Categories
தேசிய செய்திகள்

இந்த வருடம் முதல் குடிமக்களுக்கு இலவசம்…. மத்திய அமைச்சர்கள் வெளியிட்ட தகவல்….!!!!!!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 18ஆவது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டத்தில் இந்த வருடம் முதல் தொலை சட்ட சேவை நாட்டில் குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய சட்டமன்ற நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜி தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொது சேவை மையங்களில் காணொளி உட்கட்டமைப்பு மூலம் வழக்கறிஞர் தொடர்பு கொண்டு விளிம்பு நிலை மக்கள் சட்ட உதவி பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. எளிதான மற்றும் நேரடி அணுகலுக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. வழக்கறிஞர்களின் போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

நீதிமன்றம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மீது அளிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கறிஞர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு நடந்த கண்டன போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… ஐகோர்ட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில்… வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டம்..!!

பெரம்பலூரில் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. அதற்கு தலைவர் வள்ளுவன் நம்பி தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் குன்னம் பகுதியில் வருகின்ற 24-ஆம் தேதி புதிதாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு திறக்க உத்தேசித்துள்ளதை கைவிட வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற 22-ஆம் தேதி வரை ஐகோர்ட்டின் கவனத்தை […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையை விமர்சிப்பதை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும் – பார் கவுன்சில் அறிவுறுத்தல்!

144 தடை உத்தரவை அமல்படுத்த பணியாற்றி வரும் காவல்துறையினரை விமர்சிக்க வேண்டாம் என என பார் கவுன்சில் தலைவர் அமலராஜ் அறிவுறுத்தியுள்ளார். காவல்துறையை விமர்சிப்பது சட்ட விதிகளுக்கு எதிரானதாக கருதப்படும் என்றும் காவல் துறையினரை தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் எந்த வடிவிலும் விமர்சிப்பதை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார் கவுன்சில் வழக்கறிஞர்களின் பதிவுகளை நீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. மக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என […]

Categories

Tech |