தர்ஷா குப்தா கதறி அழுத வீடியோ வைரலாகி வருகின்றது. பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் […]
Tag: வருத்தம்
மேற்கு வங்கத்தில் நடந்த அரசு விழாவில் கலந்துகொள்ள தான் நேரடியாக வரமுடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்து உள்ளார். காணொலி காட்சியின் மூலம் பிரதமர் பேசியதாவது, இன்று மேற்கு வங்கத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் நேரில் வர திட்டமிடப்பட்டு இருந்தேன். எனினும் சில சொந்த வேலைகள் காரணமாக என்னால் நேரடியாக வர முடியாமல் போனதற்கு மேற்கு வங்கத்திடமும் மாநில மக்களிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருக்கிறார். இவர் அரசியல் ரீதியாக தன்னை எதிர்க்க முடியாதவர்கள் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ரோஜா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, நான் சினிமா மற்றும் அரசியலில் எத்தனையோ பிரச்சனைகளை சமாளித்து இருக்கிறேன். ஆனால் சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் […]
மகன் இன்சல்ட் செய்தது குறித்து தனது நண்பர்களிடம் கூறி கார்த்திக் புலம்பி வருகின்றாராம். நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவரும் தங்களின் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் சென்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தனது அப்பா கார்த்திக்கை கௌதம் கார்த்திக் இன்சல்ட் செய்திருக்கின்றார். மகனின் திருமணத்தை தமிழ் திரையுலக நண்பர்கள் அனைவரையும் அனைத்து […]
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் சக்தி உருக்கமாக பேசியுள்ளார். விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கின்றது. தற்போது ஆறாவது சீசனில் ஏழாவது வாரம் முடிந்து விட்டது. இந்த நிகழ்ச்சி பலருக்கு நல்ல எதிர்காலத்தை தந்தாலும் சிலருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த வகையில் பிக்பாஸ் முதல் சீசனில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு போட்டியாளராக நுழைந்தார் சக்தி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, மன அழுத்தத்தில் இருந்து வெளியே வரத்தான் அந்த […]
பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற சர்ச்சைகள் சம்ப காலமாகவே அதிகரித்துள்ளது. இந்த சர்ச்சையில் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூரும் சிக்கியுள்ளார். இதுகுறித்து தற்போது ஜான்வி கபூர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பாலிவுட் சினிமாவில்ல் வாரிசு நடிகைகள் மீது வெறுப்பு காட்டுகிறார்கள். தயாரிப்பாளர் கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் வாரிசு நடிகைகளை அவர் அறிமுகப்படுத்துகிறார். […]
ஆட்சிக்கு வரவில்லை என்றால் 2024 ஆம் ஆண்டு தான் எனக்கு கடைசி தேர்தல் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தன்னை ஆட்சிக்கு கொண்டு வராவிட்டால் 2024 ஆம் ஆண்டு தான் தனக்கு கடைசி தேர்தல் என கூறியுள்ளார். கர்னூரில் நடந்த சாலை பேரணியில் சந்திரபாபு நாயுடு உணர்ச்சிவசப்பட்டு இதனை பேசியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை சட்டப்பேரவைக்குள் நுழைய மாட்டோம் […]
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ”இரவின் நிழல்”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சகாய பிரகிடா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் கபாலி மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கு மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது மோனிகா மற்றும் ஓ மை டார்லிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, நான் என்னுடைய வயது முதிர்வை எதிர்கொள்வதற்கு […]
தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர்தான் டெல்லி கணேஷ். இவர் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேல் கலை அனுபவம் கொண்டவர். இப்போது இவர் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் “இளம் இயக்குனர்கள் வளர்ந்த பிறகு தன்னை மறந்துவிடுகிறார்கள் என்று டெல்லி கணேஷ் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். இளைஞர்கள் பல பேர் ஷார்ட் பிளிம் நடித்து இருப்பதாக கூறிய அவர், அவர்கள் வளர்ந்து படங்களை இயக்கும்போது தன்னை கூப்பிடுவதில்லை. பணமில்லை என்று கூறும் இயக்குனர்களுக்கு வீட்டைக் கூட இலவசமாக […]
தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பூஜை ஹெக்டே. அதன்பின் தமிழில் போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ராதே ஷ்யாம், ஆச்சார்யா மற்றும் பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் போதிய அளவு வரவேற்பை பெறவில்லை. இதனால் பூஜா ஹெக்டேவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் […]
அதிமுகவின் துவக்க விழாவை கொண்டாட முடியாமல் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இருந்து வெளியேறினார். பின்னர் 1972- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி அதிமுகவை தொடங்கினார். அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இன்று 51-வது ஆண்டு துவக்க விழாவை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்தில் கொண்டாட அனுமதி கேட்டனர். ஆனால் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அனுமதி கொடுக்கவில்லை. […]
மலையாளத்தில் மோகன்லால் அடித்து சூப்பர் ஹிட்டான படம் லூசிபர். இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க “காட் பாதர்” என்ற பெயரில் ரீமிக்ஸ் செய்து நேற்று வெளியானது. இந்த படத்திற்கு நேற்று நல்ல விமர்சனங்கள் வந்தது. ஆனால் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என்று தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. உலக அளவில் ரூ.38 கோடியும், தெலுங்கு மாநில ஆந்திரா தெலுங்கானாவில் ரூ.20 கோடி மட்டுமே இந்த படம் வசூலித்ததாக தகவல் வெளியாகி […]
பெங்களூருவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வந்ததால் நகரை வெள்ளத்தில் மூழ்கியது. அங்குள்ள பல்வேறு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்துமே தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வீடுகளை விட்டு வெளியேறி ஹோட்டல்களிலும், விடுதிகளிலும் தங்கினர். அதோடு கார்கள் தண்ணீரில் மிதந்தது. இந்நிலையில் தற்போது வெள்ள நீர் வடிந்துள்ளதால் தற்போது பல்வேறு நபர்கள் தங்களுடைய கார்களை ரிப்பேர் செய்வதற்கு அனுப்பி வருகின்றனர். இந்த கார்களை ரிப்பேர் செய்வதற்கு அனுப்புபவர்கள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர் […]
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவரது அமைச்சரவையில் தகவல் துறை மந்திரியாக இருக்கிறார் மரியும் அவுரங்கசீப். பெண் மந்திரியான இவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள காபி கடைக்கு இவர் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் பாக்கிஸ்தானியர்கள் அவரை சூழ்ந்து கொண்டு விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கின்றனர். எனினும் அவர்களை கண்டு கொள்ளாமல் மரியும் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நளினி. இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2010-ஆம் ஆண்டு நளினியும், ராமராஜனும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இவர்களின் பிரிவுக்கு நடிகை அபிதா என்று அப்போது வதந்திகள் பரவியதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. […]
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் சாதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேள்வியில் நான்கு பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகம் எது? தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர்கள் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக உயர்கல்வித்துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு […]
இலங்கையில் அதிபரை பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் நிலையற்ற அரசியல் தன்மை மற்றும் பொருளாதார […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். கடந்த ஜூலை 2 ஆம் தேதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 81 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள், திரைத்துறையினர் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலை இயக்குனர் சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட திருக்கடையூரில் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு தனது மனைவி ஷோபாவுடன் […]
லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமாக இருந்த ராம் விலாஸ் பஸ்வான் கடந்த 2020 அக்டோபரில் உடல் நலக்குறைவால் இறந்தார். ராம் விலாஸ் பஸ்வான் இறக்கும் வரையிலும் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். டெல்லியில் 12 ஜன்பத்பங்களாவில் ராம் விலாஸ் பஸ்வான் வசித்து வந்தார். ராம் விலாஸ் பஸ்வான் இறந்த பின் அந்த பங்களாவில் அவரது மகனும், எம்பியுமான சிராக் பஸ்வான் பயன்படுத்தி வந்தார். கடந்த வருடம் அந்த பங்களாவை காலி […]
தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் குறித்த பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இது குறித்து பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ள நிலையில் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, மருத்துவம் […]
ஜெய்பீம் திரைப்படத்தில் எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ, எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும் அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன் என்று அப்படத்தின் இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன். இந்தத் திரைப்படம் ஆக்கத்தில் எந்த ஒரு தனிப்பட்ட நபரையும், […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை போன்ற பல்வேறு மாவட்டங்களில் பொது மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மழை காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் .மழைக் காலங்களில் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் […]
உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் முதல் முறையாக தான் செய்த தவறுக்காக வருந்துவதாக கூறியுள்ளார். கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அவரது மனைவியுடனான திருமண உறவை முடித்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. இருப்பினும் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா இருவரும் சேர்ந்து தொண்டு அறக்கட்டளையில் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் வாஷிங்டன் மாகாண கிங் நகர நீதிமன்றம் நேற்று முன்தினம் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா […]
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் தொற்று குறைந்துள்ள காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்துக்கொண்டே இருப்பதால், அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சை நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கொரோனா […]
தனுஷ் – ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவான முதல் படம் ‘ப.பாண்டி’. இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திலும் இணைந்து பணிபுரிந்தார்கள். ஆனால், அதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எதுவுமே மக்களிடம் எடுபடவில்லை.அதற்குப் பிறகு தனுஷ் – ஷான் ரோல்டன் இருவருமே இணைந்து பணிபுரியவில்லை. ஆனால், நண்பர்களாக வலம் வருகிறார்கள். அவ்வப்போது தனுஷுடன் மீண்டும் இணைந்து பணிபுரியாதீர்கள் என்று ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்து வந்துள்ளனர். […]
