தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பின் மின்வாரியத்தின் மாத வருவாய் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனாலும் இது திட்டமிட்டதை விட சற்று குறைவாக தான் இருக்கிறது எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக மின்வாரியத்திற்கு கூடுதலாக ரூ.19,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். தற்போது வரை சில கட்டணங்களை நாங்கள் சில பிரிவுகளுக்கு அறிவிக்கவில்லை. இந்நிலையில் மாதத்திற்கு மின்வாரியத்திற்கு வருவாய் ஆயிரம் கோடியாக உள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார். […]
Tag: வருவாய்
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மொத்த ஆன்லைன் வருவாய் கட்டணம் விதிக்கப்படுவதால் பல்வேறு நாடுகள் பயன் பெறுவதாக லக்ஷ்மிகுமரம் மற்றும் ஸ்ரீதரன் சட்ட நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் “பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு அவர்களது லாபத்தில் வரிவிதித்து வந்தது. அந்நாடுகள் இப்போது மொத்த ஆன்லைன் வருவாய் கட்டண முறைக்கு மாற முடிவுசெய்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இப்போது 18% GST செலுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக அரசுக்கு வருடத்திற்கு […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.அதனால் மக்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இல்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக இயக்கப்பட்ட பேருந்துகள் மூலமாக அரசுக்கு 20 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அக்டோபர் 21 முதல் 24ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 10,400 பேருந்துகள் […]
தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கியதன் மூலம் தமிழக அரசுக்கு 9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சொந்த ஊருக்கு மக்கள் சென்று தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காக சிறப்பு பேருந்துகள் ஒவ்வொரு வருடமும் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த வருடமும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி பயணிகளுக்காக 11 சிறப்பு முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் […]
கொரோனா தொற்று காலத்திற்கு பின் உணவு மற்றும் விவசாயத்தின் அருமை பற்றி பலரும் உணர்கின்றனர். அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயத்தினுடைய அவசியம் குறித்து இன்றைய சமுதாயத்தினர் உணர்கின்றனர். ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்ற தவறான புரிதலை உடைத்து, இயற்கை விவசாயத்தினை லாபகரமாக செய்ய முடியும் என விவசாயி பொன்முத்து என்பவர் நிரூபித்து இருக்கிறார். பல்லடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கெரடமுத்தூர் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் சென்ற […]
இந்தியாவில் கொரோனா பரவல் ஓய்ந்ததையடுத்து நாட்டில் மக்கள் நடமாட்ட சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களுக்கு அதிகரித்து உள்ளன. கொரோனாவுக்கு முன் இருந்த இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. இதனை ரயில்வே போக்குவரத்து விமான போக்குவரத்து போன்றவை வருவாய் மற்றும் பயணிகள் எண்ணிக்கை மூலம் எடுத்துக்காட்டி உள்ளது. இந்திய ரயில்வேக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் இந்த மாதம் 8ஆம் தேதி வரை கிடைத்த வருவாய் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த காலகட்டத்தில் மொத்தம் ரூ.33,476 […]
சொத்துக்கள் ஏலம் மூலம் 844 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லியில் உள்ள ரயில்வே வளாகங்களில் விளம்பரம் செய்தல், வாகன நிறுத்துமிடம், பார்சல் இடம் மற்றும் கட்டண கழிவறைகள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விட ரயில்வே முடிவு செய்தது. அதற்காக சிறிய தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட்ஆப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பணியை கடந்த ஜூன் மாதம் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கடந்த 3 மாதத்தில் […]
எகிப்து நாட்டின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாக விளங்கும் சூயஸ் கால்வாய் வாயிலாக 2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரையிலும் எகிப்து அரசுக்கு சென்ற 135 வருடங்களில் இல்லாத அளவுக்கு சுமார் 7 பில்லியன் டாலர் வருமானமானது கிடைத்திருக்கிறது. கடந்த வருமானத்தைவிட இது 20.7 % அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த வருடம் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற சரக்கு கப்பல் அகப்பட்டுக் கொண்டதால் சுமார் ஒரு வாரத்துக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் […]
பதிவுத்துறையில் 100 நாளில் ₹4988 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவுத்துறையில் அமைச்சர் மூர்த்தி பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரப்பதிவுத்துறை அதிக வருவாயை ஈட்டி உள்ளது. அந்த வகையில் பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை 100 நாட்களில் 4988.18 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இதே […]
