Categories
மாநில செய்திகள்

“காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே”.. வழிப்பறி செய்த மர்ம நபர்கள்… பெரும் பரபரப்பு..!!!!!

ராணிபேட்டையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு ரத்தினகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நந்தியாலம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேல் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த மர்ம நபர்கள் வழிப்பறி செய்ய முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

FLASH: பேருந்தை மறித்து துணிகர கொள்ளை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநில ஆழ்வார் மற்றும் பிலாஸ்பூர் நகருக்கு அருகில் கே.எம்.பி. எக்ஸ்பிரஸ் சாலையில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்ஸின் பின் தொடர்ந்து வந்த கார் பேருந்து முன்பு நின்றது. அதன் பிறகு அந்த காரில் இருந்து இறங்கிய 6 பேரைக் கொண்ட கும்பல் பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். அதனை தொடர்ந்து பஸ்ஸுக்குள் நுழைந்த கும்பல் பயணிகளை மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை பறிக்க முயன்றனர். இதனை தட்டி கேட்ட பஸ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உணவு டெலிவரிக்காக சென்ற ஊழியர்…. வழியில் மர்ம நபர்களின் கைவரிசை…. பரபரப்பு….!!!!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் (25). இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 12-ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு இவர் கணபதி பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு உணவை விநியோகம் செய்துவிட்டு காந்திபுரம் திரும்பினார். இதையடுத்து அவர் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகில் வந்தபோது சாலையின் ஓரத்தில் தன் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சிறுநீர் கழித்தார். இந்நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. மர்ம நபர்கள் செய்த காரியம்…. ரூ.24 லட்சத்தை இழந்த வியாபாரிகள்…. பரபரப்பு….!!!!

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வருபவர் பஷீர்அகமது. இவர் தனது நண்பரான காஜா மொய்தீன் என்பவருடன் பூக்கடை பகுதியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அருகில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வியாபாரிகளான இவர்களை வேறு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் வழிமறித்தனர். அவர்கள் “நாங்கள் போலீஸ், உங்கள் கையில் உள்ள பையில் என்ன இருக்கிறது..?” என்று கேட்டு சோதனை மேற்கொண்டனர். அந்த பையில் ரூபாய் 24 லட்சம் இருந்தது. அதற்கு வியாபாரிகள் இருவரும் “என்.எஸ்.சி. போஸ் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் அத்துமீறி செயல்பட்ட சிறுவர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…. போலீஸ் விசாரணை….!!!!

திருப்பூர் ரயில் நிலையம் அருகில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மதியஉணவு இடைவேளையில் அருகேயுள்ள கடைகளுக்கு சென்று தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவார்கள். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு கீழே பள்ளி படிப்பை பாதியிலேயே விட்ட சிறுவர்கள் சில பேர் மாணவர்களை மிரட்டி பணத்தை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோன்று நேற்று மதியம் மாணவர் ஒருவர் சென்ற போது சிறுவர்கள் அவரை வழிமறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்மநபர்…. பணம், தங்க கட்டி கொள்ளை….. போலீசார் வலைவீச்சு….!!!

சென்னை திருவல்லிக்கேணி முக்தருனிஷா பேகம் தெருவில் சாகுல் அமீது(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று திருவல்லிக்கேணி ஓ.வி.எம் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முகத்தில் முகக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் சாகுல் அமீதுவின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தார். உடனே சாகுல் அமீது மோட்டார் சைக்கிள் வேகத்தை குறைத்தார். அதற்குள் அந்த மரும நபர் சாகுல் அமீது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினார். அதன் பிறகு அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வழிப்பறியில் ஈடுபட்ட இருவர்”…. கைது செய்த போலீசார்….!!!!!

வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் தேசிய நெடுஞ்சாலை ரோட்டோரமாக ராஜாராம் மற்றும் அவரின் நண்பர் சதீஷ் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ராஜாராமை தனியாக அழைத்து எந்த ஊர் என கேட்டதோடு தனியாக பேச வேண்டும் எனக் கூறி சிறிது தூரம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ராஜாராம் சட்டை பையில் இருந்த 550 எடுத்துக்கொண்டு செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் ராஜாராம் மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை மிரட்டி காரை நிறுத்திய மர்ம கும்பல்…. ஓட்டுனரிடம் வழிப்பறி…. சென்னையில் பரபரப்பு…!!

