இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க விபத்துக்கள் நடக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விபத்துக்கள் நடப்பதற்கு முக்கிய காரணம் சாலை விதிமுறைகள் தான். அதனால் நாட்டில் சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை குறைக்கும் விதமாக அபராதத்தை அதிகரிக்கலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஹெல்மெட் அணியாமல் […]
Tag: வாகன ஓட்டிகள்
தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே தலைக்கவசம் அணிந்து செல்வதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் கிராமங்கள் மற்றும் அதனையொட்டி உள்ள சிறு நகரப் பகுதிகளில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் […]
சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க முக்கியமான 11 இடங்களில் 15 தானியங்கி நம்பர் பிளேர் ரீடர் பொருத்தப்பட்டு இருப்பதாக சென்னை போலீஸ் தெரிவித்துள்ளது. இதனால் ஹெல்மெட் போடாமல், சாலை விதிமுறைகளை மீறி சென்றால் அந்த கேமராவில் நம்பர் பிளேட் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் சாலை விபத்துகளை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது இந்த நடவடிக்கை […]
மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், மிக அவசியமான காரணங்களுக்கு மட்டும் வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று டிராபிக் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அதனுடைய தாக்கம் சென்னையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தீவிர புயலான மாண்டஸ் வரும் 3 மணி […]
தமிழகத்தில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் பிறகு அபராதம் செலுத்தாமல் இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏழாம் இடப்படும் என சென்னை காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய போக்குவரத்து சட்டத்தின்படி மது போதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும்.அதில் மது போதையில் வாகனம் ஓட்டுவதற்கு அவருடன் பயணிக்கும் நபர் உடந்தையாகவும் ஊக்கமளிக்கும் விதமாகவும் செயல்பட்டால் அவர் மீதும் வழக்கு பதிவு […]
கிரீமிய தீபகற்பத்தில் ரஷ்யாவால் கட்டப்பட்ட தரைபாலமானது கடந்த சனிக்கிழமை அன்று குண்டு வைக்கப்பட்டதில் தரைமட்டமாக்கப்பட்டது. இதனால் ரஷ்யா கிரீமியா இடையேயான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வாகன ஓட்டிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் நடுவழியில் சிக்கித் தவிப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவோருக்கும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவார் மற்றும் பயணிப்பொறுக்கும் முதன்முறையாக ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டுமல்லாமல் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் வாகனம் ஓட்டும்போது சிறுவர்களின் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு வருடம் வரை ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு இது […]
பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் விதிமீறும் வாகன உரிமையாளர்கள் மீது மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக 80 இடங்களில் 7,000 வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இடங்கள் கண்டறியப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வாகன நிறுத்தம் இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு […]
பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வாங்குவதை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பக்கம் மக்களின் கவனம் திரும்பிய நிலையில், அவ்வப்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி தீ பிடித்து எரியும் சம்பவங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் சற்று தொய்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இயங்கி வரும் EV பிராண்டான கோமாகி இந்த பிரச்சனைக்கு இப்போது தீர்வை கொண்டு வந்துள்ளது. எலெக்ட்ரிக் டூவீலர்கள் தீப்பிடித்து எரிவதைத் தவிர்ப்பதற்கான தீர்வு கோமாகி நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய […]
ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அரசு கொண்டுவந்துள்ள விதிமுறை பலரும் அறிந்த ஒன்றுதான் .ஆனால் அதனை முறைப்படி அணிய தவறினால் அபராதம் உள்ளது என்பதை பலருக்கும் தெரியாத ஒன்று. அதாவது ஹெல்மெட்டில் உள்ள ஸ்ட்ராப்பை முறையாக அணிந்திருக்க வேண்டும். ஒருவேளை அதனை சரியாக போடாவிட்டால் அந்த பயனை ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் அணிவது சட்டப்படி குற்றம். கண்களை மறைக்கும் வகையில் கண்ணாடி இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பி […]
NO ENTRY இல் வாகனம் ஓட்டினால் 1100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சிறப்பு தணிக்கை மூலம் 1300 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்படி தவறான பதிவு எண்கள் வைத்திருப்பது, நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் இருப்பது, லைசென்ஸ் வைத்திராமல் இருப்பது போன்ற போக்குவரத்து விதி மீறல் செயல்களுக்கு அபராதங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது நோ என்ட்ரியில் […]
இன்றைய உலகில் இப்போது போக்குவரத்து சேவை என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவையாக மாறி விட்டது. அதன்படி மக்கள் அனைவரும் தங்களது வேலைகளை எளிதாக முடிப்பதற்கு போக்குவரத்து மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமின்றி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் அதிகமாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்ற சில வருடங்களாக மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதனால் நெரிசல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் அரசு ஒருசில […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி வரை 74 கி.மீ தூரமுள்ள, தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 4 வழிச் சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம் நிா்வகித்து வரும் விக்கிரவாண்டி டோல்கேட்டில் வருகிற 1ம் தேதி முதல் வாகனங்களுக்கு புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி உயர்த்தப்பட உள்ள கட்டண விவரம்- கார், வேன், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றுக்கு ஒரு வழி கட்டணமாக ஒருமுறை […]
