விஜிபி குழுமத்தை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் பாபு தாஸ் மீது பண மோசடி புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கிருஷ்ணா ராவ் என்பவர் விஜிபி குழுமத்தின் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாபு தாஸ் மீது புகார் ஒன்றை கொடுத்து இருந்தார். அந்த புகாரில் விஜிபிக்கு சொந்தமான மூன்று சொத்துகளின் ஆவணங்களை அடிப்படையாக வைத்து பிஎன்பி என்ற நிறுவனம் மூலம் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை […]
Tag: வழக்குப் பதிவு
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இந்நாள்வரை செயல்படுத்தவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் முன் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் மாநகராட்சி காவல்துறையினர் […]
நெல்லையில் விதியை மீறி வெளியே சுற்றித் திரிந்த 70 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித் திரிந்த 70 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் முக கவசத்தை அணியாத 272 நபர்களுக்கும், சமூக இடைவெளியை […]
நெல்லையில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சுவதற்கு முயன்ற 3 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பேட்டையிலிருக்கும் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள வீட்டில் வைத்து சாராயத்தை காய்ச்சுவதாக டவுன் உதவி காவல்துறை கமிஷனரான சதீஷ்குமாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் கமிஷனரின் உத்தரவின்படி, தனிப்படை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக வீட்டில் இருந்தவர்கள் காவல்துறையினர் வருவதை பார்த்தவுடன் தப்பி ஓடினர். இதனையடுத்து அந்த வீட்டில் காவல்துறையினர் தீவிரமாக சோதனை […]
திருநெல்வேலியில் இரு தரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பாக காவல்துறையினர் 5 நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், இவருடைய தம்பியான ஆவுடையப்பன் என்பவருக்குமிடையே இடப்பிரச்சனை காரணத்தால் அடிக்கடி தகராறு வந்துள்ளது. அதேபோல் சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு வந்துள்ளது. இதனால் இசக்கி, அவருடைய மகனான திருப்பதி மற்றும் ஆவுடையப்பன், அவருடைய மகன்களான பூல் பாண்டி, குமார் ஆகியோர் ஒருவரையொருவரை தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து […]
திருநெல்வேலியில் போராட்டம் நடத்திய 6 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பெரியகுளத்தில் முத்துமனோ என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் விசாரணை கைதியாக பாளையங்கோட்டையிலிருக்கும் மத்திய சிறையில் இருந்தப்போது படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்தும், இதற்கு தொடர்புடைய சிறை அதிகாரிகளின் மீது கொலை சம்பவத்திற்கான வழக்குப்பதிவு செய்து, அவர்களை பதவி நீக்கம் செய்யவும் கோரிக்கை விடுத்து பரப்பாடியில் பொதுமக்கள் கருப்புக் கொடியை ஏந்தி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக பழனி, முத்துப்பாண்டி, […]
நெல்லையில் தேசிய அளவிலான புலனாய்வுத்துறையின் அதிகாரி போல் நடித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மெல்வின் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அவரை தேசிய அளவிலான புலனாய்வு பிரிவின் அலுவலகத்தில் கைரேகைகளின் துணை சூப்பிரண்டாக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். அவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் அவ்வேளை தொடர்பான ஸ்டிக்கரையும் ஒட்டிவைத்துள்ளார். இதற்கிடையே அவர் முருகன்குறிச்சியில் தன்னை தேசிய அளவிலான புலனாய்வுப் பிரிவின் அதிகாரி என்று […]
நெல்லையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் 6 நபர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செல்வின் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வினிற்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் திடீரென்று தல்லு,முள்ளும் ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வினும் அவரது 4 உறவினர்களும் கார்த்திகை பலமாக தாக்கியுள்ளார்கள். இதில் படுகாயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து இரு தரப்பினர்களும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை […]
மதுரையில் மத்திய சிறை கைதியை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குற்றங்களும் அநீதிகளும் பெருகிக்கொண்டே வருகிறது . இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினர்கள் பலவிதமான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் முடியாதபட்சத்தில் கைது செய்து சிறையிலடைப்பார்கள் . இந்நிலையில் மதுரை மாவட்டம் மருதுபாண்டியர் நகரில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறை இருந்துள்ளார். […]
சென்னையில் தடையை மீறி வேல் யாத்திரை மேற்கொண்ட பாஜகவினர் மீது 3 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. முதற்கட்டமாக கடந்த வெள்ளியன்று திருத்தணியில் யாத்திரையில் பங்கேற்று ஏராளமானோர் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர். இரண்டாவது கட்டமாக நேற்று திருவாற்றியூரில் நடைபெற்ற ஊர்வலத்தில் பாஜக மாநில தலைவர் முருகன், இல கணேசன், சிபி ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, கரூர் நாகராஜன் உள்ளிட்டோர் […]
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு தற்பொழுது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பின்னணியில் காமெடி, எமோஷன், காதல், ஆக்சன் என அனைத்தும் கலந்து உருவாகிவரும் இப்படத்துக்காக தனது உடல் எடையை குறைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் நடிகர் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றி இருந்ததால், இந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]
சேலம் மண்டல பத்திரப்பதிவுத் துறை துணைத்தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் 3.20 லட்சம் ரூபாய் மற்றும் 34 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மண்டல பத்திரப்பதிவுத் துறையின் கீழ் சேலம் கிழக்கு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் துணைத்தலைவராக மருத்துவர் ஆனந்த் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம் கடலூர் மண்டலத்துக்கு துணைத் தலைவராக பணியிட […]
உத்திரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பாக 19 வழக்குகளை அம்மாநில காவல்துறை பதிந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவுக்கான ஐநா அமைப்பும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக சாதி வன்முறையை தூண்ட முயற்சித்தல், பொது அமைதியை சீர்குலைக்க முயற்சித்தல் உட்பட 19 வழக்குகள் […]
பாஜக மாநில தலைவர் எல்முருகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மூன்றாம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தடைகளை விதித்திருந்தது. அந்த விதிமுறைகளை மீறி வாகனங்களில் செல்பவர்கள் மீதும் கூட்டமாக பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது, பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று வழிநடத்திய எல்.முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டம் […]
கந்துவட்டி கொடுமை கணவன் மனைவியின் உயிரை காவு வாங்கி குழந்தைகள் அனாதைகளாகிய சம்பவம் திருச்செங்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் கைலாசம்பாளையத்தில் விசைத்தறி தொழில் செய்து வந்தவர்கள் சுப்பிரமணியம், மேனகா தம்பதியினர் இவர்களுக்கு பூஜாஸ்ரீ மற்றும் நவீன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொழிலுக்காக சிலரிடம் சுப்பிரமணியம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். ஆனால் வட்டி எகிறி கொண்டு செல்லவே பணத்தை திருப்பி செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா ஊரடங்கு […]
தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான […]
கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 17,668 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தமிழகத்தில் நுழைந்து அச்சுறுத்தி நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அதேபோல இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவையும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியேவர வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியது. ஆனால் தேவையில்லாமல், அதனையும் மீறி மக்கள் இருசக்கர வாகனங்களில் […]
கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தமிழகத்தில் நுழைந்து அச்சுறுத்தி நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அதேபோல இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவையும் மத்திய அரசு அமல் படுத்தியுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியேவர வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியது. ஆனால் தேவையில்லாமல், அதனையும் மீறி மக்கள் இருசக்கர […]