நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் ஷேக் மைதீன் என்பவர் வசித்து வந்தார். இவரும், இவருடைய நண்பர் முகமது ரியாஸ் என்பவரும் சேர்ந்து நேற்றிரவு பழையபேட்டை இணைப்பு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர். இதில் ஷேக் மைதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காயமடைந்த முகமது ரியாசை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tag: வாகன விபத்து
இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட ஒரு நபர் வளைவு ஒன்றில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிவந்து விபத்தில் சிக்கியதோடு, நொடியில் தீப்பற்றியும் எரிந்துள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் வாகனங்கள் அளவுக்கு அதிகமாக பெருகி இருக்கிறது. அதிவேகமாக வாகனத்தை ஓட்டாமல் கவனமாக செல்லவேண்டும் என எத்தனை விழிப்புணர்வு கொடுத்து வந்தாலும் அதையெல்லாம் மக்கள் அவ்வளவாக காதில் வாங்கிக்கொள்வதில்லை. அதிலும் குறிப்பாக வாகன ஓட்டிகள் வளைவுகளில் வளையும்போது வேகமாக செல்லக்கூடாது என கூறினாலும் பலர் அதனை கண்டு கொள்ளாமல் வேகமாகவே செல்கின்றனர். இந்நிலையில் […]
பிரித்தானியா நாட்டின் ராம்ஸ்கேட்(Ramsgate) பகுதியில் வேகமாக வாகனம் ஓட்டி வந்த நபர் ஏற்படுத்திய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பாதசாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது, கடந்த புதன்கிழமை ராம்ஸ்கேட் பகுதியின் லியோ போல்ட் தெருவிலுள்ள பல மாடி கார் பார்க்கிங்கிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது கார் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த கோர விபத்தில் 30 வயதுடைய பெண் மற்றும் 80 வயதுடைய ஆண் என இருவர் […]
அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல நடிகை சென்ற வாகனம் குடியிருப்பின் மீது மோதி தீ விபத்து ஏற்பட்டதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆனி ஹெச் என்ற நடிகை கடந்த 1997-1998 காலகட்டங்களில் புகழின் உச்சியில் இருந்தவர். இந்நிலையில் நேற்று அவர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு குடியிருப்பின் மீது மோதினார். உடனே, வாகனம் தீ பற்றி எரிந்தது. அதனைத்தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்திற்கு […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் அழகுநாதன்(42). தி.மு.க. பிரமுகரான இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சேந்தமங்கலத்திலிருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே உளுந்தூர்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் சேர்ந்தநாடு குறுக்கு சாலை பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லாரி அழகுநாதன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.. 26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு சென்ற போது வாகனம் விபத்துக்குள்ளானது. 7 Indian Army soldiers lost […]
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பேரணி நடந்துகொண்டிருந்த சமயத்தில் கட்டுப்பாடின்றி வேகமாக வந்த வாகனம் மோதி ஒருவர் பலியானதோடு 23 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் என்னும் மாநிலத்தில் இருக்கும் வக்கிஷா என்னும் நகரில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கலை பேரணி நடத்தப்படும். அதன்படி, இந்த வருடத்தின் கலை விழா நேற்று உற்சாகமாக நடந்தது. இதில், குழந்தைகள், இளைஞர்கள் பலர், மகிழ்ச்சியோடு பாடல்கள் பாடிக்கொண்டு நடனமாடிச் சென்றார்கள். இதனை, நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்து ரசித்தார்கள். அந்த […]
இந்தியாவில் வாகன விபத்தில் பலியான கேரள அழகி மற்றும் அவரின் தோழி தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த அன்சி கபீர் என்ற 26 வயது இளம்பெண், கடந்த 2019 ஆம் வருடத்தில், மிஸ் கேரளா பட்டம் பெற்றார். அதே அழகிப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்த, அஞ்சனா சாஜன், அன்சி கபீருக்கு நெருங்கிய தோழியானர். அதன் பின்பு, இவர்கள் இருவரும் திருச்சூரை இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து வாகனத்தில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தபோது, […]
அமெரிக்காவில் ஒரு நபர் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கிச் சென்று வீட்டின் சுவரை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள நியூ மெக்ஸிகோ என்ற மாகாணத்தில் ஒரு நபர் செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது அதிவேகமாக சென்ற வாகனம் திடீரென்று அவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால், சாலையோரத்தில் இருந்த ஒரு வீட்டின் சுவரை இடித்து வாகனம் உள்ளே நுழைந்துவிட்டது. நல்லவேளையாக, அந்த வீட்டில் ஒருவரும் இல்லை. மேலும் அந்த வீட்டின் வெளிப்புறத்திலும், உள்ளேயும் […]
அர்ஜென்டினாவில் மகள் மற்றும் பேத்தி உயிரிழந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அறிந்து கொண்ட நபர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள Cordoba என்ற பகுதியில் விபத்து நடந்துள்ளது. இதில், Alma Mia Molina மற்றும் Agustina Reynoso ஆகிய இருவரும் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த Rolando Busto என்ற நபர், அது நம் பிள்ளைகளாக இருக்கக்கூடாது என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்துள்ளார். ஆனால், விபத்தில் பலியானது அவரது […]
பிரிட்டனில் குழந்தைகள் இருவரை விபத்தில் கொன்ற தாய், நீதிமன்றத்தில் ஆஜராகாததால் விமானநிலையங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Derby-என்ற பகுதியில் வசிக்கும் Mary McCann (35) என்ற பெண் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி அன்று வாகனத்தில் சென்ற போது, Milton Keynes அருகில் உள்ள சாலையில், Scania HGV லாரியின் மேல் வாகனம் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதில் அந்த லாரி […]
இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதியதில் போர்மேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள மல்லல் கிராமத்தில் அய்யாச்சாமி என்பவர் அவரது மனைவி வீரலட்சுமி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் பார்த்திபனூர் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல பணியை முடித்துவிட்டு அய்யாச்சாமி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து கீழபெருங்கரைநான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த தண்ணீர் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த வாகன விபத்தில்ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள இளஞ்செம்பூர் கிராமத்தில் செந்தூர்பாண்டியன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் செந்தூர்பாண்டியன் நேற்று வழக்கம்போல நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த ஜீப்பும் இருசக்கர வாகனமும் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சுரேஷ் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தான் ஊருக்கு வந்துள்ளார். இதனை அடுத்து சுரேஷ் சொக்கம்பட்டியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு சுரேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சிங்கிலிபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே ஆட்களை […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகன விபத்தில் பலியான இந்தியாவை சேர்ந்த மாணவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள Yas என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று வாகன விபத்தில் ஒரு இளைஞர் பலியானார். அவர் குறித்த எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அந்த இளைஞரின் பெயர் Ibad Ajmal என்று தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று இவர் தனியாக வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம், மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயங்களுடன் […]
ஜெர்மனியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஒரு அழகி அதிவேகமாக வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் Julia Jasmin Ruehle (33). இவர் நெடுஞ்சாலையில் நேற்று அதிவேகமாக வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் நெடுஞ்சாலையின் இடையில் இருந்த தடுப்பின் மேல் பயங்கரமாக மோதி, சாலையில் பலதடவை தலைகீழாக விழுந்தது. இந்த கொடூர விபத்தில் Julia பலத்த காயமடைந்தார். எனினும் வாகனத்தில் இருந்து […]
பெண் அழைப்பிற்காக சென்ற போது வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலியான நிலையில், 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கம்பட்டி பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும், பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இதற்காக மணமகன் வீட்டைச் சேர்ந்த 40 பேர் 2 சரக்கு வாகனத்தில் பெண் அழைப்பிற்காக புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆண்கள் மட்டும் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கருப்பம்பட்டி பகுதியில் இருக்கும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த […]
சுவிட்சர்லாந்தில் வயதான தம்பதியர் வாகனத்தில் சென்றபோது 50 மீட்டர் பள்ளத்தில் விழுந்து லேசான காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள Graubünden என்ற மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று Valtoris பகுதி வழியே, 87 வயதுடைய முதியவர், 84 வயதான தன் மனைவியுடன் மலைப்பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ஒரு ஊசி வளைவில் திரும்பும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையை தாண்டி சுமார் 50 மீட்டர் குழியில் விழுந்திருக்கிறது. இதில் அந்த முதியவரின் மனைவி லேசான காயங்களுடன் […]
பிரிட்டன் இளவரசி டயானா மறைவுக்கு பிறகு, இளவரசர் சார்லஸிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாக ஸ்காட்லாந்து யார்டின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார். மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவை கொலை செய்வதற்கு இளவரசர் சார்லஸ் திட்டம் தீட்டியதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அதன்பின்பு காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக ஸ்காட்லாந்து யார்டின் முன்னாள் தலைவரான, Lord Stevens கூறியிருக்கிறார். மேலும் இளவரசி டயானா, “வாகன விபத்தில் நான் கொலை செய்யப்படலாம்” என்று ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஆதாரம் கைப்பற்றப்பட்டதால் தான் காவல்துறையினர், […]
கடந்த 11 மாதங்களாக கோமாவில் இருந்து நினைவு திரும்பிய இளைஞருக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு குறித்து புரிய வைக்க அவரின் பெற்றோர் திணறி வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் என்ற பகுதியை சேர்ந்த 19 வயதுள்ள இளைஞர் ஜோசப் ப்ளேவில். கடந்த வருடம் மார்ச் மாதம் 1 ஆம் தேதியன்று ஜோசப்பிற்கு வாகன விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். இதனைத்தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]
தமிழகத்தில் நேரிட்ட சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைப்போல் கரூர் அன்பு நகரைச் சேர்ந்த […]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் பகுதியைச் சேர்ந்த காஜா அலாவுதீன். இவரின் 17 வயதான மகன் முபாரக் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் முபாரக் தனது சொந்த ஊரான அறந்தாங்கிக்கு வந்துள்ளார். இந்நிலையில் பைக்கில் சென்ற முபாரக், தனக்கு முன்னால் வேகமாகச் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயற்சித்து தனது பைக்கை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது திடீரென எதிரே வந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சிக்கியுள்ளார், பலத்த காயமடைந்த அவர் சம்பவ […]
சென்னையில் சைக்கிள் மீது கார் மோதி உயிரிழந்த மேனகா குடும்பத்திற்கு 2.37 கோடி இழப்பீடு வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.மகள் மேனகா மரணத்திற்கு 5.85 கோடி இழப்பீடு கோரி வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் தந்தை சுமந்த் வழக்கு தொடுத்தார். 2016ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.