நகைச்சுவை நடிகர் அப்புகுட்டி கொரோனாவை எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியாமல் வருத்தப்படுவதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் அப்புகுட்டி. இதை தொடர்ந்து இவர் நடித்த ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படம் தேசிய விருதை வென்றது. இதனால் அப்புக்குட்டிக்கு நிறைய பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. நடிகர் அப்புக்குட்டி தற்போது கோவூரில் வாடகை வீட்டில் ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் […]
விவேக்குடன் நடிக்க தவறவிட்டதாக சிவகார்த்திகேயன் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4: 35 மணியளவில் உயிரிழந்தார். இவரது இறப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிற்கு பல திரைப் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சில பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் […]
விவேக்கின் உடலை நேரில் வந்து சந்திக்க முடியாததால் விஜய் வருத்தத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இதை அடுத்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல திரைப்பிரபலங்கள் விவேக்கின் உடலை நேரில் வந்து பார்த்து அஞ்சலி செலுத்தி […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்ததால் சீரியல் நடிகை தேம்பி அழுதுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி வெற்றி அடைந்தார். இதைதொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்துள்ள நிலையில் பலரும் இந்நிகழ்ச்சியை மிஸ் செய்வதாக கூறிவருகின்றனர். அந்த வகையில் மௌனராகம் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சக்தி என்கின்ற கிரித்திகா குக் […]
நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்ததால் அவர் மீது போடப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. முன்னணி நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் அவன் இவன். பாலா இப்படத்தினை இயக்கியிருந்தார். இப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், கரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக விமர்சித்து இருப்பதால், சிங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதி ராஜா மகன் சங்கர் ஆத்மஜன் இதுகுறித்து அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் இவ்வழக்கில் […]
போயஸ்கார்டனில் தனது இறுதிக் காலத்தை கழிப்பதே சசிகலாவின் எண்ணம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியான சசிகலா பிப்ரவரி எட்டாம் தேதி தமிழகம் வந்தார். தமிழகத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று கூறிய சசிகலா அதன்பின் அமைதியாகிவிட்டார். அரசியல் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திலேயே போயஸ்கார்டனில் காலத்தை கழிக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் […]
ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிப்பதாக பிரபல பாடலாசிரியர் மதன் கார்த்திக் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டிற்கான 67 வது திரைப்பட தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரையுலகிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தலைவி படத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாடலாசிரியர் மதன் கார்த்திக் தேசிய விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அசுரன் படத்திற்கு பின்னணி இசை அமைத்த ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி […]
நேர்காணலில் ஹரியும்-மேகனும் கூறிய குற்றச்சாட்டால் அவர்கள் மீது எனக்கு கோபமில்லை என்றும் வருத்தம் தான் இருக்கிறது என்றும் பிரிட்டன் மகாராணி கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் ஓப்ரா வின்ப்ரேக்கு அளித்த பேட்டி ஒளிபரப்பப்பானது. அந்த பேட்டியில் தம்பதியர் இருவரும் ராஜ குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர். இந்த பேட்டி உலகிலுள்ள பல்வேறு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்த பேட்டியில் ராஜ குடும்பம் இனப்பாகுபாடு […]
விஜயகாந்தின் நிலைமையை எண்ணி அவரது ரசிகர்கள் வேதனையில் உள்ளனர். பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதியுற்று வருகிறார். இதற்காக அவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு கொரோனாவாழும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது தேர்தலும் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது விஜயகாந்தை கண்ட ரசிகர்கள் மனம் நொந்து போகியுள்ளனர். ஏனென்றால் உடல் […]
நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக தரப்படுகிறது என்று சமந்தா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான தெறி, அஞ்சான், கத்தி, உள்ளிட்ட மெஹா ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. இவர் நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவாக கொடுக்கப்படுகிறது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “நடிகைகளுக்கு சம்பளம் குறைவாகவே தரப்படுகிறது. சினிமாவில் முதல் மூன்று இடங்களில் உள்ள கதாநாயகிகளில் ஒருவர் வாங்கும் சம்பளம் 20 முன்னணி கதாநாயகர்களின் […]
