Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6 போலீஸ் மீது கொலை வழக்கு…. எஸ்.ஐ ரகு கணேஷ் கைது…. அதிரடி காட்டும் சிபிசிஐடி ….!!

சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்டதில் இருந்து மிக விரைவாக விசாரணை, உடனடியாக கைது நடவடிக்கை என்பது நிகழ்ந்திருக்கின்றது. இவ்வளவு நடவடிக்கைகளுக்கு சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்ட நேரங்களும் மிகவும் குறைவு. குறிப்பாக நேற்று மாலை பெற்றுக்கொண்ட ஆவணங்களின்படி இன்று காலை முதலே விசாரணை தொடங்கியது. அதன் அடிப்படையில் இன்று பல்வேறு இடங்களில்  விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே மாஜிஸ்ட்ரேட் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: போலீஸ் மீது வழக்கு பதிவு எப்போது?- சிபிசிஐடி ஐ.ஜி பதில் …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு எப்போது செய்யப்படும் என்ற கேள்விக்கு சிபிசிஐடி ஐ.ஜி பதில் அளித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் விரைந்து தொடர்ந்து விசாரித்து வருகிறார். முன்னதாக நேற்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்தபோது இந்த வழக்கினை விசாரித்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#சத்தியமா_விடவே_கூடாது – நடிகர் ரஜினி ஆவேசம் …!!

தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமான கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தாக வேண்டும் . விடக்கூடாது சத்தியமாக விடக்கூடாது என்று ரஜினிகாந்த் ட்விட் செய்துள்ளார். #சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a — Rajinikanth (@rajinikanth) July 1, 2020

Categories
உலக செய்திகள்

35 வயது அதிகமான பெண்ணை மணந்த இளைஞன்… பின் தெரிந்த உண்மை.. சட்ட நடவடிக்கையில் இறங்கிய பெண்.!!

பணத்திற்கு ஆசைப்பட்டு தன்னை திருமணம் செய்தவர் இறந்த நிலையில், அவரது குடும்பத்தினர் வைத்திருக்கும் தனது சில சொத்துக்களை பெற ஸ்காட்லாந்து பெண்  வழக்கு தொடரவுள்ளார். ஸ்காட்லாந்தை சேர்ந்த டையன் என்ற பெண் 2012ஆம் வருடம் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த சமயம் தன்னை விட 35 வயது சிறியவரான ப்ரியஞ்சனா என்ற இளைஞனை சந்தித்துள்ளார். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து ப்ரியஞ்சனாவிற்காக அதிக அளவு பணத்தை செலவு செய்யத் தொடங்கினார் டையன். பிரிட்டனில் தனக்கு […]

Categories
மாநில செய்திகள்

மதுரை சித்த மருத்துவர் தயாரித்த “IMPRO மருந்துப்பொடியில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது”… தமிழக அரசு!!

மதுரை அரசு சித்த மருத்துவரின் 66 மூலிகைகள் அடங்கிய சூரணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் மருத்துவ வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மூலிகை சூரணத்தை மத்திய சித்த மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதாக அந்த குழு தகவல் அளித்துள்ளது. 66 மூலிகை அடங்கிய சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO எனும் மருந்துப்பொடியை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தெரிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி?… விளக்கமளிக்க மின்வாரியத்திற்கு உத்தரவு!!

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி? என்பது குறித்து விளக்கமளித்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கும், மின் வாரியத்திற்கும் இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் அளவீடு மற்றும் கணக்கீட்டு முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

தெரிந்த நபரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு..!!

16 வயது சிறுமியிடம் தவறாக நடந்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு விடுதலை அளிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த கோட்டேன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 16 வயது சிறுமியிடம் தவறாக நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இது குறித்து காவத்துறையினர் விசாரணையில் சிறுமி அந்த நபருக்கு பழக்கமானவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய கோட்டேன் சம்பவம் நடந்த அன்று தான் அதிக அளவு மது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல்…!!

கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழப்பு விவாகரத்தில், அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தமக்கு அதிகமாக வியர்வை வருவதாக பென்னிக்ஸ் தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைப்பதாக புகார்… உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்க அறிவுறுத்தி, வழக்கை ஜூலை 2ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வழக்கு விவரம்: செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயமாக கருதப்படுகிறது. இந்த சரணாலயத்திற்கு 27 வகையான பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து வருவது வழக்கம். இந்த நிலையில் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

“பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யுங்க”… சிறையில் உயிரிழந்த இருவர் குறித்து ஐகோர்ட் கிளை உத்தரவு!!