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆரம்பித்தது. அந்த வகையில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்று பெற்றது. மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த திட்டம் வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போக்குவரத்து துறை நஷ்டத்தை சந்தித்தது. இந்த இழப்பை ஈடு செய்யும் விதமாக […]
சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பலமுறை இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றன. அவ்வபோது காவல்துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சேலம் மாநகர […]
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நாளை நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர், முதலமைச்சர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பாக விரிவான சாலை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புளியந்தோப்பு டிமல்ஸ் சாலை, ஜெர்மயா சாலை, ஈ.கே.வே சம்பத் சாலை, ஆகியவற்றிலிருந்து ராஜா முத்தையா சாலை […]
இந்தியாவில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கத்திலும் சாலை போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான அறிவிப்புகளை அவ்வபோது அத்துறையின் அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பார்க்கின் தொடர்பான அறிவிப்பு ஒன்றை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி சாலையோரங்களில் தேவையில்லாமல் வாகனங்களை பார்க்கிங் செய்து வைத்தால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறிய அவர்,விரைவில் இதற்கான சட்டம் ஒன்று இயற்றப்பட்ட விதிமுறைகள் அதற்கு வகுக்கப்படும் […]
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் தலைமையில், ஆய்வாளர்கள் பாஸ்கர், கதிர்வேலு போன்றோர் கோவை மெயின்ரோடு, கருக்கன்காட்டூர் அருகில் அதி வேகமாக போகும் வாகனங்களை கண்டறியும் நவீன கருவியுடன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோவை மற்றும் திருப்பூர் நோக்கி நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் அதி வேகத்தில் சென்ற 40 வாகனங்களை கண்டறிந்து, அதன் வாகன ஓட்டிகளிடமிருந்து மொத்தம் ரூபாய் 16 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.
தலைநகர் டெல்லியில் 13 லட்சம் இருசக்கர வாகனங்கள், 3 லட்சம் கார்கள், 17 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு உரிய மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெறாமல் இயங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் போக்குவரத்து துறை எச்சரிப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் குறிப்பிட்டகாலக்கெடுவுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் காலாவதியான வாகன உரிமையாளர்கள் மாசு குறித்த சோதனைகளை மீண்டும் மேற்கொண்டு சான்றிதழ் வாங்க வேண்டும் . அப்படி பெறாமல் இருக்கும் வாகன […]
சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடைபெறும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இன்று முதல் பத்து நாட்களுக்கு போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் அண்ணா ஆர்ச் பகுதி, ஈவேரா பெரியார் சாலை பகுதிகளில் வரும் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கோயம்பேடு முதல் […]
புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. 2019 திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் விதிகளை மீறுவோருக்கு அபராதம் தொகை பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டது. அதில் ஹெல்மெட் அணியாதவர்கள் ரூபாய் 1000, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 10,000, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் 5000 அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு அமல் படுத்தப் படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் பெருநகர மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது .அதன்படி வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்து வது மற்றும் கட்டணம் செலுத்தாமல் செல்வோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 80 வாகன நிறுத்த இடங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மாநகராட்சியின் இணைய இணைப்பின் மூலமாக வாகன […]
சென்னையில் அதிக மழையின் காரணமாக வாகனங்கள் செல்ல கூடிய வழக்கமான பாதைகள் சேதமடைவதாலும், பராமரிப்பு பணிகள், மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட முக்கிய காரணங்களால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அந்த வகையில் கடந்த மாதம் முக்கிய பிரதான சாலையில் போக்குவரத்தை சீர் செய்யும் விதமாக முதல் கட்டமாக தற்காலிக சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் கடந்த மே மாதம் 22ஆம் தேதி செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாக தற்போது போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளது. அதனால் இனி தாசபிரகாஷ் சந்திப்பை […]
தமிழகத்தில் வாகன ஸ்டான்ட்களில் வெளி ஊருக்கு செல்பவர்கள் மற்றும் பணிக்குச் செல்பவர்கள் அனைவரும் தங்களது வண்டி வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். அங்கு நிறுத்துவதற்கு குறைந்த கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் வெளியூரில் பணிபுரிபவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல படை எடுத்தனர். அதனால் வாகன ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் ஸ்டாண்டுகளில் […]
