மன்னார் வளைகுடாவில் மீனவர்களின் வலையில் அரிய வகையான கடல்பசு மாட்டிய நிலையில், அதனை மீண்டும் மீனவர்கள் கடலில் விட்டிருக்கிறார்கள். கடலில் மாசு அதிகரித்ததால் கடலுக்கு அடியில் வளரக்கூடிய புற்கள் அழிந்து கொண்டிருக்கிறது. இதனால் அவற்றை உண்டு வாழக்கூடிய கடல் பசுக்களும் விரைவாக அழிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மன்னார் வளைகுடாவில் சுமார் 200-க்கும் குறைந்த கடல் பசுக்கள் தான் இருக்கிறது. எனவே அவை வாழக்கூடிய இடங்களில் கடல் புற்களை வளர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், வனத்துறை கடல் […]
Tag: வலை
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் அரிய வகை ஆழ்கடல் கவச மீன் ஒன்று சிக்கியுள்ளது. இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதிகளில் காணப்படும் இந்த மீன்கள் கரடுமுரடான வெளிப்புறம் கொண்டது. மேலும் கொம்புகள் கூரான செவில்களுடன் காணப்படுகிறது. இவ்வாறு மீன்பிடி வலையில் சிக்கிய இந்த மீனை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.
மீன்பிடி வலையில் 15 அடி நீள திமிங்கலம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது மீன்பிடி வலையில் 15 அடி நீள 2.5 டன் எடை கொண்ட ஒரு ராட்சத திமிங்கலம் சிக்கி கொண்டது. இது தொடர்பாக கால்நடை துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி அங்கு வந்த கால்நடை துறையினர் திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.