தூத்துக்குடி கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செல்வராணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தந்தை, மகன் இருவரின் உடலையும் 3 மருத்துவர்களைக் கொண்ட குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கு தள்ளுபடி

தமிழக அமைச்சர் கே.சி வீரமணி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி எதிராக இரண்டு பேர் வழக்கு தொடர்ந்தார்கள். காட்பாடி சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்த இந்த வழக்கில் ஒப்பந்தக்காரர்களுடன் சேர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது நிலத்தை அபகரித்ததாக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி வீரமணிக்கு எதிராக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கைஎடுக்கவில்லை. எனவே அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் மின் அளவீடு செய்யும் முறையில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை… மின்வாரியம் பதில்!!

மின் அளவீடு செய்யும் முறையிலும், கட்டணம் நிர்ணயிக்கும் முறையிலும் எந்த விதிமீறலும் இல்லை என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் விதிகளின்பிடி கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி எம்.எல்.ரவி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் அடிப்படையில் இந்த இரு […]

Categories
மாநில செய்திகள்

எந்த பரிசோதனை அடிப்படையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்குகிறீர்கள்?: அரசுக்கு கோர்ட் கேள்வி!!

கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் போன்றவற்றை எந்த பரிசோதனை அடிப்படையில் மக்களுக்கு வாங்குகிறீர்கள்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அங்கீகரித்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கொரோனவாவிற்காக கண்டுபிடிக்கும் மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஆங்கில மருத்துவ லாபி என்பது இயற்கை மருத்துவத்தை அழித்து விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கு விவரம்: சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO […]

Categories
மாநில செய்திகள்

மதுக்கடைகளுக்கு பதில் மக்கள் பாதுகாப்பு பணிக்கு அதிக போலீசாரை ஈடுபடுத்த வழக்கு… பதில்தர அரசுக்கு கெடு..!!

டாஸ்மாக் கடைகளுக்கான பாதுகாப்பை குறைத்து கொரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணிக்கு அதிக காவல்துறையினரை ஈடுப்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக உள்துறை, வருவாய் துறை செயலாளர்கள், டிஜிபி, டாஸ்மாக் நிர்வாகம் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: கோவையை சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா பரவலை தடுப்பதற்கு பலகட்டங்களாக ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்து ஐகோர்ட்..!!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்,பாரதியின் ஜாமினை ரத்து செய்யகோரிய வழக்கு மீதான தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விவரம்: கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பட்டியலினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு […]

Categories
Uncategorized

“டெண்டரே நடக்கல.. முறைகேடு எப்படி நடந்திருக்கும்”… கேள்வி எழுப்பிய கோர்ட், வழக்கை வாபஸ் பெற்ற திமுக!!

தஞ்சை மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் முறைகேடு என ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம்சாட்டி தொடர்ந்த வழக்கை, ஆர்.எஸ் பாரதி வாபஸ் பெற்றுள்ளார். வழக்கின் விவரம்: நெடுஞ்சாலை துறையில் சாலை அமைக்க முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 462 கி.மீ சாலைகள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் மீது நடவடிக்கை…. கோர்ட்க்கு போன திமுக…. பின் வாங்கியது ? பரபரப்பு தகவல் …!!

தமிழக முதல்வர், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது. தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.12ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக கிராமங்களில் இணையதள வசதிக்கு 2019ஆம் ஆண்டு டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டது. ஆயிரத்து 950 கோடி மதிப்பிலான இந்த டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் மே மதமே புகார் அளித்தும், எந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நடிகர் சுஷாந்த் சிங் மரணம்”… நடிகர் சல்மான் கான் மற்றும் இயக்குனர்களுக்கு எதிராக வழக்கு..!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகர் சல்மான்கான் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஷாந்த் ராஜ்புத்தின் வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா, பீகாரின் முஸாபார்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர்கள் சஞ்சய் லீலா பன்சாலி, கரண் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி, மும்பையில் இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு… மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர், அமைச்சர் மீது வழக்குப்பதிய திமுக ஆர்.எஸ்.பாரதி மனு… லஞ்சஒழிப்புத்துறை பதில்தர உத்தரவு!!

பைபர் ஆப்டிக்ஸ் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்று ஆர்.எஸ்.பாரதி சென்னை உயநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது லஞ்சஒழிப்பு துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனாகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

காப்பகத்தில் சிறுவர்களுக்கு கொரோனா எப்படி பரவியது என்பது தெரியவில்லை… தமிழக அரசு பதில்..!!

சென்னை ராயபுரம் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், நோயின் தாக்கத்தை வைத்து குழந்தைகள் பிரிக்கப்பட்டு பல மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் வந்துள்ளதால் கொரோனா எப்படி பரவியது என்பது தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா அறிக்கை தாக்கல் செய்தார். குழந்தைகளுக்கு சாதாரண […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு… 17ல் உத்தரவு பிறப்பிக்கப்படும்… உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!!

ஊரடங்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இம்மானுவேல் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்து மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பலர் வருவாய் இழந்து வறுமையில் வாடியுள்ளனர். குறிப்பாக குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு… அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஐகோர்ட்டில் மனு..!!

தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விவரம்: மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும்… ஐகோர்ட்டில் மனுதாக்கல்!!

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை… தமிழக அரசு!!

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தற்போது வரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஜெயபாரதி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: தமிழகத்தில் வழிபாட்டு தளங்கள் திறக்கப்படும்போது உரிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை வகுக்கக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் ஜெயபாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் போயஸ் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு தள்ளுபடி…ஐகோர்ட்!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த இந்த மனுவை வாபஸ் பெற்று கொண்டதையடுத்து வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

காட்மேன் வெப் சீரிஸ் – மத்தியக் குற்றப்பிரிவு வழக்கு 

காட் மேன் வெப்சீரிஸ் இணை இயக்குனர், தயாரிப்பாளர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். காட் மேன் வெப்சீரிஸ் ட்ரைலரில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளது தொடர்பாக பிஜேபி உள்பட அமைப்பினர் சென்னை சென்னை மத்திய குற்றப்பிரிவு புகார் அளித்திருந்தார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு பரப்பும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளது, அதே போல அந்த வசனங்களை நீக்க வேண்டும் . இந்த வெப் சீரிஸ் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற ஒரு […]

Categories
அரசியல் சற்றுமுன்

ஆர்எஸ் பாரதிக்கு ஜாமீன் கிடைக்குமா ? தீர்ப்பு ஒத்திவைப்பு …!!

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இது தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் ஆர் […]

Categories
அரசியல்

செந்தில்பாலாஜி-யின் முன் ஜாமின் வழக்கு… தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி முன்ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த, 12ல் கரூர் கலெக்டர் அன்பழகனை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார். பின், நிருபர்களிடம் பேசும்போது, கலெக்டரை படித்த முட்டாள் எனவும், இனிமேல் ஆய்வு கூட்டத்துக்கு எங்களை அழைக்கமால் இருந்தால், கலெக்டர் வெளியே நடமாட முடியாது’ எனவும் தெரிவித்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசில், கலெக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

விமானத்தின் நடு இருக்கையிலும் பயணிகளை ஏற்றி வர அனுமதி: உச்சநீதிமன்றம் உத்தரவு!!

விமானத்தின் நாடு இருக்கையிலும் பயணிகளை ஏற்றி வர 10 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா முடியும் வரை விமானத்தின் நாடு இருக்கையை காலியாக வைத்து இயக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. விமானி தேவன் கனானி என்பவர் முன்பை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்தார். அதில், சான்பிரான்ஸிஸ்கொ மற்றும் மும்பை இடையிலான விமானத்தில் நாடு இருக்கையிலும் பயணிகளை ஆற வைத்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வந்த போது உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என குற்றம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வேண்டான்னு சொல்லுங்க…! ”ரத்து பண்ணுங்க” நீதிமன்றம் ஓடிய திமுக ..!!

தங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி தயாநிதிமாறன், டி.ஆர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அண்மையில் தமிழக தலைமைச்செயலாளர் சந்திக்க சென்ற திமுக  எம்.பிக்களான தயாநிதிமாறன், டி.ஆர் பாலு தங்களை தாழ்த்தப்பட்டவராக நடத்துவதாக பேட்டியளித்தார். தயாநிதிமாறனின் இந்த பேச்சுக்கு கண்டம் எழுந்தநிலையில் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதனிடையே  தயாநிதிமாறன், டி.ஆர் பாலு மீது கோயம்புத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் காவல்நிலையத்தில் புகாரின் கொடுத்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரமலான் தொழுகை நடத்த அனுமதி – வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் …!!

ரமலான் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்தது, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது முஸ்லிம்கள் ரமலான் நோன்பு இருப்பதால் மே 25ஆம் தேதி மதுரையில் உள்ள பள்ளிவாசலில் 9 காலை 11 மணி வரை இரண்டு மணி நேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி தர வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வுகளை எப்படி நடத்துவீர்கள்?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வுகளை எப்படி நடத்துவீர்கள்? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1ம் தேதி நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் தேர்வு தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தற்போது ஜூன் 15ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜூன் 15ம் தேதியும் தேர்வுகள் நடத்தக்கூடாது என்றும், பள்ளிகளில் வகுப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா… இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட பல வழக்குகளை விசாரித்தவர்!

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா டிங்ரே செஹால் ராஜினாமா செய்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் வழக்கை விசாரித்தவர் இவர். அடுத்த மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் நீதிபதி இன்று ராஜினாமா செய்துள்ளார். டெல்லி மாநில நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி சங்கீதா திங்க்ரா சேகல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம் உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறவிருந்த நீதிபதி சேகல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க கோரி வழக்கு…. தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!!

