மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் இத்கா ஹில்ஸ் சென்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது குளோரின் வாயு கசிந்துள்ளது. இதனால் பலருக்கு மூச்சு திணறல் மற்றும் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கலெக்டர் அவினாஷ் லாவானியா கூறியதாவது, வாயுகசிவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாய் பேசவின் காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. […]
Tag: வாயு கசிவு
தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எப்போதும் அனுமதி கிடையாது என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருவாரூரில் ONGC நிறுவனத்தால் போடப்பட்டுள்ள குழாயில் 2021ல் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே, அதை நிரந்தரமாக மூடுவது குறித்துதான் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காத. புதிய கிணறு அமைப்பதற்கான நடவடிக்கை இல்லை. மக்களை பாதுகாப்பதற்காக நிரந்தரமாக அந்த கிணறு […]
சென்னை காசிமேடு ஐஸ் பேக்டரியில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் காசிமேடு சூரிய நாராயணன் சாலை, பூண்டி தங்கம்மாள் தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து வாயுக் கசிவை சரி செய்தனர். நல்லவேளையாக இந்த சம்பவத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை.
கர்நாடக மாநிலம் மங்களூரில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நச்சு வாயு கசிந்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்களூரில் உள்ள மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 80 பேர் பணியில் இருந்து வந்த நிலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. அதனால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் வாயுக் கசிவை நிறுத்தும் தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உஸ்பெகிஸ்தானில் வாயு கசிவால் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள நாமங்கள் பகுதிக்கு கிழக்கே ஒரு வீட்டில் வாயு கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ விபத்தினால் அந்த குடியிருப்பில் வசித்து வந்த 3 குழந்தைகள் மற்றும் பெற்றோர் 2 பேர் என மொத்தம் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]