நடிகை பூர்ணா நான் முன்னணி நடிகர்களோடு நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ஆடுபுலி, முனியாண்டி, அடங்கமறு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூர்ணா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,”நான் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அப்போது கூறியதாவது, பெண்கள் தியாகத்தின் மறு உருவம். எல்லா துறையிலும் முன்னேறி வருகின்றனர். ஆண்களுக்கு சமமான உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பெற்றோர்கள் சிறுவயதிலேயே அறிவுரை சொல்லி கட்டுப்பாட்டில் வைக்கிறார்கள். […]
இந்தியாவில் ஜனநாயகத்தை பொதுத்துறை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இன்று தூத்துக்குடி வந்துள்ளார். அவர் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்களுடன் வஉசி கல்லூரியில் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இதே கல்லூரிக்கு கடந்த 1959 ஏப்ரல் 16-ஆம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வருகை தந்தார். அதனைப்போலவே 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திராகாந்தி வருகை […]
நடிகர் அஜித் மிகுந்த மனவருத்தத்துடன் சற்றுமுன் பரபரப்பு அறிக்கை ஒன்றை ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ஐ படத்தின் அப்டேட் கேட்டு அரசியல் விழாக்கள்,அரசு விழாக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என எங்கு பார்த்தாலும் அவரின் ரசிகர்கள் பார்வையாளர்களை எல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் இதுபற்றி அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்பு கொண்டிருக்கும், எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான […]
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை அந்நாட்டு அரசு இரவோடு இரவாக இடித்து தள்ளி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அப்பகுதியில் மாணவர்கள் திரண்டதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. முள்ளிவாய்க்கால் தூண் இடிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இலங்கை போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட அந்த நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட சம்பவம் உலகத் தமிழர்களிடையே […]
நடிகர் ரஜினி எடுத்த முடிவு சற்று ஏமாற்றம் அளிப்பதாக மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தவறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நேற்று முன்தினம் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உள்ளூர் கொரோனா விதிமுறைகள் தெரியாததால் தான் தவறு நடந்ததாக சுரேஷ் ரெய்னா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் படப்பிடிப்பில் பங்கேற்ற சுரேஷ் ரெய்னாவை நண்பர் ஒருவர் இரவு உணவுக்காக அங்குள்ள கிளப்புக்கு அழைத்துச் சென்றதால் தான் […]
தேசியக்கடி அவமதிப்பு வழக்கில் எஸ்.வி சேகர் தன்னுடைய குற்றத்தை உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். நடிகர் எஸ்வி சேகர் தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தற்பொழுது ஒரு திருப்புமுனை வந்துள்ளது. அதாவது இந்த அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த விசாரணையில் நடிகர் எஸ்வி சேகர் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், முதலமைச்சர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்தார். மேலும் தான் தன்னுடைய வாழ்நாள் முழுதும் இனி […]
ஊரடங்கினால் பண்டிகைகள் சிறப்பாக கொண்டாட முடியவில்லை என பிரபல நடிகை மிகுந்த கவலையுடன் கூறியுள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் “முகமூடி” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடிக்கிறார். ஊரடங்கு அனுபவத்தை பற்றி பூஜா ஹெக்டே கூறுகையில் “சினிமா துறையை சார்ந்தவர்கள் எப்போதுமே படப்பிடிப்பில் பிஸியாக இருப்போம். ஆனால் தற்போது அனைவரும் வீட்டில் தான் இருக்கிறோம். நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் எங்கள் வீட்டில் தென்னிந்திய பாரம்பரியத்தை தான் பார்க்க […]
65 வயதுக்கும் மேலானவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனக்கு வருத்தமளிப்பதாக அமிதாப்பச்சன் கூறியுள்ளார். கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகளில் 65 வயதை கடந்தவர்கள் பங்கேற்கக்கூடாது என்று மராட்டிய மாநில அரசு சில நாட்களுக்கு முன் நிபந்தனை விதித்திருந்தது. அந்த நிபந்தனையை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அரசின் நிபந்தனை ரத்து செய்யப்பட்டு 65 வயதுக்கும் மேலானவர்கள் படபிடிப்பில் பங்கேற்கலாம் என்று தீர்ப்பளித்தது. இது குறித்து அமிதாப் பச்சன் கூறுகையில், “65 வயதுக்கும் மேலானவர்கள் […]
பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் ராசியில்லாத நடிகை என தமிழ் மற்றும் மலையாளத்தில் நீக்கப்பட்டதாக ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தும், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார் வித்யாபாலன். ஆனால் அவரை ராசி இல்லாதவர் என ஒதுக்கி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ” நான் முதல் முதலில் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்தேன். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு 8 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. […]
நெருங்கிய நண்பரான சேதுராமனின் இழப்பு நடிகர் சந்தானத்திற்கு பெரும் இழப்பாக இருந்த நிலையில் அவரது உடலை தன தோளில் தூக்கி சென்று பார்ப்போரை நிலை குலைய வைத்தது..! ஒருவருக்கொருவர் நண்பனாக இருக்கும் பொழுது உண்மையான நண்பர் என்ன செய்வார், தன்னுடைய நண்பனை எப்படியாவது ஒரு உயரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவர் வாழ்க்கையில் பல கட்டங்களில் சேதுராமனை தூக்கி விட முயற்சி செய்தார். அப்படி தூக்கிவிட்டு உயரத்திற்கு கொண்டு வந்தவர் நடிகர் சந்தானம். […]