கார் ஓட்டுநரிடம் மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மதுரவாயில்-தாம்பரம் பைபாஸ் ரோட்டில் போரூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அவர் சாலையில் வரும் ஒரு காரை நிறுத்தி தனக்கு லிப்ட் தருமாறு கேட்டுள்ளார். உடனே கார் ஓட்டுனரும் அந்த இளம் பெண்ணை தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டார். அப்போது திடீரென வந்த 4 பேர் கொண்ட கும்பல் கார் ஓட்டுனரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பணத்தை எடு…. கத்தியைக் காட்டி மிரட்டி…. 2,000 ரூபாயை பறித்து சென்ற வாலிபரை தூக்கிய போலீஸ்..!!

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம், அருந்ததியர் தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி ரகு(40). இவர் விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பு அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ரகுவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். அதன்பின் அவரிடம் இருந்த ரூ2,000-த்தை பறித்து விட்டு தப்பித்து சென்று விட்டார். இதுகுறித்து ரகு விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. கத்தியை காட்டி மிரட்டிய நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

பெண்ணிடம் இருந்து நகைப் பறிக்க முயன்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை பகுதியில் ஜெனட் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது பால்விலை பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக காட்டுக்கடை பகுதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜெனட்டை வழிமறித்து  நகையை கழற்றி தருமாறு கூறியுள்ளனர். அதற்கு ஜெனட் மறுப்பு தெரிவிக்கவே கத்தியை காட்டி மிரட்டி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பல்வேறு திருட்டில் தொடர்பு…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. 2 வாலிபர்கள் குண்டரில் கைது….!!

வெவ்வேறு சம்பவங்களில் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பி.டி.ஆர் காலனியில் வசித்து வரும் சந்திரா என்ற மூதாட்டியின் 4 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் ஒருவர் கடந்த வாரம் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதேபோல் பெரியகுளம் குள்ளப்புரம் அருகே உள்ள வரதராஜநகரில் வசித்து வரும் செல்வி என்ற பெண்ணிடம் இருந்தும் மர்மநபர்கள் 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்கரையில்… வாலிபரிடம் செல்போன்கள் பறிப்பு… 2 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!

சென்னையில் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றவரிடம் இரண்டு வாலிபர்கள் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகாவைச் சேர்ந்த 23 வயதான மனோகரன் என்பவர் .      சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மனோகரனை பீர் பாட்டிலால் குத்தி விடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் மனோகரன் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூபாய் 700 பணத்தை வழிப்பறி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சவாரிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஆட்டோ ஓட்டுனரிடம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறைக்கு அருகே உள்ள செல்லாம்கோணம் பகுதியில் தனிஸ்லாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவர் வழக்கம் போல் சவாரிக்கு சென்றுள்ளார். இவர் நட்டாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் ஆட்டோவை  மறித்து தனுஸ்லாசை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 7,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதுகுறித்து தனிஸ்லாஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பழிவாங்கும் எண்ணத்தோடு வழிப்பறி” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் இருக்கும் செருப்பாலூரில் நாராயண பிள்ளை என்ற முதியவர் வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்கள் முதியவரை மிரட்டி அவரிடமிருந்த 550 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து முதியவர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் வலை வீசித் தேடி வந்தனர். அந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆணையிட்ட கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை மருவத்தூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் சதாசிவம் மற்றும் இவரது மகன்கள் தர்மராஜ், பழனிச்சாமி என்பதும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தருண் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு இவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் 4 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

” நாங்கள் போலீஸ் ” மோட்டார் சைக்கிள் அபேஸ்…. போலீஸ் அதிரடி…!!

போலீஸ் போல் வேடமணிந்து வழிப்பறி செய்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது  2 பேர்  அவரை மறித்துள்ளனர்.  அவர்கள் தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்பின் சங்கரிடம் மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை காட்டுமாறு கூறியுள்ளனர். அந்த ஆவணங்கள் சரியில்லை எனக்கூறி சங்கரின் மோட்டார்  சைக்கிள் மற்றும் 2150 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துள்ளனர். இதுகுறித்து சங்கர் எஸ்.எஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரி ஓட்டுனருக்கு நடந்த கொடூரம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

