தமிழகத்தில் வீடு,மனை வாங்குவோர் அது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை அறிய ஆன்லைனில் புதிய வசதியை வருவாய்த்துறை தற்போது உருவாக்கியுள்ளது. பொதுவாக வீடு மற்றும் மனை வாங்குவோர் அது தொடர்பான பத்திரங்களையும் வில்லங்கச் சான்றிதழ்களையும் சரி பார்ப்பது வழக்கம். கட்டட அனுமதி வழங்கும் அரசுத்துறைகள் மற்றும் கடன் வழங்கும் வங்கிகள் போன்றவை சொத்து தொடர்பான உண்மை தன்மையே வழக்கறிஞர் மூலமாக ஆய்வு செய்கின்றன. இருந்தாலும் பல இடங்களில் வழக்கு விவரங்களை மறைத்து சொத்துக்கள் விற்கப்படுகிறது. இதனால் […]
Tag: வருவாய்த்துறை
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அமைச்சர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மீதான மானிய கோரிக்கையின் போது பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், 1,47,200 ஏக்கர் அளவிலான பஞ்சமி நிலங்கள் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் கையில் இருக்கிறதா? அல்லது வேறு ஏதாவது தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து உள்ளதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அந்த […]
சட்டப்பிரிவில் வருவாய்த் துறை மீதான மானிய கோரிக்கையின் போது துறைரீதியான சான்றிதழ் பெறுவதற்கு வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்று திருதுறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர், வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம். அதற்கு தெளிவுரைகள் சம்பந்தப்பட்டவை இணையதளத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சமர்ப்பிக்க இ -சேவை மையத்துக்கு செல்ல வேண்டிய தேவையே இல்லை. இ-சேவை மூலமாக சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக […]
ஆம்பூர் அருகே 35 டன் ரேஷன் அரிசி உடன் இரண்டு லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குழிதகை என்ற இடத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் துணை வட்டாட்சியர் குமார் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூரிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்ட போது, லாரி ஓட்டுநர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனை தொடர்ந்து […]
வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம் கொண்டு வரப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை […]