Categories
தேசிய செய்திகள்

போலீஸ் நிலையத்தில்…. பாஜக தலைவரை தாக்கிய சிவசேனா கட்சியினர்…. மும்பையில் பதற்றம்…!!!!!!!

மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மராட்டிய மாநில எம்.எல்.ஏ ரவி ராணா மற்றும் அவரது மனைவியும் அமராவதி எம்பியுமான நவ்நீத் கவுர், நேற்று மாலை கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்  போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்கள் கைது செய்யப்பட்டதை […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…பெற்ற மகனை கொலை செய்த தந்தை… குடும்ப தகராறு ஏற்பட்ட விபரீதம்…!!!!

குடும்ப தகராறில் பெற்ற மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). இவர் அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பாதுகாவலராக வேலை செய்து வருகின்றார். இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவி கடலூரிலும், இரண்டாவது மனைவி வீராம்பட்டினத்திலும் வசித்து வந்துள்ளனர். இரண்டாவது மனைவிக்கு தினேஷ் (21) என்ற மகன் இருக்கிறார். இவர் புதுவையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து […]

Categories
அரசியல்

தகவல் தெரிவித்தால் ரூ.50 லட்சம்… காவல்துறை அதிரடி அறிவிப்பு…!!!!!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் பிரபல தொழிலதிபருமான ராமஜெயம் கொலை வழக்கு பற்றி  தகவல் தெரிவிப்பவருக்கு  ரூ.50 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெகுமதி அறிவிப்பை எஸ்.பி ஜெயக்குமார் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், ‘கடந்த 2012ஆம் வருடம் மாதம்-29 ஆம் தேதி தொழிலதிபர் ராமஜெயம் என்பவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி மாநகரம் தில்லைநகர் காலை நிலைய கு.எண். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷுக்கு மீண்டும் தொடரும் சிக்கல்… கதிரேசன் தம்பதி சீராய்வு மனு தாக்கல்…!!!!!!

தமிழ் சினிமாக்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தங்களின் மகன் என்றும் கடந்த 2002ஆம் ஆண்டு அவர் தங்களைப் பிரிந்து சென்றதாகவும் வேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தனுஷ் தங்களுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என அவர்கள் கேட்டிருந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த வழக்கில் கதிரேசன் மீனாட்சி தம்பதி தற்போது சீராய்வு […]

Categories
அரசியல்

கோர்ட்டின் உத்தரவால் மகிழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் ….!!!!!!!

திமுக அமைச்சர் பெரிய கருப்பனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு மருதுசகோதரர்கள் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுசகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த சென்றனர். அப்போது பெரியகருப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செய்தித்துறை வாகனத்தை சேதப்படுத்தியதாக அரசு கேமராமேன் திருப்பத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பெரியகருப்பன் போன்றோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

விதி மீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்…. போலீசார் வழக்கு பதிவு….!!!!!!!!

சென்னையில் போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபட்ட  ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். சென்னையில் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட சிறப்பு வாகன தணிக்கையின் போது  959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது  வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அதிக வசூல் செய்வதாகவும் விதிகளை சரியாக  பின்பற்றுவதில்லை எனவும் புகார்கள் எழுந்தது வந்தது. இந்த நிலையில் விதமீறலில் ஈடுபட்ட 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக இருக்காங்க …. தனி நீதிபதி கருத்து…. டிஜிபி சைலேந்திரபாபு கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம்…!!!!

காவல் துறையில் அதிகாரிகள் ஊழல் வாதிகளாக இருப்பதாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கம் செய்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வசந்தி என்பவர் நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு போன்றோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் தவறான புகார் என்ற புகாரை முடித்து நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறுவிசாரணை செய்ய உயர் நீதிமன்றம் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்தவர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு….!! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை…!!

இலங்கையைச் சேர்ந்த பிரந்திய குமார் என்பவர் பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தொழிற்சாலையில் இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இஸ்லாமிய வாசகங்கள் அடங்கிய டிஎல்பி கட்சியின் போஸ்டர் ஒன்றைச் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இஸ்லாமிய மதத்தை அவமானப்படுத்தியதாக கூறி டி எல் பி கட்சியினர் உட்பட தொழிற்சாலையில் இருந்தவர்கள் அவரை கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துள்ளனர். அதோடு அவருடைய உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் . இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு இதுல விருப்பமில்லை”… சர்ப்ரைஸ் தருவதாக கூறி… வாலிபருக்கு இளம்பெண் செய்த கொடூரம்…!!!!!!!

சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி வாலிபரை கொலை செய்ய  முயற்சி செய்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனகா பள்ளியை சேர்ந்த பெண் புஷ்பா. கல்லூரி மாணவியான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திருமணத்தை முன்னிட்டு சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி ராமகிருஷ்ணாவை  அந்தப்பெண் மலை பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது கிப்ட் கொடுப்பதாக கூறிய அவர்  கண்களை தனது துப்பட்டாவால் கட்டியிருக்கிறார். […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING : நடிகர் திலீப்புக்கு எதிரான வழக்கு….. ரத்து செய்ய மறுப்பு….!!!

கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் திலீப் குமார் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதை தொடர்ந்து அவரின் நண்பர், இயக்குனர் பாலச்சந்திரன் குமார் அளித்த பேட்டியில் நடிகை வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் பரபரப்பானது. நடிகர் திலீப் மற்றும் 6 பேர் மீது போலீசார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் திலீப்பிடம் இருந்த 11,000 வீடியோக்கள்….. 22,000 ஆடியோக்கள்….. அதிர்ச்சியில் போலீஸ்…!!!!!

நடிகர் திலீப்பிடமிருந்து 11,000 வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடித்து வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்த பிரபல நடிகை மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட நடிகையை  அந்த கும்பல் காருக்குள் வைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இது தொடர்பாக வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நடிகர் திலீப் மற்றும் நடிகையை கடத்தலுக்கு தலைவனாக செயல்பட்ட பல்சர் சோனி போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

பார் கவுன்சில் உத்தரவை ரத்து…. வழக்கறிஞர்களுக்கு தொடரும் சிக்கல்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!

தர்மபுரி மாவட்டத்தில்   அதியமான் கோட்டை என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த வரதம்மாள் என்பவருக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை தனது மகன் ஜெகநாதன் நிர்வகிக்க  அதிகாரம் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் நாகராஜ் என்பவர் இந்த இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி ராஜேந்திரன் என்பவரிடம் கடந்த 2004ல் கடன் வாங்கியிருக்கிறார். இந்த விஷயம் தெரிந்தவுடன் ஜெகநாதன் விசாரித்ததில் இடத்தை அபகரித்தது நாகராஜ், நாகேந்திரன் மட்டுமல்லாமல் ராஜாராம் ரவி, முத்துசாமி என்ற மூன்று வழக்கறிஞர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கிறது…. கோர்ட்டில் பச்சை பொய் சொன்ன தமிழக அரசு… அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!!

மெட்ரோ ரயில், ஓலோ, உபேர் என்று என்னதான் இன்று போக்குவரத்து வசதி பெருகி வந்தாலும் மருத்துவமனைக்கு செல்வது, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு போவது என அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் இன்றும் தெருமுனைகளில்  உள்ள ஆட்டோக்களை நம்பியிருக்கின்றனர். அன்றாட போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு இவற்றின் பயண கட்டணத்தை வரையறுத்து அதனை செயல்படுத்த திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை பொறுத்து பயண கட்டணத்தை நிர்ணயித்து இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நடிகை வீட்டில் கைவரிசை காட்டிய நர்ஸ்….விசாரணையில் வெளிவந்த உண்மை….!!!!!

சோனம் கபூரின் வீட்டில் கொள்ளையடித்ததை அபர்ணா ரூத் வில்சனை போலீசார் கைது செய்தனர். இந்தி திரையுலகில் பிரபல நடிகையான சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜாவின் டெல்லி வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி நகை, பணம் கடநத சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வீட்டில் பணி செய்து வரும் 20 வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அங்கே நர்சாக வேலை பார்த்து வந்த அபர்ணா ரூத் வில்சன் […]

Categories
தேசிய செய்திகள்

இதுவும் கடந்து போகும்… மாற்றம் என்பது மிக விரைவில்…. சசிகலா கருத்து…!!!!!!

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த உடனே மாற்றம் நிகழும் என காத்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இருந்தாலும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா இறங்கியிருக்கிறார். தொலைபேசி உரையாடல் ஆடியோக்களை வெளியிடுவது, ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை போன்ற காய்களை நகர்த்தினாலும் இதுவரை அவர் பக்கம் தொண்டர்கள் சாயவில்லை. அதற்கு மாறாக எடப்பாடி பழனிச்சாமி கையே ஓங்கி வருகிறது. இதற்கு இடையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனத்தை ரத்து செய்தும் அவரை கட்சியிலிருந்து நீக்கியும் கடந்த 2017 […]

Categories
மாநில செய்திகள்

இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

நீர்ப்பிடிப்பு பகுதியை இருளர் இனமக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக எதிர்த்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கார்த்திக் நாதன் என்பவர் தொடர்ந்து இருக்கின்ற வழக்கில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கர் நிலம் நீர் பிடிப்பு பகுதியாகவும், தண்ணீர் இல்லாத நாட்களில் களத்து மேடாகவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் முதுகெலும்பாக இருக்க கூடிய விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் சேகரிக்கும் நீர்ப்பிடிப்பு பகுதியை இருளர் இன […]

Categories
மாநில செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸார்…!!!!!!

காசிமேடு  பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள் வைத்திருந்த ஜீவனந்தன் என்பவரிடம் 600 கிராம் கஞ்சா, 1 கிராம் மெத்தம்பெட்டமைன், 80 LSD ஸ்டாம்ப், 150 MDMA மாத்திரைகள் மற்றும் 15 கிராம் கோடை காளான்  போன்றவற்றை பறிமுதல் செய்து வண்ணார்பேட்டை துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினரை  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். சென்னை பெருநகர காவல் வண்ணாரப்பேட்டை துணை ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை குழுவினருக்கு தண்டையார்பேட்டை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அறந்தாங்கியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்”… 17 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு…!!!

அறந்தாங்கி அருகே ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றவிடாமல் தடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி எல்.என்.புறத்தில் இருக்கும் செல்வவிநாயகர் கோயில் இடத்தை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கோவிலின் அறங்காவலர்கள் அம்மையப்பன், கண்ணன் உள்ளிட்டோர் மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்‌. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவில் அருகில் ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களில் அப்புறப்படுத்த அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்துக்கு இந்து அறநிலையத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதன்பேரில் பொக்லைன் இயந்திரத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

பதவி நீக்கம் செய்ய உத்தரவிடலாமா….? ஷாக் கொடுத்த நீதிமன்றம்… அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!!!

ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி நீக்கம் செய்ய உத்தரவிட லாமா என சென்னை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியது  அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் சிதம்பராபுரம் கிராம ஊராட்சி வார்டு மறுவரையறை செய்தபோது சிதம்பராபுரத்தில் உள்ள 84 வீடுகளை பிரித்து பழவூர் மற்றும் அவரைகுலம் பஞ்சாயத்தில் சேர்த்துள்ளனர். பழவூர் ஆவரைகுளம் பஞ்சாயத்தில் சேர்க்கப்பட்ட சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், சொத்துவரி வாங்கவும் அதற்கான ரசீதுகளை வழங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர்…. OPS, EPS தொடர்ந்த வழக்கு…. இன்று தீர்ப்பு…..!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கலந்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டது. இதனையடுத்து 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என அறிவிக்கவும், 2016 ஆம் ஆண்டு தன்னை பொதுச்செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ கட்டுப்படுத்தும் என அறிவிக்கக்கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் […]

Categories
மாநில செய்திகள்

பணியில் நீடிக்க முடியாது… ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… உயர்நீதிமன்றம் அதிரடி…!!!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லாதவர்கள் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை என கூறி இருக்கிறது. மத்திய அரசு கடந்த 2009 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு….. ரத்தம், கதறல்….. அதிரவைத்த சாட்சியம்…..!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட தந்தை மகன் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வழக்கில் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதரின் டிரைவர் ஜெய சேகர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் ஒன்றை அளித்துள்ளார். அதில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ளே இருந்து தொடர்ந்து கதறல் சத்தம் கேட்டதாகவும், […]

Categories
சினிமா

“நடிகர் சிவகார்த்திகேயன்”….. உயர்நீதிமன்றம் கேட்ட அதிரடி கேள்வி…..!!!!!

சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் சென்ற 2019ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனம்பெற்று வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது. இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூபாய் 15 கோடி சம்பளம் பேசப்பட்டு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரூ.11 கோடியை மட்டுமே கொடுத்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்த உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் அண்மையில் உயர்நீதிமன்றத்தில் மனு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:7.5 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!!!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது. இதில் அரசு தரப்பு வாதத்தின் போது, தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியும், ஆனால் அரசு […]

Categories
மாநில செய்திகள்

7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கு… ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு…!!!!!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது. இதில் அரசு தரப்பு வாதத்தின் போது, தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியும், ஆனால் அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் மேல கொலை காண்டுல சிம்பு…. இது எங்கே போய் முடியுமோ தெரியல…!!!!!

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனையடுத்து கிருஷ்ணா படத்தில் உருவாகும் 10 தல படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் சிம்பு. கன்னடத்தில் நரகன் இயக்கத்தில் சிவராஜ்குமார் முரளி போன்றோர் பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழிலும் இயக்குனர் நரதனே  இயக்கி வந்துள்ளார். […]

Categories
சினிமா

மாஜி மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…. டி. இமான் பரபரப்பு புகார்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இசையமைப்பாளர் டி இமான், மனைவி மோனிகா ரிச்சர்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ் திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக தேசிய விருது பெற்ற டி.இமான் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அவர் […]

Categories
சினிமா

“டி.இமான் முன்னாள் மனைவி மீது வழக்கு”…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராக டி.இமான் இருந்து வருகிறார். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு படங்களுக்கு இமான் இசை அமைத்து வருகிறார். அண்மையில் தனது மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக டி.இமான் அறிவித்தார். சென்ற 2008 ஆம் வருடம் மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இருவரும் கடந்த வருடம் நவம்பர் மாதமே […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இளையராஜா மேல்முறையீடு செய்த வழக்கு”… நீதிபதிகள் அதிரடி உத்தரவு…!!!

இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்த வழக்கை தள்ளி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தமிழ் சினிமா உலகில் தனக்கென நீங்கா இடத்தை பிடித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. 1978-1980 ஆம் வருடங்களில் வெளியான 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு,3 கன்னடம், 2 மலையாளம் ஆக மொத்தம் 30 படங்களில் இசை பணிகளை பட தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றதால் இந்த திரைப்படங்களின் இசையை இளையராஜா பயன்படுத்துவதற்கு தடை கோரி இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் […]

Categories
மாநில செய்திகள்

பழைய வாகனங்களுக்கு நம்பர் பிளேட்…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்…!!!!

பழைய வாகனங்களுக்கு நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வாகனங்களை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் திட்டம் 2001ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்கு முன்பாக தயாரித்த வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் பணியை அமல்படுத்த தமிழக அரசு 2021ஆம் ஆண்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு அப்பாவி பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என  மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவதாக கோவை பொன்னமராவதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் தலைமை தாங்கியுள்ளார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“என்னை அடித்தார்கள்” சிறுவன் தப்பி ஓட்டம்…. சேலத்தில் பரபரப்பு…!!

திருட்டு வழக்கில் கைதான சிறுவன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய  சிறுவன். இந்த சிறுவன் கடந்த 23ஆம் தேதி திருட்டு வழக்கில் நாமக்கல் போலீசார் கைது செய்துள்ளனர். அதன்பின் அந்த சிறுவனை போலீசார் சேலம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். அப்போது திருட்டு வழக்கில் கைதான அந்த சிறுவனின் கன்னம் வீங்கியிருந்தது. இதைப்பற்றி […]

Categories
மாநில செய்திகள்

பேரூராட்சி தேர்தல் பஞ்சாயத்து… ஆணையத்திற்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி…!!!!

கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தகராறு தொடர்பான புகார்கள் அதில் பதிவான வழக்குகள் போன்ற ஆவணங்களை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தலை ரத்து செய்து பிப்ரவரி 7ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பேரூராட்சியில் 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில் 1வது வார்டு சுயேச்சை வேட்பாளர் எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, 2வது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராஜேஸ்வரி, 11 […]

Categories
மாநில செய்திகள்

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு”…. உயர்நீதிமன்றம் அதிரடி…..!!!!!