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு இம்மாதம் அதிக வருவாய் கிடைத்துள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலில் கடந்த மே மாதத்தில் மட்டும் 130 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதால் புதிய சாதனையான பார்க்கப்படுகிறது. திருப்பதி கோயில் வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு பெரிய தொகை காணிக்கையாக கிடைத்துள்ளது. பணம், தங்கம், வெள்ளி ஆபரணங்களாக கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் கோயில் வருமானம் வெகுவாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8 நாட்களில் 10.15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சித்திரை மாதம் விஷு சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்கு வந்து இருந்தனர். அவர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.4.38 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் 8 நாட்களில் 10.15 கோடி ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கோவில் […]
மத்திய ரயில்வே “ஜீரோ ஸ்கிராப் மிஷன்” என்ற திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மத்திய ரயில்வேயின் ஒவ்வொரு மண்டலம், ரயில்களை நிறுத்துமிடம் மற்றும் பணிமனை உள்ளிட்டவற்றில் உள்ள தேவையற்ற பழைய பொருட்களை நீக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில் மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேவையற்ற பழைய பொருட்களை விற்றதன் மூலம் நடப்பு நிதியாண்டில் மத்திய ரயில்வேக்கு வருவாய் ரூ. 530.34 கோடி கிடைத்துள்ளது. இது இதற்கு முன்னதாக கிடைத்த தொகையை விட 35.48% அதிகம். […]
2022-23 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதித்துறை செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம்வ வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூபாய் 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கவே ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் நிதி நெருக்கடி நேரத்திலும் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டு […]
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் எப்படி வருமானம் வருகிறது ?எப்படி வருமானம் செலவிடப்படுகிறது ?என்பது வரைபடம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வருவாய் (ஒரு ரூபாயில்) :- 1. கடன்சாரா முதலீட்டு ரசீதுகள் 2. கடன் மற்றும் இதர பொறுப்பேற்றல்கள் 3. சரக்கு மற்றும் சேவை வரி 4. வரி சாரா வருவாய் 5. சுங்கம் 6. மத்திய கலால் வரி 7. பெருநிறுவன வரி 8. வருமான […]
சரக்குகள் மூலமாக கிடைத்துள்ள வருவாய் குறித்து தென்மேற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வே சரக்குகள் வாயிலாக கிடைத்த வருவாய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “தென்மேற்கு ரயில்வே சார்பில் இயங்கும் சரக்கு ரயில்களில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு சரக்குகள் ஏற்றி, இறக்கப்படுகின்றன. இந்த நிலையில் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கையாளப்பட்ட மொத்த சரக்குகள் மூலமாக தென்மேற்கு ரயில்வேக்கு சுமார் 3,37,00,00,000 வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட […]
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், அனைத்து மண்டலங்களிலும் பணி சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், நிலுவை ஆவணங்களை சரியாக இருப்பின் உடன் விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல் சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான உத்திகளை கையாண்டு வருவாயை பெருக்க அமைச்சர் அறிவுறுத்தினார். ஊரடங்கு காரணமாக பதிவுத்துறையில் முந்தைய மாதங்களில் குறைந்திருந்த வருவாய், கடந்த மாதத்தில் ரூ.1242.22 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரலில் ரூ.1077.43, மே ரூ.233.89, ஜூன் ரூ.789.33, ஜூலை […]
ஐபிஎல் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்வதன் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு 3800 கோடி வருவாய் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த வருடம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நமது இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 2018 லிருந்து 5 […]
அமெரிக்காவில் அதிக வருவாய் சம்பாதிப்பதில் முதலிடத்தில் இந்திய வம்சாவழியினர் உள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் மக்களின் குடும்பத்தினர் ஈட்டும் வருவாய் குறித்து தேசிய கூட்டு குழு ஆய்வு நடத்தியது. ஆசிய-பசிபிக் அமெரிக்கர்களின் வளர்ச்சிக்காக நடந்த ஆய்வின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழி குடும்பத்தினர் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். மேலும் மியான்மர் வம்சாவளி குடும்பத்தினர் 35 இலட்சம், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 31 லட்சம், லத்தின் அமெரிக்கர்கள் 39 லட்சம் சம்பாதித்து வருகின்றனர். […]
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் ரூபாய் 175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஆனது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில்கள், வணிக வளாகங்கள், மால்கள் என பொதுமக்கள் கூடும் பல இடங்கள் மூடப்பட்டிருந்தன. அதேபோல் பலருக்கு தொழில்கள் ஓடாமலும், வேலைக்குச் செல்ல முடியாமலும், பலருக்கும், பல துறைகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோவில்கள் அனைத்தும் […]
புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தகவல் அளித்துள்ளார். புதுச்சேரியில், மாஹேவில் இன்று 51 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த நபர் மாஹே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக […]