கேரள அரசு தலைமை செயலக வளாகத்தில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு தலைமை செயலக வளாகத்திலும் அதைச் சுற்றியும் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் படப்பிடிப்பு நடத்த தடைசெய்யப்பட்டுள்ளது. இனிமேல், அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக மட்டுமே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படும். இது தொடர்பான சுற்றறிக்கையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தலைமைச் செயலக வளாகத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசுக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. […]
Tag: வளாகம்
புதுச்சேரி கல்லூரி வளாகத்திற்குள் மாணவனின் புத்தகப்பையை திருடிக் கொண்டு சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளது. அங்கு 3வது மாடியில் உள்ள கட்டிடத்தில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வுக்காக புத்தகங்கள் அனைத்தும் நேற்று வகுப்பறையின் வெளியே வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு நாகரீகமாக உடை அணிந்த ஒருவர் அங்குமிங்கும் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென ஒரு பையை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அதில் ஒரு செல்போன் மற்றும் புத்தகங்கள் இருந்ததாக […]
நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழக்கறிஞரின் பெயர் பூபேந்திர சிங். இவர் நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரின் அருகில் நாட்டு துப்பாக்கி இருந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் விசாரணை செய்தபோது வழக்கறிஞர் பூபேந்திர சிங் […]
தமிழக சட்டமன்ற வளாகத்தில் திடீரென்று ஒரு நபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்போது காவல் துறை தடுப்பு அருகே ஒரு நபர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயற்சி செய்தார். இதை கவனித்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை ஊற்றி அவரை பத்திரமாக மீட்டனர். முதற்கட்டமாக ஊடகத்துறையின் அடையாள அட்டையை காட்டி கலைவாணர் அரங்கத்திற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அவரை […]
தெலுங்கானா மாநிலத்தில் குழந்தை பிறந்த ஐந்து நாளிலேயே தாய்க்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததால் குழந்தையுடன் கணவன் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கிடக்கும் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வருபவர் 20 வயது தொழிலாளி கிருஷ்ணா. இவரின் மனைவி ஆஷா. இவர்களுக்கு கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த ஐந்து நாளில் குழந்தையின் தாய்க்கு கொரோனா உறுதியான காரணத்தினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பிறந்த குழந்தைக்கு […]
துருக்கியில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உரிமையாளரின் வருகைக்காக நாய் 6 நாட்கள் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மாநிலம் வடகிழக்கில் அமைந்திருக்கும் ராப்சன் நகரில் வசித்து வருபவர் சென்டாக். இவர் போன்கக் என்ற நாயை வளர்த்துவந்தார். இவருக்கு கடந்த 14ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆம்புலன்சுக்கு பின்னாலேயே ஓடிய அந்த நாய் தொடர்ந்து அவர் அனுமதிக்கப்பட்ட வாசலிலேயே காத்திருந்தது. பின்னர் அவருக்கு ஆறு நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டது. […]
தலைமைச் செயலக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று சென்னை முதன்மை செயலர் தெரிவித்துள்ளார். சென்னை முதன்மை செயலர், தலைமைச் செயலக வளாகத்திற்குள் முகக் கவசம் அணிவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை கோரானா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழையும் ஊழியர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். தற்போது […]