தமிழ்நாடு மின்துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி சென்ற 2011 -2015 ஆம் வருடங்களில் அப்போதைய முதல்வா் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். அப்போது ஓட்டுநா், நடத்துநா் வேலை தருவதாகக் சொல்லி பண மோசடியில் ஈடுபட்டதாக அவா் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குகளைப்பதிவு செய்தனா். இவ்வழக்குகள் நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இதனிடையில் செந்தில்பாலாஜி மீது மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனால் எனக்கு 20 கோடி நஷ்டம்”…. பதில் மனு தாக்கல் செய்த ஞானவேல்ராஜா….!!!!

சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்த நிலையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் ஞானவேல்ராஜா. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் சென்ற 2019 ஆம் வருடம் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடித்திருந்தார். கதாநாயகியாக நயன்தாரா நடித்த படத்தை ராஜேஷ் இயக்கி இருந்தார். படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்திக்க நேர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்த படத்திற்கு சம்பளமாக சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி பேசப்பட்ட நிலையில் 11 கோடி மட்டுமே கொடுத்ததாகவும் அதற்கான டிடிஎஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு…. புதிய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்….!!!!

மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் வேலுமணி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி ரூபாய் 100 கோடிக்கும் மேற்பட்ட நிரந்தர வைப்புத் தொகைக்கான வங்கி ரசீதுகளை பறிமுதல் செய்தது. வழக்கு விசாரணை முடியும் வரை லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் நிரந்தர வைப்பீடுகளை முடக்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதி ஜே.ஓம்பிரகாஷ் […]

Categories
மாநில செய்திகள்

வேன் மோதி பலியான மாணவர்…. பள்ளி தாளாளர், முதல்வர் மீது பாயும் வழக்கு….!!!!

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் தீக்சித் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரிவர்ஸில் வந்த வேன் திடீரென மோதியதால் மாணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக வேனை இயக்கிய ஓட்டுனர் பூங்காவனத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மாவட்ட கல்வி […]

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்… பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி தற்கொலை…. வெளியான பகிர் காரணம்…!!!!

ஆந்திர மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பிரம்மர்ஷி என்னும்  பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில்  மிஸ்பா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் எப்போதும் அனைத்து தேர்விலும் முதலிடமே பெற்று வந்திருக்கிறார். அதேபோல், பூஜிதா என்ற மாணவி அனைத்து தேர்விலும் 2அம் இடம் பெற்று வந்துள்ளார். இந்த மாணவி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெண்கள் குறித்து அவதூறு பேச்சு… பிரபல நடிகர் மீது புகார்…. பெரும் பரபரப்பு…!!!!

பயில்வான் ரங்கநாதன் மீது பெண்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பதி விடுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் சினிமா பிரபலங்கள் போன்ற பெண்கள் பலர் குறித்து அவதூறான கருத்துக்களை இணையத்தில் பரப்பி வருவதாக சொல்லப்படுகிறது. எனவே இதுபோல் பேசும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.வி.சேகர் காவல்துறை முன் ஆஜராக வேண்டும்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!!

பெண் பத்திரிக்கையாளர் பற்றி  அவதூறாகவும் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் நடிகரும், இயக்குனருமான எஸ் வி சேகர் பதிவிட்டது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.இந்நிலையில்  இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நடிகர் எஸ்வி சேகர் காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கோவில்களில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் விஐபிக்களை கடவுள் மன்னிக்க மாட்டார்…. நீதிபதி….!!!!

கோவில்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விஐபிக்களை கடவுள் மன்னிக்கமாட்டார் என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு அனுமதி சீட்டை தவறாக பயன்படுத்திய ஊழியர் மீது நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று  நீதிபதி எம் எஸ் சுப்ரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி மத நம்பிக்கை உள்ளவர்களே  கோவில்களுக்கு வருகிறார்கள். கோவிலை பொறுத்தவரை கடவுள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக பார்த்தேன்”… இளவரசி வாக்கு மூலத்தில்…. வெளியான தகவல்கள்…!!!!

ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்தேன் என இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகிறது. அந்த மர்மம் குறித்து விசாரணை நடைபெறுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை  தொடங்கி இருக்கிறது. இடையில் சில நாட்களாக விசாரணை நடைபெறவில்லை. இந்நிலையில்ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

“ஜெயலலிதா மரணம்”…. நாளையும் விசாரணை உண்டு…. வெளியான தகவல்…..!!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நடிகரின் தம்பி திடீர் கைது… காரணம் என்ன…?

கேரளத் திரை உலகில் பிரபலமான  நடிகர் சுரேஷ் கோபி. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நிலம் வாங்கி தருவதாக சொல்லி, தொழிலதிபரிடம் ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததாக சுரேஷ் கோபியின் இரண்டாவது சகோதரர் சுனில்கோபியை கோவை போலீசார் தூக்கி சிறையில் அடைத்துள்ளனர். அதாவது, சுனில் கோபி கோவை நவக்கரை பகுதியில் மயில்சாமி என்பவரது 4.52 ஏக்கர் நிலத்தை முதலில் வாங்கியிருக்கிறார். அதற்கான […]

Categories
மாநில செய்திகள்

சென்னை அயோத்தியா மண்டபம்… சமாஜம் அமைப்பு தொடர்ந்த வழக்கு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபம் அற நிலைய கட்டுப்பாட்டு துறைக்கு சென்றதால் சமாஜம் அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது.  சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அயோத்யா மண்டபம் 1954ஆம் வருடம் கட்டப்பட்டதிலிருந்து ராம சமாஜம் அமைப்பு நிர்வகித்து வந்த நிலையில் அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றது. இதனிடையில் மண்டபத்திற்கு உள்ளே அனுமன் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டு, இந்து அறநிலையத்துறை தனதாக்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கானது நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ மேற்படிப்பில் யாருக்கெல்லாம் ஊக்க மதிப்பெண்…? தெளிவுப்படுத்திய உயர்நீதிமன்றம்…!!!!

மதிப்பெண் வழங்க கோரி விண்ணப்பித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் தண்டலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அருண்குமார் மருத்துவ மேற்படிப்பு கிராமப்புறங்களில் பணியாளர்களுக்கான ஐந்து சதவிகித ஊக்க  மதிப்பெண்களை வழங்க கோரி விண்ணப்பித்துள்ளார். அவரது கோரிக்கையை மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு நிராகரித்துள்ளது. இதனை எதிர்த்து அருண்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மாவட்ட தலை நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மருத்துவக் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்” திட்டம்…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

முப்படைகளிலும்  ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காக மத்திய அரசு கடந்த 2015 இல் அமல்படுத்திய “ஒரே பதவி ஒரே ஓய்வூதிய கொள்கை” செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து இந்திய ஓய்வு பெற்ற வீரர்கள் இயக்கம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் நீதிபதிகள் இதை டி.ஒய் சந்திர சூட், சூர்ய காந்த்,விக்ரம் நாத், ஆகியோரை கொண்ட  கொண்ட அமர்வு […]

Categories
தேசிய செய்திகள்

“நல்லா ஏமாத்திட்டாங்க” நீதிமன்றத்திற்கு ஓடிய கணவர்… அதிர்ச்சி பின்னணி…!!!!

ஆணுறுப்பு இருக்கும் பெண்ணை தனக்கு ஏமாற்றி திருமணம் செய்து விட்டதால் விவாகரத்து வழங்கும்படி கணவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தனது மனைவிக்கு பெண்மை இல்லை என்று. அவர் ஒரு பெண் அல்ல எனவும் அவருக்கு தெரியவந்தது. பரிசோதனையில் அவர் மனைவிக்கு பாலுறுப்பில் குறைபாடு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. மூன்று […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் தொடர்ந்த மனு மீதான வழக்கு… நாளை இடைக்கால உத்தரவு…!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 19 ஆவது நாளாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியினை ரஷ்யா  நெருங்கியுள்ள நிலையில், ரஷ்யா இனப்படுகொலை நடத்துவதாக குற்றம் சாற்றி உக்ரைன் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் உக்ரைன்  தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது.  ரஷ்யா  இனப்படுகொலை நடத்துவதாக குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்திருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செக்…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பணி நேரத்தில் செல்போனில் வீடியோ எடுத்து அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்வதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி எம்.எஸ்  சுப்பிரமணியம் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை […]

Categories

Tech |