கிணத்துக்கடவுக்குள் செல்லும் சர்வீஸ் சாலையில் வழிகாட்டி பலகை வைக்காததால் 3 கிலோமீட்டர் சுற்றி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கோவை டு பொள்ளாச்சி ரோடு நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டது. இதில் நிறைய வண்டிகள் சென்று வருகிறது. இது பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு வரும் பாதையில் தாமரைக்குளம், கோவில்பாளையம், கோதவாடி பிரிவு சொலவம்பாளையம் பிரிவு உள்ளிட்ட ஊர்கள் இருக்கின்றன. இந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக நான்கு வழி சாலையிலிருந்து சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. இதனால் கோவை பொள்ளாச்சியிலிருந்து வரும் பேருந்துகள் […]
மே 31 ஆம் தேதி இன்று ஒருநாள் மட்டும் பெட்ரோல் டீசல் கொள்முதலை நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மற்றும் இந்த ஆண்டு மே 21ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சம் முதல் 10 லட்சம் வரை நடப்பு மூலதனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதனால் மே 31 ஆம் தேதி ஒருநாள் மட்டும் பெட்ரோல் டீசல் […]
சென்னை சிக்னலில் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவல்துறையின் சார்பில் மெல்லிசை ஒலிபரப்பப்படுகிறது. டெல்லிக்கு அடுத்ததாக சென்னையில் அதிக அளவு வாகனங்கள் உள்ளது. இன்றைய நிலவரப்படி சுமார் 60 லட்சம் வாகனங்கள் சென்னையில் உள்ளன. இதில் 85 சதவீதம் இருசக்கர வாகனங்கள். கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் வாகனங்களின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் 10 சதவீதம் வரை வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் தினமும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த […]
பிரதமர் மோடியின் வருகையால் சென்னையில் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி பல்வேறு திட்டங்கள் நாட்டுக்கு என்று சென்னைக்கு வருகை தர உள்ளார். அதற்கான விழா பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அர்ப்பணிக்க மற்றும் ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக இன்று பிரதமரின் வருகையை ஒட்டி விழா நடைபெறும் அதனை சுற்றி […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது. அதனால் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. அதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது. அதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயரத் தொடங்கியுள்ளது. அதாவது சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102.74 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]
இன்று முதல் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கடந்த ஐந்து மாதங்களில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 98 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு சாலை ஆக்கிரமிப்பு முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு பகுதியிலும் கட்டண பார்க்கிங் […]
நாளை முதல் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கடந்த ஐந்து மாதங்களில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 98 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு சாலை ஆக்கிரமிப்பு முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு பகுதியிலும் கட்டண பார்க்கிங் […]
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து சாலை விபத்துக்கள் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கு காரணம் வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது போன்ற பிரச்சனைகளால் சாலையில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இதனால் இவற்றை தடுக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து துறை தொடர்ந்து கடுமையான சட்டங்களையும் அபராதத்தையும் விதித்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட்டை சரியாக அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் […]
தமிழகத்தில் அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு வாகனம் அல்லாத மற்ற வாகனங்களில் தற்போது தமிழகம் முழுவதும் பதிவு எண் பலகை யில் இந்த எழுத்துக்கள் எழுதப்பட்டு அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 12 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 12 நாட்களில் பத்தாவது முறையாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை இன்று ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.108.21- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு […]
தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, குறிப்பிட்ட வேகத்தில் செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் விபத்துக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்ககூடாது எனவும் மீறி ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]
தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொது இடங்களில் வாகன நெரிசலை தடுப்பதற்கு போக்குவரத்துதுறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் பல்வேறு சாலையில் வாகனங்களில் வருபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம், பதிவு செய்யப்பட்ட உரிய வாகன பலகை வைத்திருக்க வேண்டும், அரசு அறிவித்துள்ள பகுதியில் குறிப்பிட்ட வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் ஆகிய விதிகள் இருக்கிறது. இந்நிலையில் விதிகளை மீறி நம்பர் பிளேட் அமைத்திருந்த வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே […]
