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் மீரட்டில் உள்ள 510 ராணுவ தளத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் கார்ப்ஸில் அதிகாரியாக உள்ளார். மேஜரின் 30 வயது மனைவி விரலில் காயத்துடன் காவல்துறையை அணுகினார். கணவர் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது […]
கேரள பெண் விஸ்மயா வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாஸ்தாம் கோட்டா பகுதியில் விஸ்மயா (22) என்ற பெண் வசித்து வந்தார். ஆயுர்வேத மருத்துவம் படித்து வந்த இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான (மோட்டார் வாகன உதவி ஆய்வாளர்) கிரண்குமார் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கிரண் குமாருக்கு வரதட்சணையாக 100 பவுன் […]
வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமை படுத்திய கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள டி.சுப்புலாபுரம் பகுதியில் வசித்து வந்த நந்தினி என்பவருக்கும் மதுரை மாவட்டம் பெரியசாமி நகரை சேர்ந்த முனீஸ் திவாகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. முனீஸ் திவாகர் விருதுநகர் சிறையில் வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் திருமணத்தின்போது நந்தினியின் குடும்பத்தினர் பணம், நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக […]
வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய போலீஸ் உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடேந்திரபுரம் பகுதியில் ராஜசிம்மன் என்கின்ற நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி பட்டாலியன் படைப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் செல்வபிரியா என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைபடுத்துவதாக செல்வபிரியா தேனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் செல்வபிரியா கொடுத்த […]
வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக போலீசின் மனைவி காவல்நிலையம் முன்பு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடேந்திரபுரம் பகுதியில் ராஜசிம்மன் என்கின்ற நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி பட்டாலியன் படைப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் செல்வபிரியா என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைபடுத்துவதாக ஏற்கனவே செல்வபிரியா தேனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் […]
பெண் உதவி பொறியாளரை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் மற்றும் மாமியார் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் உள்ள காந்திநகரில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது தேனி மாவட்டம் போடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி தேனி பொதுபணித்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் மற்றும் அவரது தாயார் சந்திரலேகா இருவரும் இணைத்து ராஜேஸ்வரியை […]
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் பாரத். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வினோதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் வினோதா 6 மாதம் கர்ப்பிணியாக இருந்தபோது அவரை வரதட்சணை கேட்டு பாரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் வினோதா மன உளைச்சலுக்காளாகி கடந்த மாதம் 29 ஆம் தேதி அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.இந்த சம்பவத்தை பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் […]
வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெங்களூரில் வேலைபார்த்து கொண்டிருந்த இவருக்கு கடந்த 2 ஆண்டுகள் முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெங்களூரில் வசித்து வந்த இவர்களுக்கு 1 வயதில் மகள் உள்ள நிலையில் இரண்டாவதாக சங்கீதா இருந்துள்ளார். இதனால் பாண்டியராஜன் சங்கீதாவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். இதனையடுத்து சங்கீதாவிற்கு […]
வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய கணவர் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ என்ஜினீயரான இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு வாழப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவர்களின் திருமணத்தின்போது சீனிவாசனின் பெற்றோர் வரதட்சணையாக 100பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 5 லட்சம் ரூபாய் […]
வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்தி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காயக்காரி அம்மன் கோவில் தெருவில் வினோதினி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சுப்பையா சுரேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து திருமணத்தின்போது வினோதினி வீட்டு சார்பில் நகை, பணம், சீர்வரிசை பொருட்கள் ஆகியவை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். இருப்பினும் திருமணம் முடிந்த […]
திருமணமாகி 6 மாதங்களில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உரமாவு அருகே முனிரெட்டி லே-அவுட்டில் என்ற பகுதியில் வசித்து வருபவர் மிதுன் ரெட்டி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மிதுன் ரெட்டி கேட்ட வரதட்சணையை ஸ்ருதியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த பிறகு சந்தோஷமாக இந்த தம்பதிகள் வாழ்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரதட்சணைக்காக கட்டிய கணவரே சகோதரர் மற்றும் நண்பர்களை வைத்து மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள தடா கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண்ணிற்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு அந்தப் பெண் வீட்டில் அதிகப்படியான வரதட்சனை கொடுக்கப்பட்டது. இதனால் சிறிது காலம் அப்பெண்ணின் கணவர் அவரை மிகவும் சந்தோஷமாக வைத்திருந்தார். மூன்று வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணிடம் […]
நாட்டில் வரதட்சணை கொடுமை என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதனால் இதுவரை பல பெண்கள் உயிரிழந்துள்ளனர். அதன்படி சமீபத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக விஸ்மயா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் காரணமாக அரசு ஊழியரான விஸ்மயாவின் கணவர் கிரன் குமாரை பணிநீக்கம் செய்ய கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கேரளா எப்போதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை களுக்கு கண்ணை மூடிக்கொண்டு இருக்காது என்று […]
திருவாரூர் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் ஓட்டல் ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் காக்காகோட்டூர் சாலையில் ஜெயபால்(51), அவரது மனைவி இந்திரா மற்றும் இவர்களது மகள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயபால் கங்களாஞ்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜெயபால் அவரது மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்திராவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். அதில் இந்திரா […]
ராமநாதபுரத்தில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேருநகர் 6-வது தெருவில் தர்ஷினி(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு தர்ஷினிக்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்தின் போது 60 பவுன் நகை மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கியுள்ளனர். ஆனாலும் திருமணமான சில மாதங்களிலேயே புதிதாக தொழில் […]
தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறில் பெண் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய காவல்துறை அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள பொன்னன்படுகை பகுதியில் சிவராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மயிலாடும்பாறையில் வசிக்கும் ஜெயசுதா(23) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு கவிமித்ரன்(1) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் திருமணமான 1 வருடத்திலிருந்தே ஜெயசுதாவை அவரது […]
கேரளாவில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த 22 வயதான ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இளங்கலை சிகிச்சை படித்த மாணவி விஸ்வமாயா என்பவர் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அது தொடர்பாகப் பல விவாதங்களும் விமர்சனங்களும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. மேலும் […]
மனைவியின் அந்தரங்க போட்டோவை எடுத்து கணவனே அதை வைத்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து திருமணமான முதலே கணவரின் வீட்டில் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமை செய்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பெண்ணின் பெட்ரூமில் அவருக்கு தெரியாமல் கேமராவை ஒளித்து வைத்து அவரது அந்தரங்க படங்களையும் எடுத்து வந்துள்ளனர். […]
கடலூரில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் வரதட்சனை கொடுமை பல சட்டங்களுக்கு பிறகு சற்று குறைந்து வந்த நிலையில் கடலூரில் திருமணம் நடந்த சில காலத்திற்குப் பிறகு கணவன் மனைவியிடம் வரதட்சனை கேட்டு கொடுமை செய்ததினால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் […]
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மனைவியை அடித்து கொன்று தலைமறைவான கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் மோகதிபூர் கிராமத்தை சேர்ந்தவர் அமீத் சர்மா. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அர்ச்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இடையே அடிக்கடி வரதட்சணை குறித்து சண்டை வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அமீத் வர்மா இரு தினங்களுக்கு முன் அர்ச்சனா பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் மகள் […]
மயிலாடுதுறை அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக பெண் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குத்தாலம் பகுதியில் பார்த்திபன் மற்றும் செல்வகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு வயதில் லிவிஷா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் குழந்தையும், தாயும் உயிரிழந்து கிடந்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக அவரது மாமியார் தனலஷ்மி 30 சவரன் நகைகளை வரதட்சணையாக […]
புதுச்சேரி மாநிலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏழுமலை(33) என்பவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபாக்கியம்(22) என்பவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சிவபாக்கியம் தனது கணவர் ஏழுமலை வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சிவபாக்கியத்தின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அப்போது ஏழுமலையின் குடும்பத்தினர் சிவ பாக்கியத்தை இறுதி சடங்கிற்கு தாமதமாகவே அனுப்பியுள்ளனர். இந்நிலையில் அங்கு சென்ற […]