லாரி ஓட்டுநரை தாக்கி கைபேசியை பறித்த குற்றத்திற்காக  3  வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கும்மிடிபூண்டியில் இருந்து லாரி ஒன்று இரும்பு கம்பியை ஏற்றிக்கொண்டு மதகடிப்பட்டுக்கு  சென்றுள்ளது. அந்த லாரியை கார்த்தி என்பவர் ஓட்டியுள்ளார். இவர் மதகடிப்பட்டில் இரும்புகம்பிகளை இறக்கிவிட்டு கும்மிடிப்பூண்டிக்கு திரும்ப வந்துள்ளார். இந்நிலையில்  விழுப்புரம் அருகே உள்ள ஒரு சோதனைச் சாவடியின் அருகே லாரியை நிறுத்திவிட்டு கார்த்தி  போன் பேசியுள்ளார். அப்போது அவ்வழியே அந்த மோட்டார் சைக்கிள் லாரியின் அருகில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டீக்கடை வைப்பதற்கு…. என்ஜினீயர்கள் செய்த காரியம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

டீக்கடை வைப்பதற்காக பெண்களிடம் வழிப்பறி செய்து 14 பவுன் நகையை கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெப்படை, திருச்செங்கோடு, பள்ளிபாளையம் போன்ற பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மர்மநபர்கள் நகையை பறித்து செல்வதாக அடிக்கடி எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சுரோஜ்குமார் தாகூர் தனிப்படை அமைத்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் திருச்செங்கோடு டி.எஸ்.பி. பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க!…. ‘கூகுள் பே’ மூலம் வழிப்பறி?…. தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் பிரின்ஸ் என்பவர் தனது மூன்றாவது ஆண்டு கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் பிரின்ஸ் சென்னையில் உள்ள கல்லூரிக்கு கடலூரில் இருந்து காரில் சென்றுள்ளார். இதையடுத்து கார் அனுமந்தை சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது அவரது காரை ஐந்து நபர்கள் வழிமறித்து லிஃப்ட் கேட்டிருக்கின்றனர். அதன் பிறகு பிரின்ஸ் அதில் 3 பேருக்கு மட்டும் காரில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்கள்தான் இப்படி செய்தீங்களா…? வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் வழிப்பறி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏத்தாப்பூர் அரசு டாஸ்மாக் கடையில் மோகன் என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 4-ம் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மோகனை  வழிமறித்த ஒரு கும்பல் அவரிடம் இருந்த 6 லட்சத்து 11 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல்…. 2 பேரின் துணிச்சலான செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழ சித்தர்காடு பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் மாரியம்மன் கோவில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பிரபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி திடீரென அவரது செல்போன் மற்றும் 300 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல்…. வசமாக சிக்கிய 7 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து கிளை சிறையில் அடைத்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான், நன்னிலம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களை மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இதுகுறித்து வலங்கைமான், அரித்துவாரமங்கலம், குடவாசல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்ட பெண்… ஆட்டோ டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… 5 பேர் கைது…!!

ஆட்டோ டிரைவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற பெண் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சேமூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சொந்த வேலைக்காக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தெற்கு பாளையம் வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் மகேந்திரனிடம் லிப்ட் கேட்டுள்ளார். இதனைப் பார்த்த மகேந்திரன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது அப்பகுதியில் மறைந்திருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்த அட்ரஸ் எங்க இருக்கு….? உரிமையாளருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன உரிமையாளரை தாக்கி 3 பேர் பணம் மற்றும் மடிக்கணினியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள இரஞ்சிதபுரம் பகுதியில் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கணினியில் சர்வீஸ் மையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிராங்கிளின் முதலியார் சரித்திரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 3 பேர் சுப்பிரமணியபுரம் செல்வதற்கான வழியை கூறுமாறு பிராங்கிளினிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திடீரென பிராங்கிளினை தாக்கி அவரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நைசாக பேச்சு கொடுத்த மர்மநபர்… மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

நைசாக பேச்சு கொடுத்து மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் களத்தாவூர் பகுதியில் அழகம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் அரண்மனை பகுதிக்கு சென்று காய்கறி மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்ல பேருந்திற்காக காத்துகொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் நைசான பேச்சு கொடுத்துள்ளார். அப்போது மூதாட்டியிடம், நீங்கள் அணிந்துள்ள சங்கிலி நன்றாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த பெண்… மர்மநபர் செய்த செயல்… போலீஸ் வலைவீச்சு…!!

நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை வழிமறித்து தங்கதாலி மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள பெரியபட்டினம் புதுக்குடியிருப்பு பகுதியில் செல்வம் என்பவர் அவரது மனைவி பாண்டியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியம்மாள் மருத்துவ செலவிற்காக ராமநாதபுரத்தில் உள்ள அவரது சகோதரரிடம் 10,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை வாங்கிகொண்டு பாண்டியம்மாள் அரசு பேருந்தில் ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டினத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கத்தியை காட்டி மிரட்டல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த  வாலிபர்களை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகாசியிலிருந்து நாரணாபுரம் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாரீஸ்வரன் மற்றும் சபரீஸ்வரன் வேல்முருகனை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 200 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து வேல்முருகன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

“சரக்கு, சைடிஷ் வாங்கணும்… ஒரு 500 ரூபா குடு”… மறுத்த கணவன்… வழிப்பறி கும்பலால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…!!!

500 ரூபாய் பணம் தராத காரணத்தினால் வழிப்பறி கும்பல் கணவனை அடித்துப்போட்டு மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்திலுள்ள பாகல்பூரில் கடந்த சனிக்கிழமை இரவு இருபத்தி ஐந்து வயதுடைய பெண்ணும், அவருடைய கணவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அந்த பெண்ணின் கணவரிடம் மது மற்றும் உணவு வாங்குவதற்கு 500 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் தரமுடியாது என […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டுறாங்க…. சிக்கி கொண்ட 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்து பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் அருந்ததியர் காலனியில் பொன்தங்கமாரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இந்நிலையில் பொன்தங்கமாரி புதுப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொன்தங்கமாரியை 3 வாலிபர்கள் வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்ததோடு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்… அச்சத்தில் இருக்கும் பெண்கள்… பொதுமக்கள் கோரிக்கை…!!

வழிப்பறி திருட்டு போன்றவற்றை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வழிப்பறி நடப்பதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பரமக்குடி பகுதியில் உள்ள காளிதாஸ் தெருவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் 2 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது அப்பகுதியில் உள்ள சிசிடிவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உதவி செய்வது போல் நடித்த இளைஞர்கள்… முதியவருக்கு ஏற்பட்ட கதி… தேடுதல் வேட்டையில் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி செய்வது போல் நடித்து முதியவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அடுத்துள்ள பிரப்பன்வலசை களஞ்சியம் நகரில் முத்துகூறி(67) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் சென்ற இவர் மீண்டும் பிரப்பன்வலசை வருவதற்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் காத்துகொண்டிருந்துள்ளர். அப்போது அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள் முத்துகூரியிடம் வந்து பேசியுள்ளார். இதனையடுத்து முதியவரை பிரப்பன்வலசையில் கொண்டிபோய் விடுவதாக கூறி உதவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்… கத்தியை காட்டிய இளைஞன்… அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர்…!!

ராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள தினைக்குளம் பகுதியி முத்துக்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சவாரிக்காக திருப்புல்லாணி பகுதிக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் முத்துக்குமாரை வழிமறித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி முத்துகுமாரிடம் இருந்த 500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து முத்துக்குமார் உச்சிப்புளி காவல்நிலையத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளிய போகும்போது உஷாரா இருக்கனும்… ஓரமாக நின்ற இளைஞர்கள்… சிறையில் அடைத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்துள்ள காளிபட்டி பாலக்காடு பகுதியில் மூர்த்தி(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேரு முன்தினம் இருசக்கர வாகனம் மூலம் அக்கரைப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் சென்றபோது மர்மநபர்கள் 3 பேர் மூர்த்தியை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து அவரை தாக்கி மூர்த்தியிடம் இருந்து 5,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த தாக்குதலில் காயமடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி…. வாலிபர்களின் கொடூர செயல்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவில் பூசாரியை தாக்கி வாலிபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சின்னமுட்டம் பகுதியில் ஒரு கோவில் இருக்கின்றது. அந்த கோவிலில் கோழிப்போர் விளையை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இவர் தினசரி காலையில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கின்றது .அதன்படி அதிகாலை 4 மணிக்கு கோவிலுக்கு சென்று விட்டு பின் பூஜை பொருட்கள் எடுத்து வருவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பூஜை பொருட்களை எடுத்து விட்டு மீண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோலம் போட்ட பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.எம்.டி. நகரில் திவ்யா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கும்போது மோட்டார்சைக்கிளில் முககவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது திவ்யா நகைகளை தனது கைகளால் இருக்கமாக பிடித்தும் சங்கிலி அறுந்து மர்ம நபர்களிடம் 2 3/4 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கத்தியை காட்டி மிரட்டல்…. வசமா சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

