கேரளாவில் ஷவர்மாவை தயாரிக்க உரிமமில்லை எனில் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஷவர்மா தயாரிப்பது குறித்த வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டு இருக்கிறது. அவற்றில் ஷவர்மா தயாரிக்க உரிமம்பெற தவறினால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதுடன், 6 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஷவர்மாவை திறந்த சூழலில் தயாரிக்ககூடாது எனவும் 4 மணிநேரம் கழித்து ஷவர்மாவில் மீதம் உள்ள இறைச்சியை பயன்படுத்த வேண்டாம் எனவும் […]
Tag: வழிகாட்டுதல்
அரசு பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறார் திரைப்படங்களை திரையிடுவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 2022-2023 ஆம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், திரைப்படத்துக்கென ஒரு பாடவேளையை ஒதுக்க வேண்டும் என்றும், திரையிடலுக்கு முன்பு பின்பும் ஆசிரியர்கள் அப்படம் குறித்து மாணவர்கள் கலந்துரையாட வேண்டும், திரையிடப்படும் படம் குறித்து மாணவர்கள் கட்டாயமாக விமர்சனம் எழுத […]
புதுச்சேரியில் அடுத்த கல்வியாண்டில் இருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்த உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அதற்கென தனியாக கல்வி வாரியம் இல்லாததால் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருகின்றது. இதனை தொடர்ந்து 2014 – 15 ஆம் கல்வி ஆண்டு தொடக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு வகுப்பிற்கும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி படிப்படியாக கடந்து 2018 – 19 ஆம் கல்வி […]
ஐசிம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பின்பு 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதனால் மீண்டும் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் […]
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான வழிகாட்டுதலை அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இதனால் உலக நாடுகள் கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக தங்கள் நாட்டு குடிமக்களுக்கு தடுப்பு செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்னென்ன செய்யலாம்? என்றும் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது? என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சில […]