சென்னையில் தன் மனைவியை சாதி பெயர் கூறி வரதட்சணை கொடுமை செய்து வந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் பாலமுருகன் என்ற பகுதியை சேர்ந்த தம்பதிகள் ஆனந்தராஜ் (30) மற்றும் பாக்கியலட்சுமி (29). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி கர்ப்பமானதால் ஆனந்தராஜ் அவரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவீட்டாரும் அவர்களை சமாதானம் செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பிறகு ஆனந்தராஜ், […]
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் கன்னிவாடி அருகில் உள்ள தர்மத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திவ்யா. இவருக்கும் புதுப்பட்டியை சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு 15 பவுன் நகை 2 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திவ்யாவின் மாமனார் சண்முகம், மாமியார் மாரியம்மாள், கணவர் ராஜ்குமார் மற்றும் மைத்துனர் ராஜசேகர் ஆகியோர் கூடுதல் வரதட்சணை […]
மாமியார் மற்றும் கணவர் செய்த கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருபுவனை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருபுவனை அருகே பி.எஸ்.பாளையம் காலனியை சேர்ந்தவர் மதிராஜா (30) என்பவர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமலா என்னும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. மதி ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. அதனை மறைத்து இரண்டாவதாக தன்னை திருமணம் செய்து கொண்டது அமலாவுக்கு தெரியவந்தது. இதுபற்றி அமலா தன் கணவரிடம் கேட்டபோதுஅவர் அமலாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். […]
வரதட்சணை கொடுமை காரணமாக மனைவி சனிடைசர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர், சாந்தி காலனி பகுதியை சேர்ந்த 38 வயதான விஜய் என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு 34 வயதான லாவண்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நேற்று இரவு தனது மனைவியிடம் தனக்கு 6 லட்சம் பணம் வேண்டும் என்றும், அதற்காக நீ உனது பிறந்த வீட்டில் வாங்கி வா என்றும் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் […]
பெண் ஒருவர் கணவர் குடும்பத்தாரின் கொடுமை தாங்க முடியாமல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்திலுள்ள பெண் ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணமான முதலில் இருந்தே பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் அவரிடம் வரதட்சணை கேட்டு மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் பெண்ணின் அப்பாவின் சொந்த வீட்டையும் கணவரின் பெயருக்கு மாற்றி வாங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது அந்த பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த […]
கடலூரில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதற்கு மாமியாரையும் கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் . கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள சின்னதானங்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் சுசிதா கிருபாலினி (25) . இவர் கடலூர் மஞ்சக்குப்பம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணை பதிவாளர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் எம். புதூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(28) என்பவருக்கும் கடந்த 30.8.2020 அன்று திருமணம் நடைபெற்றது. திருமண சீர் வரிசையாக […]
சென்னையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த பிரியங்கா என்பவர் இன்ஜினீயரிங் பட்டதாரி. இவருக்கும் நிரேஷ்குமார் என்ற நபருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.நிரேஷ்குமார் ஹைதராபாத்தில் வேலை செய்து வருவதால் திருமணத்திற்கு பிறகு இருவரும் அங்கேயே வசித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவரை பிரிந்து பிரியங்கா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதனால் பெரும் மன உளைச்சலில் […]
வரதட்சணை கொடுமை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த இளம்பெண் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியை சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும் திருச்சி திருவெறும்பூர் எழில் நகரை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. கணவர் கண்ணன் மற்றும் மாமனார் மாமியார் மற்றும் கொழுந்தனார் என நால்வரும் வரதட்சணை கூடுதலாக கேட்டு முத்துலட்சுமியை மிரட்டி துன்புறுத்தி வந்தனர். கருக்கலைப்பு மற்றும் பல்வேறு இன்னல்களை […]
இந்தியாவில் திருமணமாகிய 5 மாதத்திலேயே புதுப்பெண்ணை குடும்பத்தினர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அனில் துயாகி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அஞ்சலி(25) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது அஞ்சலியின் பெற்றோர் ரொக்கமாக பணத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.இருந்தாலும் திருமணத்திற்கு பின் 11 லட்சம் ரூபாய் வரதட்சணை பெற்று வர சொல்லி அஞ்சலியை அவரின் கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இரு நாட்களுக்கு […]