செல்போன் பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்குப்பத்தான் பட்டியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜானகிராமன் என்ற மகன் இருக்கின்றார். இவர் பெருமாங்குப்பம் கூட்டு ரோடு சாலையில் கடந்த 7-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து ஜானகிராமன் கொடுத்த புகாரின் படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் கவரத்தெருவில் திவாகர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 13- ஆம் தேதி எசையனூர் கிராமத்திற்கு நண்பரைப் பார்ப்பதற்காக பாலாறு வழியாக சென்றுள்ளார். அப்போது பாலாற்றில் இருந்த வாலிபர் ஒருவர் திவாகரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து திவாகர் கொடுத்த புகாரின்படி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வழிபறியில் ஈடுபட்ட 2 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

வழிப்பறியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு டவுன் குல்ஜார் 2-வது வீதியில் யூனூஸ் நபில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பங்களாமேடு பகுதியில் கையுறைகள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகின்றார். இந்நிலையில் யூனுஸ் நபில் தனது குடோனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளிசேரி கிராமத்தில் வசித்து வரும் குடியாத்தம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் வேதாச்சலம் என்பவர், தனது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இவங்க தொல்லை தாங்கல… போலீசாருக்கு கிடைத்த புகார்… 2 பேர் கைது…!!

ராமநாதபுரத்தில் வெளியேறியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் அடிக்கடி வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இலந்தைகுளம் சாலையில் 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் சாயல்குடி அடுத்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இந்த வயசிலேயே இப்படியா… சிறுவர்கள் செய்த வேலை… காவல்துறையினரின் அதிரடி நவடிக்கை…!!

தனியார் நிறுவனத்தின் ஊழியரிடம் வழிப்பறி செய்துவிட்டு தப்பி சென்ற 5 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பாலாஜி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு 2 மணி அளவில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி விலை மதிப்பில்லா செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து பாலாஜி பெரிய காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்த வழியாக போயி இவங்ககிட்ட சிக்கிவிட்டாரே…. லாரி டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் மர்ம நபர்கள் லாரி டிரைவரை வழிமறித்து அவரிடமிருந்த பணத்தை பிடுங்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் லாரி டிரைவரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று லாரியில் சரக்கை ஏற்றிக்கொண்டு கோவையிலிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் நாங்குநேரி சுங்கச்சாவடியின் வழியாக செல்லாமல் அதன் அருகிலிருந்த மலைப்பாதை வழியாக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து லாரியை வழிமறித்துள்ளனர். அதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையோரம் சென்றவரிடம் வழிப்பறி… சிவகங்கையில் பரபரப்பு புகார்… 2 பேர் கைது..!!

சிவகங்கை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதி அருகே உள்ள டி.வேலாங்குளம் கிராமத்தில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் படமாத்தூர் செல்லும் சாலைக்கு திருப்பாச்சேத்தியிலிருந்து சென்றுள்ளார். அப்போது கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், வல்லரசு ஆகியோர் நான்கு வழி சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து அங்கு வந்த குருநாதன் வழிமறித்து உள்ளனர். மேலும் அவருடைய சட்டை பாக்கெட்டில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நகையை கொடுத்துடுறேன் விட்டுரு” கெஞ்சிய பெண்ணை…. கொடூரமாக தாக்கி வழிப்பறி…!!

மாடு மேய்த்த பெண் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் கொடூரமாக தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன் – பேச்சியம்மாள். இவர்  மாடுகள் வளர்த்து வந்துள்ளார். இவர் எப்போதும் அந்த பகுதியில் உள்ள தோப்புகளில் மாடுகளை மேய்ப்பது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல நேற்று மாலை பேச்சியம்மாள் மாடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது மைக்கேல் என்பவர் அங்கு வந்து பேச்சியம்மாளை கடுமையாக தாக்கி அவருடைய கமல் மற்றும் கழுத்தில் […]

Categories
உலக செய்திகள்

“பணத்தை கொடு இல்ல உன்ன கொன்னுருவேன்”… சந்தைக்கு வருபவர்களிடம் வழிப்பறி… அச்சத்தில் பொதுமக்கள் ….!!

சுவிட்சர்லாந்தில் சந்தைக்கு வரும் மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் St.Gallen என்ற மண்டலத்தில் மர்ம நபர் ஒருவர் சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களை துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து புதன்கிழமை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதில், மர்ம நபர் ஒருவர் சந்தை பகுதியில் நின்று கொண்டு அங்கு வரும் மக்களிடம் பணம் கேட்பதாகவும் பணத்தை கொடுக்க மறுப்பவர்களிடம் கத்தியை காட்டி  கொன்றுவிடுவேன் என்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிகரெட் வாங்க பணமில்லை…! வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள்… போலீசில் பரபரப்பு வாக்குமூலம் ….!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். மேளக்கால் பகுதியில் உள்ள பேக்கரி கடையின் முன் கடந்த 27ஆம் தேதி ஆட்டோவில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நான்கு இளைஞர்கள் செல்போனை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து அந்த பெண் காடுபட்டி  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது பேக்கரி கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன்னை குத்திடுவேன்…! கத்தியை காட்டி கொள்ளை…. சென்னையில் நடந்த அதிர்ச்சி…!!

சென்னையில் இரவு நேரத்தில் கத்தியை காட்டி வழிப்பறி செய்து வந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் உள்ள தி. நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அனகாபுத்தூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவு வழக்கம்போல் வெங்கடேசன் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி வெங்கடேசனிடமிருந்தது  செல்போன் மற்றும்  அவருடைய இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கத்தியை காட்டி மிரட்டல்… பணம் பறித்து கொலை மிரட்டல்… இருவர் கைது..!!!

கத்தியை காட்டி பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் வசிப்பவர் சீனி. இவர் தனது நண்பருடன் நேற்று அருப்புக்கோட்டை ரோட்டில் மனை நிலம் பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்பொழுது அல்லம்பட்டி அனுமன் நகரைச் சேர்ந்த அருள்ராஜ் என்ற தாதா, எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆறுமுக பாண்டி ஆகிய 2 பேரும் சீனியை வழிமறித்தனர். பின்னர்  கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 200 பறித்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர் வழிப்பறி… குவிந்த புகார்கள்…. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை…. சிக்கிய மூவர்…!!

கமுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வேப்பங்குளம், கரிசல்புளிகே, கொம்பூதி ஆகிய பகுதிகளில் செல்லும் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களை வழிமறித்து பணம் செல்போன் உள்ளிட்ட பொருட்களை சிலர் பறித்து செல்வதாக கோவிலாங்குளம் காவல்துறையினருக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன. இதனால் அப்பகுதியில் கோவிலாங்குளம் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக அந்த பகுதியில் சுற்றித் திரிந்த மூவரைப் பிடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரிடம் வழிப்பறி… போலீஸ் தீவிர விசாரணை..!!

சைக்கிளில் சென்று கொண்டிருந்த நடிகர் கௌதம் கார்த்திகிடம் செல்போனை பறித்து சென்ற திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், போயஸ் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் கடல், இருட்டுஅறையில்முரட்டுகுத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கௌதம் கார்த்திக் தற்போது செல்லப்பிள்ளை, நவரசம் உள்ளிட்ட புதிய படங்களில் நடித்து வருகிறார். தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கௌதம் கார்த்திக் அதிகாலை மெரினா கடற்கரை வழியாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஓடும் கண்டெய்னர் லாரியில்… 2.5 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை… போலீசார் விசாரணை..!!

சென்னையில் இருந்து தெலுங்கானாவிற்கு  சென்ற கண்டெய்னர்  லாரியில் இருந்து  2.5 கோடி மதிப்புடைய செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் வைத்து   சென்னையில் இருந்து கண்டெய்னரில்  கொண்டுவரப்பட்ட   செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது  . இதேபோல் கடந்த 20 நாட்களுக்குள்  2 சம்பவம் நடைபெற்றது. அதாவது முன்னதாக சென்னையில் இருந்து வேறு பகுதிக்கு சென்ற  கண்டெய்னர்  ஓட்டுனரை தாக்கி விபத்து ஏற்படுத்தி 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள்  கடதத்ப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கு […]

Categories

Tech |