பிரித்தானியாவிலிருந்து ஜெர்மனி முதலான நாடுகளுக்கு வாகனங்களை கொண்டுவர கூடுதல் உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 இல் பிரக்சிட் முறை கொண்டுவரப்பட்டது இதனை தொடர்ந்து பிரித்தானியர்கள் தங்கள் வாகன உரிமங்களை ஜெர்மானிய உரிமங்களாக மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். தற்போது மேலும் சில வழிமுறைகளை ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2022 ல் இருந்து பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வேன் மற்றும் லாரி போன்ற பெரிய வாகனங்கள் கொண்டுவரும் ஓட்டுநர்கள் சரக்கு வாகனங்களுக்கான உரிமை பெற்றிருக்க வேண்டும் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வாகனங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் சிஎன்ஜி கேஸ் விலை திடீரென்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிஎன்ஜி கேஸ்-ன் விலை கிலோவுக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான மகாநகர் கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வால் 8,00,000பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் 3,00,000 பேர் கார் கார் ஓட்டிகள், பொது போக்குவரத்து வாகனங்கள், ஆட்டோ, டாக்சி, பேருந்துகள் என பல்வேறு வாகனங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் மும்பையில் இப்போது 1 கிலோ சிஎன்ஜி கேஸ் […]
இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாற தொடங்கி உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் ஓலா நிறுவனம் சார்பாக S1, S1 pro ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு முன்பே நடைபெற்றது. இதில் […]
நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. அதை தடுக்க பல்வேறு விதிகளை அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான வரைவு விதிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 129, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி மோட்டார் வாகனங்கள் சட்டம் திருத்தப்பட்டது. […]
கோவை மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதால் பெரும்பாலான விபத்துகளும் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு அபராதம் உள்ளிட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்கள் இடம் இனி யுபிஐ மூலம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அதனை மேலும் […]
நாட்டில் கொரோனாவில் காரணமாக வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் வரும் 31 ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்க படாது என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட சான்றிதழ்களை புதுபிக்க ஏழு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வருகிற 31-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், வாகன ஆவணங்களை புதுப்பிக்க வருகின்ற […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை 102 […]
தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தலைக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பதால் சாலை விபத்துகளில் பலர் உயிரிழக்கின்றனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாதவர்களிடம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டு அங்கேயே வசூலிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதனை மதிக்காமல் 75% வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்கின்றனர். இந்நிலையில் […]
ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், வாகன தர சான்றிதழ் மற்றும் வாகனங்களுக்கான அனுமதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துக்குமான செல்லுபடி காலம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பிப்ரவரி 1ஆம் தேதிக்கு பிறகு காலாவதியான மேற்கூறிய சான்றிதழ்கள் அனைத்தும் அக்டோபர் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் டிரைவிங் லைசன்ஸ் தானாகவே ரத்தாகி விடும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் எப்போதும் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதே இதற்கு காரணம் என போக்குவரத்து போலீசார் கூறுகின்றனர். அதனால் வேலூர் போக்குவரத்து போலீசார் இன்று முதல் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். அதன்படி நோ பார்க்கிங்கில் 3 முறை வாகனத்தை நிறுத்தி சிக்கினால், 4வது […]
தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிறுத்தை சுற்றி திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இவற்றில் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வனப்பகுதியின் வழியாக செல்லும் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து செல்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிறுத்தை ஒன்று நடமாடியதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் […]
இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது என்று நுகர்வோரை எச்சரிக்கை வேண்டும் என்று தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம் குமார் ஆதித்தன் பொது நல ஒன்றை வழக்கை தாக்கல் செய்தார். அதில் பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்க இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. ஆனால், இந்த கண்ணாடிகள் அகற்றப்படுவதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. எனவே கண்ணாடி இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலை இழந்து தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ராஜஸ்தானி ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.106.08-க்கும் விற்பனையாகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தில் ரூ.101.25, டெல்லியில் ரூ.95.03, சென்னையில் […]
நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் நிறுவனங்கள் பாஸ்டேக் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆன்லைன் நிறுவனங்களிடம் பாஸ்டேக் அட்டைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும் முறைகேடுகள் தொடர்பான விவரங்களை 1033 என்ற அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், http://[email protected]/ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.