தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Tag: வானிலை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்து வரக்கூடிய ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்தில் பார்த்தோம் என்றால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதே போல வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நேற்றைய தினம் சென்னையில் மாலையில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் […]
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி இருக்கிறது. இதனுடைய முக்கியத்துவம் என்னவென்று பார்த்தால் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது. […]
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நாளை நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, […]
டெல்லியில் வரலாறு காணாத மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. டெல்லியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக டெல்லியின் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே வாகனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. […]
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசான முதல் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கான அறிவிப்பில் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடல் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இதை தவிர மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் […]
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்குதொடர்ச்சிமலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்றும் நாளையும் நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக […]
தமிழகத்தில் திருவாரூர், வேலூர், கடலூர், நாகை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சில மாவட்டங்களில் கனமழை, சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை மற்றும் […]
தமிழகத்தின் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக இன்று சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா […]
தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. தமிழகத்தில் இன்னும் தென்மேற்கு பருவமழை தொடங்காமல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. நேற்று மட்டும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெப்பச்சலனம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இது மக்களுக்கு […]
யாஸ் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்றுள்ளதாகவும் யாஸ் என்ற பெயரிடப்பட்ட இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என […]
வங்கக்கடல் பகுதியில் உருவாகும் யாஷ் புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு-மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ள யாஸ் புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 26 ஆம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த புயல் அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தியாவில் அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதை தொடர்ந்து நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. இதனால் வெப்பநிலை சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் இன்று […]
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. தற்போது சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மேலும் கத்திரி வெயிலின் தாக்கத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு […]
கடலூர் மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதைத் தொடர்ந்து இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கத்திரி வெயில் இன்று தொடங்கி மே 29ஆம் தேதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் […]
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே […]
ஏப்ரல் 26 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, […]
13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சேலம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட […]
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றது. தற்போது வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி […]
அடுத்த 24 மணி நேரத்திற்கு மேல் அடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களில் ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்ப சலனம் சற்று தணிந்து குளிர்ச்சியான நிலை உருவானது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் […]
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த நான்கு நாட்கள் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கு மத்தியில் வெப்பத்தை தணிக்கும் விதமாக தமிழகத்தில் தென்கிழக்கு, தெற்கு அந்தமானையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியானது இரண்டு நாளில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக உள்ளது. இதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்று தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் தெற்கு […]
2021 இல் கோடை எவ்வளவு வெப்பமாக இருக்கும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் சில தென் மாநிலங்களை தவிர இந்த ஆண்டு கோடை காலம் வழக்கத்தைவிட வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரை கோடைகாலம் நிலவும் என்று இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. கோடை காலம் பற்றிய முன்னறிவிப்பு : வடக்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியா என்று வானிலை உட்பிரிவுகள் மற்றும் பிராந்தியங்கள் மற்றும் […]
தமிழகத்தில் மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 4ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்திருக்கிறது. நாளை மறுநாள் வரை தமிழகம் புதுவையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் […]
தமிழகத்தில் 14மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் கடலூரிலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. புதுவையிலும் கடலூரிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்ற ஒரு விஷயத்தை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடலூர், புதுவை, […]
தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் இடி , மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி , மின்னலுடன் கூடிய […]
தென்னிந்தியாவில் 121 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஜனவரி மாதம் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு நாட்டில் 62 ஆண்டுகள் இல்லாத வகையில் ஜனவரியில் அதிக அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென்னிந்தியாவில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 21 ஆண்டுகளில் 22.33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் பதிவாகியுள்ளது. கடந்த 1950 ஆம் ஆண்டு 22.11 டிகிரி செல்சியஸ் […]
பிப்ரவரி -10 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஜனவரி மாதம் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு நல்ல மழை பெய்தது. இதையடுத்து படிப்படியாக மழையின் அளவு குறைந்து சாதாரண நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் அடுத்த […]
பிரிட்டனில் ராட்சத பனிப்புயல் உருவாகி பெரிய பாதிப்பை ஏற்படுத்தயிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டனில் ராட்சத பனிப்புயல் ஒன்று உருவாகயிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பிரிட்டனில் கடும் மழை மற்றும் பனி உருவாகி பெரிய பாதிப்பு ஏற்பட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், “ஸ்காட்லாந்தில் வெப்பநிலை -15 டிகிரி மற்றும் இங்கிலாந்தில் வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளது. இதனால் பிரிட்டனில் […]
கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு தென் தமழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை […]
கடந்த 20 ஆண்டுகளில் தீவிர பருவநிலை மாற்றத்தால் இதுவரை 4,80,000 பேர் இறந்துள்ளனர் கடந்த 20 ஆண்டுகளில் தீவிர வானிலை நிகழ்வு காரணமாக ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளில் அரை மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். புயல்,வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற பருவ நிலை தொடர்பான பேரழிவுகளால் வளரும் நாடுகளில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவுகளால் உலகப் பொருளாதாரத்திற்கு சுமார் 2.56 டிரில்லியன் டாலர் செலவாகியுள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஏற்பட்ட […]
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள […]
பிப்ரவரி மாதத்திலும் தமிழ்நாட்டில் மழை பெய்வது மிக மிக அரிய நிகழ்வு என்று வெதர்மேன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் முடிவடையும் என்று கூறப்பட்டது. அதற்கு பிறகு மழை பெய்து வந்தது. குறிப்பாக ஜனவரியில் தொடங்கி மீண்டும் பரவலாகப் மழை பெய்தது. குறிப்பாக ஜனவரி தொடங்கியதிலிருந்து கடந்த 5ஆம் தேதி இரவு முதல் 14 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சென்னையில் மழை குறைந்த நிலையிலும், […]
தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்த வண்ணமே இருந்து வருகின்றது. கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும் தற்போது வரை மழை பெய்து வருகின்றது. டிசம்பர் மாதம் ஓரளவு மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த ஐந்தாம் தேதி முதல் கன மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் மழை குறைந்த நிலையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மழை அதிக அளவிலேயே காணப்பட்டது குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த […]
தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்த வண்ணமே இருந்து வருகின்றது. கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும் தற்போது வரை மழை பெய்து வருகின்றது. டிசம்பர் மாதம் ஓரளவு மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த ஐந்தாம் தேதி முதல் கன மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் மழை குறைந்த நிலையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மழை அதிக அளவிலேயே காணப்பட்டது குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் முடிக்கவேண்டிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை […]
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், குமரிக்கடல் மற்றும் இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழையும், இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் […]
இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டியுள்ள நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தை பொருத்தவரை தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கன்னியாகுமரி, […]
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று நாள் முழுவதும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நீடித்துள்ள நிலையில், அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னை மற்றும் மதுராந்தகத்தில் 6 […]
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று நாள் முழுவதும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நீடித்துள்ள நிலையில், அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னை மற்றும் மதுராந்தகத்தில் 6 […]
வட கிழக்கு பருவ மழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திரு.புவியரசன், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், தென் கடலோரப் பகுதிகளில் மிதமான மழைக்கும் , நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறினர். தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். […]
கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரேவி புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. தற்போது கடந்த 4 நாட்களுக்கு நாட்களாக தமிழகத்தில் வறண்ட நிலையில் காணப்படுகிறது. மீண்டும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை […]
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் , அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிவர், புரேவி புயலுக்குப் பின்னர் தமிழகத்தில் மழை குறைந்திருந்தாலும், கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர், புரேவி புயலுக்குப் பின்னர் தமிழகத்தில் மழை குறைந்திருந்தாலும், கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, […]