சலூன் கடைகள் செயல்பட அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச்25ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சலூன் கடைகள் செயல் பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கத் தலைவர் முனுசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விவரம்: அவர் தாக்கல் செய்த மனுவில், “ஊரடங்கிற்கு முன்னதாக 15 ஆயிரம் ரூபாய் வரை […]

Categories
மாநில செய்திகள்

ஊடரங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து!!

ஊடரங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லக்கூடிய பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்களை காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் துன்புறுத்தக்கூடாது எனவும், அவ்வாறு துன்புறுத்த தடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது: அரசு விளக்கம்!!

தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விவரம்: சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட மதவழிபாட்டு தலங்களை திறக்க தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிப்பு: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்!!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வீடுகள், நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் எனக்கூறி ராஜசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சொத்துவரி, விவசாயக்கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணியில் சேரும் இளைஞர்களின் வயது வரம்பை தளர்த்தகோரி வழக்கு: மறுப்பு தெரிவித்தது ஐகோர்ட்!!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது உயர்ந்தப்பட்டுள்ளதால் வேலை தேடும் இளைஞர்களின் பணிக்கு சேரும் வரம்பை தளர்த்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் நிவாரண பணிகளுக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் விடுப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகியவை ஓராண்டிற்கு நிறுத்திவைப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல […]

Categories
தேசிய செய்திகள்

“விளம்பரத்திற்காக வழக்கு தொடராதீங்க”… மனுதாரருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் கண்டனம்!

நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.மேலும் மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடக்கோரி டெல்லியை சேர்ந்த கவுதம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். நாட்டில், மதுக்கடைகளுக்கு முன்பும், பான்பராக் கடைகளுக்கு முன்பும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்தது. எனவே மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடவேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு!!

பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து, நகராட்சி நிர்வாக ஆணையர், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். வாணியம்பாடியில் கடந்த 12ம் தேதி காலையில் பழவியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களின் பழங்களை வீதியில் வீசியும், தள்ளுவண்டிகளை நகராட்சி ஆணையர் கவிழ்த்து விட்டார். […]

Categories
மாநில செய்திகள்

“அவர் அதிமுகவை சேர்ந்தவர்” கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்… மனுதாரருக்கு ரூ.20,000 அபராதம் விதித்தது ஐகோர்ட்

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கு விவரம்: மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய சென்னை சேர்ந்த ராம்குமார் ஆதீசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த மே 7ம் தேதி தமிழகத்தில் நிபந்தனையுடன் டாஸ்மாக் கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம் மறுப்பு!!

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய சென்னை உயநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்தும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: கடந்த 2015-16-ம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை […]

Categories
மாநில செய்திகள்

வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு 1 மணி நேரத்தில் இ-பாஸ்: தமிழக அரசு விளக்கம்!

வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு 1 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சந்தேக தன்மை உடைய விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் வைக்கப்படுகிறது என்றும், கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும்… உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு..!!

சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மே 11ம் தேதி விசாரணை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வழக்கு விவரம்: கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், 46 வது நாளாக ஊரடங்கு அமலில் […]

Categories
மாநில செய்திகள்

“மதுக்கடைகளை மூட சொல்லுங்க”… உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மக்கள் நீதி மய்யம்..!

மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில், மதுவால் பாதிப்பு ஏற்படும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுநபா கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவை தள்ளுபடி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது – நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மது மொத்த விற்பனை செய்யப்படாது, தனிநபர்களுக்கு தான் விற்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுக்கள் மீது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர் ஆய்வகங்கள் உள்ளன?: அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!

கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர்., ஆய்வகங்கள் உள்ளன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த தொடர்பாக மே 12ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, கொரோனா வைரசை கண்டறிந்து, அந்த வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டியது முக்கியம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலை மேற்கோள்காட்டி மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் […]

Categories
மாநில செய்திகள்

சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூல்… நெடுஞ்சாலை துறையை அணுகுங்க… ஐகோர்ட் உத்தரவு

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25 முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் பிறகு, கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் […]

Categories
உலக செய்திகள்

மூடி மறைத்த சீனா…! ”ரவுண்டு கட்டிய அமெரிக்கா” நீதிமன்றத்தில் வழக்கு …!!

அமெரிக்கா மாநிலமான மிசோரியில்  கொரோனா பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சீனாவிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்புகளை உலக நாடுகளுக்கு மறைத்தல், கொரோனா பற்றிய தகவல்களை அறிந்த நபர்களை கைது செய்தல், உலக நாடுகள் பலவற்றிற்கு பொருளாதார பாதிப்பையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்ட சீனாவை எதிர்த்து அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் அரசு சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை பரப்பிய சீனாவை எதிர்த்து முதல் வழக்கை அமெரிக்காவில் இருக்கும் மிசோரி மாநிலம் தொடர்ந்துள்ளது. […]

Categories

Tech |