Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக விஜய் பாபு என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது விஜய் பாபு சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆவின் பொது மேலாளராக வேலை பார்த்த சத்திய நாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்ற சத்திய நாராயணனை வருவாய் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |